பெண்களின் ரகசிய நோய்கள்

Spread the love

பெண்களுக்கு வரும் தொற்று நோய்கள்

தொற்றுநோய்களும், வெள்ளைபடுதலும்

யோனியில் அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் (Vaginal candidiasis) கெட்டியாக, நாற்றமில்லா, தயிர் போன்ற வெண் திரவம் வருதல், அரிப்பு, சிறுநீர் போகையில் எரிச்சல், புண்ணாகுதல், உடலுறவின் போது வலி, இவை அறிகுறிகள் ஆகும். பெண்ணுறுப்பில் சாதாரணமாக இருக்கும் Candida Albicans எனும் காளானின் (Yeast) அதிக வளர்ச்சியால் விளையும் பொதுவான பெண்ணுறுப்பின் தொற்று பாதிப்பு தான் Vaginal candidiasis. பேக்டீரியா வாஜினோஸிஸ் (Bacterial Vaginosis) – நாற்றமுடைய, நீர்த்த, மஞ்சள் அல்லது வெள்ளைநிற திரவம் வெளியேறுதல், உடலுறவின் பின் நாற்றம் அதிகரித்து, அரிப்பும் எரிச்சலும் ஏற்படும்.

சாலமைடியல் தொற்று (Chlamydial Infection) – இது ‘சாலமைடியல்’ என்ற பேக்டீரியாவால் வரும் தொற்றுநோய். இந்த பாக்டீரியா, வைரஸ் போலவே சிறியது. Gram – Negative வகையை சேர்ந்தது. இதன் அறிகுறிகள் – மஞ்சள் நிற, சளி போன்ற திரவம் வெளியேறுதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கையில் வலி, அசாதாரணமான இரத்தப் போக்கு இவைகளாகும்.

டிரைகோமனியாசிஸ் வாஜினாலின் -( Trichomanasis Vaginalis) அரிப்பு, சிறுநீர் கழிக்கையில் வலி, அதிகமாக பச்சை மஞ்சள் நிற, நுரையுடன் கூடிய, மீன் நாற்றமுடைய திரவப்போக்கு இவை அறிகுறிகள். இந்த நோய்களில் மிகவும் அதிகமாக காணப்படுவது (Vaginal candidiasis).

வெள்ளைபடுதல்

இந்த யோனியிலிருந்து வெளியேறும் ஒரு திரவம். இது யோனி காய்ந்து விட்டால் ஈரத்துடன் இருக்க உதவும், தவிர இன்பெக்ஷனிலிருந்து பாதுகாக்கும். வெளியேறும் திரவம், வெள்ளை நிறத்திலும், துர்வாடை வீசாமலிருந்தாலும் எல்லாம் முறைப்படி சரியாக இருக்கிறது என்று அர்த்தம். ஆனால் இந்த திரவம் துர்வாடை வீசினால், கெட்டியாக இருந்தால் மஞ்சள் நிறமாகவோ அல்லது கருப்பாக இருந்தால், அரிப்பு அல்லது எரிச்சல் இருந்தால் இன்ஃபெக்ஷன் (Infection) ஏற்பட்டிருக்கலாம். சோகையான, மெலிந்த பலவீனமான பெண்களுக்கு இது அடிக்கடி நேரிடலாம். சுகாதார குறைவும் ஒரு காரணம்.

பெண்களில் இனப் பெருக்க உறுப்புகளில் சுரப்பு என்பது இயற்கையான ஒன்றேயாகும். பெண்கள் இயற்கையான இயல்பான சுரப்பிற்கும் வெள்ளைப்படுதலுக்கும் உள்ள வித்தியாசங்களை உணர்வது அவசியம் எவ்வாறு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவுகளில் உடலில் வியர்வை உண்டாகின்றதோ அதே போல பெண்களின் பெண் உறுப்பில் சுரப்பு ஏற்படும்.

வெள்ளைப்படுதலுடன் பலவீனம், இடுப்பு வலி, முதுகு வலி, மூட்டு வலி, மற்றும் உடல் சோர்வு சேர்ந்தே தோன்றும். இவை இருந்தால் மட்டுமே அது வெள்ளைப்படுதலாகும்.

பல சமயம் அரிப்புடன் சேர்ந்து இருக்கும். துர்நாற்றம் வீசும் இதனால் திருமணமானவராக இருந்தால் கணவருக்கும் ஆணுறுப்பில் அரிப்பு ஏற்படும். இதற்கு அடிப்படை காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் TRICHOMONAS VAGINALIS என்ற பூசணம் பெண் உறுப்பில் வளர்வதேயாகும். இந்த பூசனம் தொற்றை உண்டாக்கும். அரிப்பு இல்லாத வெள்ளைப்படுதல், கர்பமாக இருக்கும் பொழுதும் கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் பொழுதும் நீரிழிவு நோய் உள்ள போதும் கூட ஏற்படும்.

அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல்

பெண்ணுறுப்பில் சாதாரணமாக இருக்கும் ‘கான்டிடா அல்பிகான்ஸ்’ (Candida Albicans) எனும் காளானின் (Yeast) அதிக வளர்ச்சியால் விளையும் பொதுவான பெண்ணுறுப்பின் தொற்று பாதிப்பு தான் (Vaginal candidiasis).

இது எதனால் ஏற்படுகிறது?

குறைந்த நோய் எதிர்ப்பு, சக்தி பலவீனமான உடல் ஆரோக்கியம்.இந்த காளான் வகை தொற்றுக்கிருமிகள் சளி, காய்ச்சல் முதலியவற்றுக்காக சாப்பிடும் Anti – Biotic மாத்திரைகளாலும் அதிகமாக வளர்ச்சி அரிப்புடன் கூடிய வெள்ளைப்படுதல் உண்டாகிறது.

கர்ப்பம் அல்லது கருத்தடை மாத்திரைகளால் ஹார்மோன் அளவுகள் மாறி இந்த காளான்கள் வளர சரியான சூழ்நிலை உண்டாகிறது.

நீரிழிவு வியாதி, உடல் பருமன். இந்த Candida Albicans காளான்கள் சாதாரணமாக குடலிலும் (Intestine) தோலிலும் இருக்கும். இங்கிருந்து இவை யோனிக்கு பரவும். இறுக்கமான, ஈரத்தை உறிஞ்சாத உள் ஆடைகள் காளானின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். சுகாதார குறைவு, வயிற்றில் பூச்சிகள்.

நோயின் அறிகுறிகள்

பெண்ணுறுப்பில் அரிப்பு, எரிச்சல்

யோனிலிருந்து அடர்த்தியான, தயிர்போன்ற வெள்ளை திரவ வெளியீடு

புண்படுவது – தேய்ப்பதினாலும், சொரிவதனாலும் அதிகரிக்கும்

எரிச்சல்/ சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு

உடலுறவின் போது வலி.

சிகிச்சை முறைகள்

நீண்ட விரல் நகங்களால் சொரியவோ அல்லது தேய்க்கவோ செய்யாதீர்கள்.

மிகச் சூடான நீரினால் கழுவ வேண்டாம்.

குளிக்கும் டவலால் கடுமையாக துடைத்து கொள்ளாதீர்கள்.

உடலுறவை சிகிச்சை பெறும் போது தவிர்க்கவும்.

ஆயுர்வேத மருந்துகள்

அசோகரிஷ்டம், திராக்ஷாதி சூரணம், அசோக்ருதம், அசோகாதிவடி, பிரதராந்தக ரஸ போன்றவை.

இதர குறிப்புகள்

உணவு முறைகள்

வெள்ளைப்படுதல், நோய் (Leucorrhoea) மற்றும் றிவிஷி – கொழுப்பு சத்து உணவுகள் சர்க்கரை இவைகளால் Pre – menstrual – syndrome உண்டாகிறது. அதுவும் உங்கள் உடல் பருமனாக இருந்தால் இந்த உணவு வகைகளை தவிர்க்கவும். நிறைய பழங்கள், காய்கறிகள், தானியங்கள், சத்துள்ள பயறு வகைகள் சாப்பிடவும். தினமும் 6 லிருந்து 8 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். அரிப்புடன் கூடிய வெள்ளைப்படுதல் நோய்க்கு (Vagina candidiasis). வாசனை அதிகமுள்ள சோப்புக்கள், குளிப்பதற்காக உபயோகிக்காதீர்கள். மன உளைச்சலை குறைக்கவும். உடற்பயிற்சி உதவும். இந்த வியாதி உடலுறவினால் பரவும் நோயல்ல. இருந்தாலும் உடலுறவை தவிர்க்க முடியாவிட்டால் கணவரிடம் தெரிவிக்கவும். உடலுறவினால் Vaginal candidiasis அதிகரிக்கவும். கணவருக்கும் தொற்று பாதிப்பு வரலாம். உடலுறவை தவிர்ப்பது நல்லது.

வீட்டு மருத்துவம்

சிறிது கடுக்காய் நெல்லிக்காய் தாண்றிக்காயை சம அளவு எடுத்துப் பொடி செய்து ( திரிபலா சூரணம்) அதனை 2 லிட்டர் தண்ணீரில் காய்ச்சி வைத்துக் கொண்டு மிதமான சூட்டில் பெண் உறுப்பை கழுவி வந்தால் வெள்ளைப்படுதல் மறையும்.

மிகவும் குளிர்ந்த நீரில் 2 முறை தினசரி கழுவி வர வெள்ளைப்படுதல் குறையும்.

சிறிது வெந்தயத்தை எடுத்து தூளாக்கி டீ போடுவது போல கஷாயமாகப் போட்டு காலை வெறும் வயிற்றில் தினசரி பருகி வர வெள்ளைப்படுதல் மறையும்.

லோத்ரா பட்டையை நீரிலிட்டுக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு அந்த நீரால் காலை மாலை என இரு வேளை உறுப்பைக் கழுவி வர வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.

ஆயுர்வேத மருத்துவம்

வெள்ளைப்படுதலுக்கு ஆயுர்வேத மருத்துவ முறையில் அசோகப் பட்டை லோத்ரா பட்டை போன்றவை சிறந்த பயன் தரக் கூடியவை. இவை சேர்ந்த பல ஆயுர்வேத தயாரிப்புகள் உள்ளன. அவற்றை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உபயோகித்து சிறந்த பலனைத் தரும். ஆயுர்வேத முறையில் மட்டுமே வெள்ளைப்படுதலை நிரந்தரமாக போக்கிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யா

மேலும் தெரிந்து கொள்ள…


Spread the love