வைரஸ் காய்ச்சல்

Spread the love

நமக்கு பொதுவாக பிடித்த காலம் எது என்று கேட்டால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே மழைகாலம் என்று தான் கூறுவார்கள். ஏனென்றால், அனைவருக்குமே நீரில் நனைதல் என்பது மிகவும் பிடித்த விஷயம். நனைந்த பிறகு வரும் நோய்களை பற்றி நாம் நினைத்து பார்ப்பதே இல்லை.

இவ்வாறு நனைவதன் மூலம் பல நோய்கள் நம்மை வந்து தாக்குகின்றன. அதில் முக்கியமான நோய், வைரஸ் காய்ச்சல் ஆகும். இதை பற்றி விரிவாக பார்ப்போம்.

முதலில் நாம் வைரஸ் காய்ச்சல் பற்றி நன்கு தெரிந்து கொள்வோம். இந்த காய்ச்சல் ஏற்பட முக்கிய காரணம் காற்று, தண்ணீர், கொசுக்கள் போன்றவைகள் மூலமே பரவுகின்றன. இயல்பாகவே வைரஸ் நம் உடலுக்குள் சென்ற ஒரு வாரத்திற்குள் வைரஸ் தன் தாக்கத்தை காட்ட ஆரம்பித்துவிடும்.

அறிகுறிகள்

வைரஸ் காய்ச்சல் வந்தவர்களுக்கு, கடுமையான உடல் வலி, அரிப்புகள் மற்றும் தலைவலியை உணர முடியும். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைய தொடங்கிவிடும்.

வைரஸ் காய்ச்சல் தாக்கிய உடன் சிலருக்கு நரம்பு மண்டலம் கூட பாதிக்க பட கூடும். இதன் காரணமாக பெரிய தீர்க்க முடியாத பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதனால் மருத்துவரின் பரிந்துரையின் படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும். வைரஸ் காய்ச்சல் வந்து விட்டாலே உடல் வறட்சியடையாமல் தண்ணீரை குடித்து கொண்டே இருக்க வேண்டும்.

சாப்பிட வேண்டிய உணவுகள்   

ஊட்டச்சத்துக்கள் சத்துகள் அதிகம் உள்ள நவதானியங்களால் ஆன சப்பாத்தி காய்ச்சலின் போது சாப்பிடலாம், சப்பாத்தியை சாப்பிடுவதனால் விரைவில் செரிமானம் ஆகி விடும். காய்ச்சலின் போது செய்யும் சப்பாத்தியில் எண்ணெய் மற்றும் நெய் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது.

சாதத்தை கஞ்சி போல் செய்து சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனை ஏற்படாமல் இருப்பதோடு உடலில் இருந்து அதிக நீர்சத்துகளை வெளியேற்றும்.

காய்ச்சல் ஏற்படுவதற்கு சளி மற்றும் ஜலதோஷம் போன்றவையும் காரணம் தான். அதற்கு, தக்காளி சேர்த்த சூப்பை சுடசுடவென  தினமும் ஒரு வேளை குடித்துவந்தால்  போதும் சளி மற்றும் ஜலதோஷம் காணாமல் போய்விடும்.

காய்ச்சல் இருக்கும் போது மாலை நேரத்தில் உருளைகிழங்கை நன்கு வேகவைத்து அதில் சிறிது மிளகு தூள், கிராம்பு தூள் சேர்த்து சாப்பிட்டு வர காய்ச்சல் காணாமல் போய் விடும்.

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தாலே போதும் நம் உடல் எப்போதும் இரும்பு போன்று இருக்கும். ஆப்பிளில் அதிக நோயெதிர்ப்பு சக்தி, வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த அணுக்களின்  அளவையும் அதிகரிக்கும். உடலில் உள்ள பாக்டீரியாக்களை சீக்கிரம் அழித்து விடும்.  

காய்ச்சல் நேரத்தில், பானங்கள் மற்றும் பழச்சாறு அதிகமாக குடிக்க வேண்டும். இதன் காரணமாக உடலில் ஏற்படும் வறட்சி நீங்கி, குளிர்ச்சி அடையும்.

காய்ச்சலின் போது வேக வைத்த முட்டையை சாப்பிட வேண்டும். இதனால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்கிறது. நோய்களை எதிர்த்து போராடும் வெள்ளை மற்றும் சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

வைரஸ் காய்ச்சலின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்

தினமும் நாம் பால் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருப்போம். ஆனால் வைரஸ் காய்ச்சல் இருக்கும் போது மட்டும் பாலை தவித்துவிட வேண்டும். ஏனென்றால், பாலை குடிக்கும் போது நுரையீரலில் சளி உற்பத்தியை அதிகரித்து. மூச்சு விடுதலை கடினமாக்குகிறது, மேலும் மார்பு எரிச்சல் மற்றும் மூக்கு அடைப்பையும் ஏற்படுத்துகிறது.

வைரஸ் காய்ச்சலின் போது இறைச்சி சாப்பிடுவதை தவித்தல் நல்லது. ஏனென்றால், இந்த நேரத்தில் நம் உடலில் செரிமானம் வழக்கம் போல் இருக்காது. இறைச்சி ஜீரணிக்க எளிதானது அல்ல. இதை ஜீரணிக்க நம் உடல் அதிக சிரமப்படும். இறைச்சியை சாப்பிடுவதால், அதிக வேலை செய்ய வேண்டியிருக்கும்.

காரம் அதிகமாக உள்ள உணவுகளை வைரஸ் காய்ச்சல் உள்ள போது, சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது. மற்றும் எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அப்போது நம் செரிமானம் நன்றாக இருக்கும்.

சீஸ் மற்றும் பாலாடைக்கட்டியை தவிர்த்தல் நல்லது. இவற்றை உட்கொண்டால் நுரையீரலில் அதிக சளி உற்பத்தியாகி மார்பு எரிச்சலை ஏற்படுத்தும்.

எனவே இது போன்ற உணவுகளை தவித்து விட்டு, உடலுக்கு சத்துகளை தரும் உணவுகளை சாப்பிட்டு வரலாம். நாமும், நம்மை சுற்றி உள்ள இடத்தையும் சுத்தமாக வைத்துகொண்டாலே நம்மை எந்த நோயும் அண்டாது.

மேலும் தெரிந்து கொள்ள…


Spread the love