கேரட், தக்காளி வளர்சிதை மாற்றம் துரிதமாக நடைபெற உதவும் காய்கறிகள்.
பீட்ரூட், சிட்ரஸ் பழங்கள், தர்பூசணி போன்றவை உடலின் கொழுப்பை கரைக்கின்றன.
நெய்யை தவிர்க்காதீர்கள். சிறிதளவு பசுநெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உணவைத் தவிர நிறைய இளம்சூடான சுத்தமான தண்ணீர், கொதிக்க வைத்து இளம் சூட்டுக்கு ஆறின பால் இவற்றை நாள் முழுவதும் குடித்து வரலாம்.
இதர டிப்ஸ்
இளம் சூடான நல்லெண்ணையால் உடல் மசாஜ் செய்து கொண்டு குளிப்பது நல்லது.
ஒரு பருத்திப் புடவை எடுத்து வயிற்றை சுறஙற இறுக்கமாக கட்டிக் கொண்டால் வாயு சரிநிலையில் இருக்கும். வயிறு சாதாரண நிலைக்கு திரும்பும். இதை 42 நாட்கள் செய்யவும். தற்போது இதற்கென பிரத்யேக பெல்ட்டுகள் கிடைக்கின்றன.
ஆயுர்வேத திரிபால கஷாயம் உடல் எடை குறைய உதவும். 20 கிராம் த்ரிபாலா சூரணத்தை 200 மி.லி. நீருடன் கலந்து, நீர் 50 மி.லி. அளவுக்கு சுண்டும் வரை காய்ச்சவும். வடிகட்டி தேன் சேர்த்து பருகவும்.
கடுக்காய் வயிற்றை சுத்திகரிக்கும் குணமுடையது. உடல் கொழுப்பையும் குறைக்கும். கடுக்காய் தோலின் பொடியை 1 டீஸ்பூன் எடுத்து வெந்நீருடன் படுக்கும் முன்பு எடுத்துக் கொள்ளவும்.
கடைசியாக, லேசான உடற்பயிற்சி எடை குறைக்க மிகவும் உதவும். இதை டாக்டரின் ஆலோசனைப்படி மேற்கொள்ளவும்.