கண்களைக் காக்கும் வைட்டமின் ஏ

Spread the love

வைட்டமின் ரெடினால்

இதன் ரசாயன பெயர் ரெடினால். இதர பெயர்கள் – ரெடினாயிக் அமிலம், பால்மிடேட், ரெடினைல் அசிடேட், ரெடினாய்ட், ரெடினைல் முதலியன.

தன்மைகள்

வைட்டமின் ஏ தண்ணீரில் கரையாது. கொழுப்பு அமிலங்களில் கரையும். எனவே நம் உடலில் சிறிதளவு கொழுப்புஇருந்தால் தான் இந்த வைட்டமினின் முழுப்பலனும் உடலுக்கு கிடைக்கும். மாமிச உணவுகளிலிருந்து கிடைக்கும் வைட்டமின் ரெடினால் எனப்படும். காய்கறி, பழங்களிலிருந்து கிடைக்கும் வைட்டமின் ப்ரோ விட்டமின் எனப்படுகிறது. உடல் நேரடியாக மாமிச உணவுகளிலிருந்து கிடைக்கும் ரெடினாலை (வைட்டமின் ஏ) ஏற்றுக் கொள்கிறது. பழம், காய்கறிகளில் உள்ளவை கரோடினாய்ட்டு என்ற வர்ணம் தரும் பொருட்கள். இந்த கரோடினாய்ட்டில் உள்ளவை கேரோடின். கேரோடின் நான்கு ரூபங்களில் தோன்றுகிறது. அவை ஆல்ஃபா, பீடா, காமா, மற்றும் டெல்டா. இதில் முக்கியமான பிரிவு பீடா கேரோடின். இவை எல்லாம் சேர்ந்து கிடைப்பது மேற்சொன்ன ப்ரோ விட்டமின் ஏ. இதை உடல் எளிதாக ரெடினாலாக மாற்றுகிறது.

பீடா கரோடின் மாமிச உணவுகளிலிருந்து நேரடியாக விட்டமின் ஏ (ரெடினால்) கிடைத்து விடும். ஆனால் காய்கறிகளில் ரெடினாலாக விட்டமின் ஏ கிடைப்பதில்லை. மஞ்சள் நிறமூட்டிகளாக கேரோடின்  ஆக கிடைக்கும். புரோவிட்டமின் ஏ என்கிறோம். இவை காரட்டிலிருந்து எடுக்கப்படுவதால் கேரோடின்  என்ற பெயர் வந்தது. நாலு வகை கேரோடின்-ல் முக்கியமான பீடா கரோடீனை நமது உடல் விட்டமின் வாக (ரெடினாலாக) மாற்றிக் கொள்கிறது.

பீடா கரோடீன் செறிந்த கீரைகள் – பசலைக்கீரை, தண்டுக்கீரை, கொத்தமல்லி, முருங்கைகீரை, கறிவேப்பிலை, புதினா, முள்ளங்கி இலைகள் முதலியன. பழங்கள் – மாம்பழம், பப்பாளி. இதர காய்கறிகள் – கேரட், பரங்கிக்காய்.

பசுமையாக உள்ள “இலை, கீரை”களில் பீடா – கரோடீன் அதிகமிருக்கும். உதாரணமாக முட்டைக்கோஸின் பச்சை வெளி இலைகளில் உள்ளிருக்கும் வெள்ளை இலைகளை விட பீடாகரோடின் அதிகமிருக்கும்.

வைட்டமின் ஏ தரும் பயன்கள்

இதன் மிக முக்கிய பயன் – கண்களை பராமரித்து காப்பது. வண்ணங்களை பிரித்தறிய கண்களுக்கு உதவுகிறது. பார்வையை கூர்மையாக்குகிறது. கண்களில் உள்ள ஒளி கூச்சமுடைய நரம்பு செல்களாக வைட்டமின் ஏ உருவெடுத்து, கண் பார்வையை சீராக வைத்திருக்க உதவுகிறது. மங்கலான வெளிச்சத்திலும், இருளிலும் பார்வை தெரிய உதவுகிறது.

சர்மத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. முகப்பரு, கொப்புளங்கள், சில வகை சர்ம புற்றுநோய்கள் முதலியவற்றுக்கான ரெடினாய்டுகள் மருந்துகளில் ரெடினால் முக்கியமான பாகமாக இருக்கிறது.

நுரையீரல், சிறுநீரகம், சிறுநீரகப் பாதை ஆகியவற்றின் லைனிங்கை பாதுகாக்கிறது.

தொற்றுநோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது. உடலின் நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கிறது.

உண்ணும் உணவு ஜீரணிக்க உதவுகிறது.

ரத்தத்தில் கொழுப்பு அளவை கட்டுப்படுத்துகிறது. இதய நோய், பக்கவாதம், போன்ற பாதிப்புகள் வராமல் தடுக்கிறது.

ஈறுகள், பற்கள், கைகால் நகங்கள், தலைமுடியை வலுவாக்குகிறது. எலும்பு, தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.

ஒரு நாளுக்கு உட்கொள்ள வேண்டிய அளவு

ஆண்கள் – 700 லிருந்து 900 மைக்ரோகிராம்

கர்ப்பிணி பெண்கள் – 1300 மைக்ரோகிராம் உச்சவரம்பு – 3000 மைக்ரோகிராம்.

வைட்டமின் குறைந்தால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்

மாலைக்கண் நோய் (சாயங்காலம் இரவில் கண் சரியாக தெரியாது), கண்கள் வண்ணங்களை பிரித்தெடுக்க முடியாமற்போதல், பார்வை கோளாறுகள் முதலியவை ஏற்படும். தீவிர கண் பாதிப்புகள் உண்டாகலாம். இவற்றால் கண்பார்வை பறி போகும் அபாயம் ஏற்படும். கண் விழிகள் ஈரப்பசையை இழந்து விடும்.

பின்னப்பட்ட, குறைந்த உடல் வளர்ச்சி.

சர்ம பாதிப்புகள், வறண்ட தோல், முடி, பரு, கொப்புளங்கள் உண்டாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, அடிக்கடி சளி, ஜுரம்.

பசியின்மை, வயிற்றுப்போக்கு, களைப்பு.

வைட்டமின் ஏ அதிகமானால்

வாரத்தில் 3 (அ) 4 முறை வைட்டமின் உட்கொண்டால் போதுமானது. அதுவும் டாக்டரின் சிபாரிசு படி உட்கொள்ள வேண்டும்.

அதிகமானால் வரும் பிரச்னைகள்

அபரிமிதமாக வைட்டமின் வை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் அது விஷமாக மாறும் அபாயம் உள்ளது. உடலில் சேர்ந்து விடும் நச்சுப் பொருட்களால், எரிச்சல், வாந்தி, பிரட்டல் உண்டாகும். தோலில் வெடிப்பு, நமைச்சல், அரிப்பு ஏற்படலாம். தலைவலி, மூட்டு வலிகள் உண்டாகும். அதிக விட்டமின் ஏ, விட்டமின் டி யை பாதிப்பதால், எலும்பு முறிவுகள் அடிக்கடி ஏற்படும். பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்ச்சி பாதிக்கப்படும். தலைமுடி உதிரும். கல்லீரல் பாதிப்படையும்.

ஒரு ம்யூ கிராம் பீடா கரோடின், 1/2 ம்யூகிராம் ரெடினாலை கொடுக்கும். இதர வகை கரோடின்கள் இன்னும் குறைவாகவே ரெடினாலை தரும்.

உண்மையில் சராசரியாக எடுத்துக் கொண்டால், 1 அளவு ரெடினாலுக்காக 4 மடங்கு பீடா – கரோடின் எடுத்துக் கொள்ள வேண்டும்! கர்பிணிகளுக்கும், பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் (வளர்ச்சிக்காக) அதிக அளவு விட்டமின் ஏ தேவைப்படும். இதற்கு எளிமையான வழி கீரைகளை (தண்டுக் கீரை போன்ற) உணவில் தினசரி சேர்த்துக் கொள்வது தான். பெரியவர்கள் தினமும் 50 கிராமும், பள்ளி செல்லும் சிறுவர்கள் (6 வயது வரை) 20 கிராமும், கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மீன் எண்ணையையும், ‘சிந்தெடிக்மீன் எண்ணை¬யும், டாக்டரின் ஆலோசனைப்படி உபயோகிக்கலாம். தினமும் 100 கிராம் மாம்பழம், பப்பாளிப் பழம் சாப்பிடலாம்.

பால், வெண்ணையிலிருந்து கிடைக்கும் விட்டமின் ஏ யின் அளவு, பாலை கொடுத்த மாடு உண்ணும் புல்லில் உள்ள பீடா – கரோடின் அளவை பொருத்தது! வெண்ணையை காய்ச்சி நெய்யாக மாற்றும் போது சூட்டில், 25% விட்டமின் அழிந்து விடும். எருமைப்பாலிலிருந்து கிடைக்கும் நெய்யை விட பசுமாட்டின் நெய்யில் தான் விட்டமின் அதிகம்.

மீன் எண்ணைகள், செயற்கை விட்டமின் ஏ

முன்பெல்லாம் காட் லிவர் ஆயில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது நமது அரபிக்கடல், வங்காள விரிகுடா கடல்களில் அபரிமிதமாக இருக்கும் சுறாமீன்களிலிருந்து மீன் எண்ணை தயாரிக்கப்படுகிறது. இதில் காட் லிவர் ஆயிலை விட அதிக விட்டமின் ஏ உள்ளது.

செயற்கை விட்டமின் ஏ எலுமிச்சை புல் எண்ணையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணை பெரும்பாலும் மருந்து தயாரிப்பாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.

விட்டமின் ஏ இழப்பு

அதிக சூடு, வெளிச்சம், தாமிர (அ) இரும்பு பாத்திரங்களில் சமைப்பது, விட்டமின் ஏ வை அழித்து விடக் கூடும். காய்கறிகளை புளித் தண்ணீரில் கழுவினாலும் விட்டமின் ஏ இழப்பு ஏற்படலாம்.

உணவு நலம் ஜுன் 2011

கண்களைக், காக்கும், வைட்டமின், , வைட்டமின்ஏ, ரெடினால், ரெடினாயிக் அமிலம், பால்மிடேட், ரெடினைல் அசிடேட், ரெடினாய்ட், ரெடினைல், தன்மைகள், கொழுப்பு அமிலம், கொழுப்பு, வைட்டமின், , ப்ரோ, விட்டமின், , கரோடினாய்ட்டு, கேரோடின், ஆல்ஃபா, பீடா, காமா, டெல்டா, பீடா கேரோடின், ப்ரோவிட்டமின்ஏ, பீடா கரோடின், பீடாகரோடீன், செறிந்த, கீரைகள், பசலைக்கீரை, தண்டுக்கீரை, கொத்தமல்லி, பழங்கள், மாம்பழம், பப்பாளி, பீடாகரோடீன், வைட்டமின் ஏ தரும் பயன்கள், கண்கள், சர்மம், முகப்பரு, கொப்புளங்கள், புற்றுநோய்கள், ரெடினாய்டுகள், மருந்துகள், நுரையீரல், சிறுநீரகம், சிறுநீரகப் பாதை, லைனிங், நோய்தடுப்புசக்தி, இதய நோய், பக்கவாதம், ஈறுகள், பற்கள், கைகால் நகங்கள், எலும்பு, வைட்டமின், , குறைந்தால், உடலில், ஏற்படும், பாதிப்புகள், மாலைக்கண் நோய், பார்வை கோளாறுகள் கண் பாதிப்புகள், உடல் வளர்ச்சி, சர்ம பாதிப்புகள், வறண்ட தோல், முடி, பரு, கொப்புளங்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, சளி, ஜுரம், பசியின்மை, வயிற்றுப்போக்கு, களைப்பு, வைட்டமின் ஏ அதிகமானால், டாக்டர், அதிகமானால் வரும் பிரச்னைகள், நச்சுப் பொருட்கள், எரிச்சல், வாந்தி, பிரட்டல், தோலில் வெடிப்பு, நமைச்சல், தலைவலி, மூட்டு வலிகள், விட்டமின், , விட்டமின், டி, எலும்பு முறிவுகள், கல்லீரல் பாதிப்படையும், கரோடின்கள், பீடா கரோடின், கர்பிணிகள், விட்டமின்ஏ, டாக்டர், மாம்பழம், பப்பாளிப் பழம், மீன் எண்ணைகள், செயற்கை, விட்டமின், , மருந்து, விட்டமின், , இழப்பு,


Spread the love