இதன் அருமை தெரியாததினால் தான் நன்மைகளை இழந்து வருகிறோம்.

Spread the love

எல்லா பழ கடைகளிலும் கிடைக்ககூடிய பழம் தான் இந்த விளாம்பழம். ஆனால் இதன் பயன் மிகவும் குறைவு தான். இந்தியாவில் சில நிகழ்ச்சிகளில் தாம்பூலத்திலும் இந்த பழம் இடம் பெறும். விளாம்பழத்தில் வைட்டமின் ஏ, b1, b2 சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து, போன்றவை இருக்கிறது. இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதோடு, உடல் வளர்ச்சியை தூண்டி இரத்தத்தில் கலக்கிற நச்சு கிருமிகளை அழித்துவிடும்.குறிப்பாக நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் வெல்லத்தோடு விளாம்பழத்தை பிசைந்து சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பெலனடைந்து, நரம்பு தளர்ச்சி குணமாகும்.

குழந்தைகளின் ஞாபக சக்தியை தூண்டவும், அவர்களின் எழும்புகள் உறுதியடையவும் விளாம்பழம் உதவுகிறது.அதோடு பித்த தலைவலி, பித்த வாந்தி, கண்பார்வை குறைவு, வாயில் ஏற்படும் கசப்புத்தன்மை, இளநரை, ருசியின்மை போன்ற பிடிவாத பிரச்சனைக்கு விளாம்பழம் சாப்பிட்டு வந்தால் சிறந்த தீர்வு கிடைக்கும்.அல்சரால் அவதிப்பட்டு வருபவர் தினமும் ஒரு விளாம்பழம் சாப்பிட்டு வந்தால் வயிற்றிலும், குடலிலும் ஏற்பட்டிருக்கும் புண்களை சரிசெய்து அல்சர் குணமாகும், அதுமட்டும் இல்லாமல் வாய் புண்னையும் குணமாக்கும்.

விளாம்பழம் அஜீரண கோளாறுகளை போக்கி, வாயு பிரச்சனை ஏற்படாமல் இருக்க உதவுகிறது. அதோடு பற்களுடைய வேர்களுக்கும், ஊட்டம் அளித்து பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றது.எனவே விளாம்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மூட்டுகளில் ஏற்படும் வலி, தசைபிடிப்பு, உடலில் தோன்ற கூடிய ஊசி குத்துவது போன்ற உணர்வு, அதிகப்படியான வியர்வையை கட்டுப்படுத்தி ஒரு ஆரோக்கியமான சங்கிலி சுழற்சியை கொடுக்க விளாம்பழம் அடிக்கடி சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

ஆயுர்வேதம்.காம்


Spread the love