பச்சைக் காய்கறிகளும், உடல்நலமும்

Spread the love

நல்ல ஆரோக்யமான வாழ்வுக்கு காய்கறிகளைப் பச்சையாக சாப்பிடலாமா அல்லது சமைத்து சாப்பிடலாமாவென்று விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து உண்பதைவிட சமைத்தும், பச்சையாகவும் சாப்பிடுதல் நல்லது. இரண்டும் நல்ல சரியான விகிதத்தில் இருந்தால் உடல்நலம் பெருகும்.

இவ்விகிதாசாரத்தையெப்படி கணக்கிடுவதென்பது கடினம்தான். இருந்தாலும் நாம் சாப்பிடும் காய்கறிகளில் பாதியளவு (50%) பச்சையாகவேயிருப்பது நல்லதென உணவுக் கட்டுபாடு நிபுணர்கள் சொல்கின்றனர். இவைகள் சாலட் அல்லது சாறு (Juice) வடிவத்தில் இருக்கலாம்.

உதாரணமாக & பிராக்ளி, சலரி, வெள்ளரிக்காய், காரட், பட்டாணி, போன்றவைகள் பச்சையாகவே உணவில் சேரலாம். அதில் கொழுப்பு சேர்க்கப்படாமலிருப்பது உத்தமம்.

வேக வைத்து காய்கறிகளைச் சாப்பிடுவதால் நமக்கு அதிலுள்ள வைட்டமின், தாது சத்துக்கள் கிடைப்பதில்லை. வேக வைக்கும்பொழுது அவைகள் அழிந்துவிடுகின்றன. ஒரேயடியாக பச்சைக் காய்கறிகளை சாப்பிடுவதும் நல்லதல்ல. உதாரணமாக காரட்டை, தக்காளியை வேக வைத்தால் கரோடின் (Carotene) வைட்டமின் ஏ சத்து அதிகமாகக் கிடைக்கும். தக்காளியில் லிகோபினே (Lycopene) சத்து இருப்பதால் சிகப்பு கலரைத் தருவதோடு, ஆண்டிஆக்சிடன்ட் (Antioxidant) குணத்தைத் தருகிறது. இதன் அளவு வேக வைத்தவுடன் அதிகமாகிறது. அதிக நார்ச் சாத்து நிறைந்த முட்டைக் கோஸ், காலிப்ளவர், பச்சையாக சாப்பிட்டால் வயிரை உப்ப வைக்கும், வயிற்று வலியை உண்டாக்கும். வேக வைத்தால் இவைகள் நீக்கப்படும்.

பொதுவாக, சமைத்து, நன்கு வேக வைத்து உண்டால் ருசியோடு சாப்பிட முடியும். ஆனால், எவ்வளவு நேரம் வேக வைக்கிறோமென்பது மிக முக்கியம். ஏனென்றால், ரொம்ப நேரம் வெந்தால் சத்துக்கள் அழிந்து விடும்.

நம் நாட்டில் அதிகமாகவே வேக வைக்கும் பழக்கம் இருக்கிறது. உதாரணமாக & கிரேவிகள் வேகும்பொழுது சத்துக்கள் அழிக்கப்படுகின்றன. ஆனால், சீன வழக்கப்படி, லேசாக ப்ரை செய்து, சீசன்படுத்தினால் நல்லது (Stir fry and season) அடுப்பில் ரொம்ப நேரம் இல்லாமலிருந்தாலே காய்கறிகள் சத்துப் பொருட்களை இழக்காது. நீராவியில் வைத்துயெடுத்தல், ரோஸ்ட் பண்ணுதல் நல்லது.

எவ்வளவு நேரம் வேக வைக்கலாம்? ஸ்பினாஷ் ஒரு நிமிடத்திற்கு மேல் அடுப்பிலிருக்கக் கூடாது. கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். சிறிது நேரம் வேக வைத்தால் போதும். சூப் வேண்டுமென்றால் தண்ணீர் அதிகம் சேர்க்கலாம். காய்கறிகளை நறுக்கி ரொம்ப நேரம் வெளியில் இருக்கக் கூடாது. சூரிய வெளிச்சம், காற்று அதிகம் பட்டால் சத்துக்கள் மறைந்துவிடும்.

நறுக்கியவுடன் காய்கறிகள் அடுப்புக்குச் செல்ல வேண்டும். சூடாக சாப்பிட்டால் மிகவும் நல்லது.

முக்கிமான டிப்ஸ்:

செடிகளிலிருந்து பறித்தவுடன் சாப்பிட்டால் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். கடித்துச் சாப்பிடவும். இருபது முறை நன்கு மென்று சாப்பிடவும். (Chew 20 times each bite)

சாலட் சாப்பிட்டால் எண்ணெய் சேர்க்கவும். கார்டினாட்சை எளிதில் இரத்தத்தில் கலக்கச் செய்யும்.

காய்கறிகளை ரொம்பவும், சதைப் பற்று தெரியும்படி நறுக்க வேண்டாம். சத்துக்கள் குறைந்துவிடும்.

வேக வைப்பதைவிட, ஆவியில் வைத்தால், பி, சி, வைட்டமின்கள் தங்கும்.

ரொம்பநேரம் தண்ணீரில் காய்கறிகள் இருக்க வேண்டாம். வைட்டமின் சி, போய்விடும்.

பலவிதமான காய்கறிகள், பல நிறங்களில், உண்டால் ஆன்டிஆக்சிடண்ட் குணம் கிடைக்கும். இதய நோய்கள், கான்சர், அல்சைமர் வியாதிகள் எளிதில் அண்டாது.


Spread the love