தேவை
மஷ்ரூம்-15
கேரட்-1
பீன்ஸ்-10
உருளைக்கிழங்கு-1
குடமிளகாய்-1
பெரிய வெங்காயம்-1
தக்காளி-2
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி-11/2டீஸ்பூன்
மஞ்சள் பொடி-1/2டீஸ்பூன்
சீரகப் பொடி- 1டீஸ்பூன்
உப்பு, எண்ணெய்-தேவையான அளவு
ஃப்ரஷ் Cream -1டே.ஸ்பூன்
செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தக்காளியை அரைத்துக் கொள்ளவும். காய்கறிகளையும், மஷ்ரூமையும் ஒரே மாதி 1 சென்டி மீட்டர் துண்டுகளாக நறுக்கவும். குக்கரில் எண்ணெய் சூடாக்கி அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு எல்லா காய்கறிகளையும் ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கி கடைசியாக மஷ்ரூமையும் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியவுடன் மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, சீரகப் பொடி போட்டு வதக்கி தக்காளி விழுது, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து 1 சத்தம் வரும் வரை வேக விடவும். அடுப்பை நிறுத்தி ஸ்டீம் – ஐ வெளியேற்றி விடவும். மிகுதியான ஸ்டீம் குக்கரில் இருந்தால் காய்கள் குழைந்து விடும். கடைசியாக ஃப்ரஷ் சிக்ஷீமீணீனீ போட்டு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
கார்ன் மஷ்ரூம் மசாலா
தேவை
உதிர்த்த சோளம்-100கி
மஷ்ரூம்-150கி
வெங்காயம்-2
தக்காளி-1
பச்சை மிளகாய்-2
இஞ்சி, பூண்டு பேஸ்ட்-1டீஸ்பூன்
கறிவேப்பிலை-சிறிது
கொத்தமல்லி-சிறிது
எண்ணெய்-1டே.ஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
மஞ்சள் பொடி-1/2டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி-1டீஸ்பூன்
மல்லிப்பொடி-1/2டீஸ்பூன்
உப்பு-தேவைக்கேற்ப
தேங்காய்ப்பால்-1/2கப்
செய்முறை
மஷ்ரூமை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் சீரகம், கடுகு தாளித்து கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி போட்டு வதக்கவும். பின் மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி போட்டு வதக்கி நறுக்கி வைத்துள்ள மஷ்ரூம், உதிர்த்து வைத்துள்ள சோளம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, சிறிது நீர் தெளித்து தேவையான அளவு உப்பு போட்டு மூடி வைத்து வேக விடவும். நன்கு வெந்தவுடன் தேங்காய்ப் பால், கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
சிக்கன் சூப் வித் மஷ்ரூம்ஸ்
தேவை
சிக்கன்-200கி
மஷ்ரூம்-50கி
இஞ்சி-1/2இன்ச்
சிவப்பு மிளகாய்-1
ஸ்பிரிங் ஆனியன்-2
வினிகர்-1/2டே.ஸ்பூன்
சோயா சாஸ்-2டே.ஸ்பூன்
கார்ன் ஃப்ளார்-1டே.ஸ்பூன்
தண்ணீர்-1/2கப்
எண்ணெய்-1டே.ஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள்-தேவைக்கேற்ப
சிக்கன் வேக வைத்த நீர்-5கப்
செய்முறை
சிக்கனை வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும். மஷ்ரூம், இஞ்சி, ஸ்பிரிங் ஆனியன் முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை உடைத்துக் கொள்ளவும். சிக்கன் வேக வைத்த நீருடன் சோயாசாஸ், வினிகர், இஞ்சி, உப்பு, மிளகாய் மற்றும் எண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும். அத்துடன் கார்ன் ஃப்ளாரை நீரில் கரைத்து ஊற்றி, நறுக்கிய மஷ்ரூமையும் போட்டு வேக விடவும். சூப் நன்கு கொதித்து வரும் போது வேக வைத்த சிக்கன் மற்றும் ஸ்பிரிங் ஆனியன் போட்டு சிறு தீயில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கடைசியாக உப்பு, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.
மஷ்ரூம் புலாவ்
தேவை
பாஸ்மதி அரிசி-1கப்
காளான்-100கி
வெங்காயம்-2
மிளகாய்பொடி-3/4டீஸ்பூன்
கரம் மசாலாப்பொடி-1/4டீஸ்பூன்
சீரகப் பொடி-1/2டீஸ்பூன்
எண்ணெய்-2டே.ஸ்பூன்
நெய்-2டீஸ்பூன்
பட்டை-சிறு துண்டு
உப்பு-தேவைக்கேற்ப
எலுமிச்சம் பழம்-அரை மூடி
செய்முறை
காளானையும், வெங்காயத்தையும் ஒரே அளவான நீளமாக நறுக்கிக் கொள்ளவும். பாஸ்மதி அரிசியுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். ஒரு பெரிய வாணலியில் எண்ணெய், நெய்யைச் சேர்த்து சூடாக்கி அதில் பட்டையை போட்டு பின் வெங்காயத்தைப் போட்டு அது பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் காளானைப் போட்டு வதக்கி, மிளகாய் பொடி, கரம் மசாலாப் பொடி, சீரகப் பொடி, உப்பு போட்டு வதக்கவும். பச்சை வாசனை போனவுடன் வேக வைத்த சாதத்தை போட்டுக் கிளறவும். கடைசியாக எலுமிச்சம் பழத்தை பிழிந்து ஊற்றி நன்றாகக் கிளறி இறக்கவும்.
சத்யா