காயகல்பமாகும் காய்கறிச் சாறுகள்

Spread the love

செய்தித் தாள்களிலும் வார இதழ்களிலும் பச்சைக் காய்கறிகள், கீரைகள் போன்ற மரக்கறி உணவுகளின் பயன்பாடு பற்றிய விரிவான செய்திகள் வரக் காண்கிறோம். “காலிஃப்ளவர் கண்களுக்கு வலிவூட்டுகிறது. கொத்தமல்லி இரத்தத்தைக் சுத்தமாக்குகிறது. பசலைக் கீரை இரும்புச் சத்தின் இருப்பிடம் முட்டைக்கோசு, வெங்காயம் பச்சையாகத் தின்பவர்களுக்குப் புற்றுநோய் வருவதில்லை”. என மேலை நாட்டு விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர் என்று பலப்பல செய்திகள், படங்கள்.

காய்கறிகளின் பயன்பாடு பற்றி நாமும் அறிவோம் என்றாலும் அதை உறுதிப்படுத்த ஒரு மேலை நாட்டு விஞ்ஞானி சான்று பகர வேண்டியுள்ளது. ஒரு விதத்தில் பார்த்தால் அது சரியென்றும் தோன்றுகிறது. காய்களும், கனிகளும் இந்நாட்டில் கிடைத்தாலும் அவை பற்றிய ஆய்வுகளெல்லாம் மேல் நாடுகளில் தானே செய்கிறார்கள்.

காய்கறிகளிலிருந்து புரதச்சத்தும், நார்ச்சத்தும், கனிமச்சத்தும் கிடைக்கின்றன என்பதை நாம் மேலோட்டமாக அறிவோம். ஆனால் இக் காய்கறிகளைச் சமைக்காமல் பச்சைமயாகப் பிழிந்து சாறெடுத்துக் குடிப்பவர்களுக்கே அவற்றின் முழுப் பலனும் கிட்டுகிறது என்று இயற்கை மருத்துவர்கள் கூறுகின்றனர். பச்சைக் காய்கறிச் சாறுகள் உட்கொண்ட 20 நிமிடங்களுக்குள்ளேயே உடலினுள் சுவரப்படுகின்றன என்பதுடன் இதில் 10 சதவிகிதமே முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட், பீன்ஸ், பீர்க்கு, புடலை, பூசணி, பாகை போன்ற காய்கறிகளும் துளசி, வில்வம், அரசங்கொழுந்து, நாவல் கொழுந்து, அருகம் புல், கல்யாண முருங்கை இலை, புதினா கொழுந்து, கற்பூரவல்லி, வல்லாரை, கரிசலாங்கண்ணி, மணத்தக்காளி, தூதுவளை, வெள்ளரிக்காய், வாழைத்தண்டு போன்றவைகளும் சாறு பிழிய ஏற்றவை.

பொதுவாகக் காய்கறிச் சாறு எடுக்கும் போது தேவையான காய்களை எடுத்து இரண்டு முறை கழுவிச் சுத்தம் செய்த பிறகு தோலைச் சீவி எடுத்து விட்டுச் சிறுசிறு துண்டங்களாக நறுக்கி மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து வெண்ணெய் போல் அரைக்கவும். அரைத்த விழுதை எடுத்து அதனுடன் 1/2 டம்ளர் தண்ணீர் கலந்து பெரிய கண்ணுள்ள வடிகட்டியில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இந்தச் சாற்றுடன் எதுவும் சேர்க்காமல் அப்படியே குடிப்பது நல்லது. விருப்பமுள்ளவர்கள் ஒரு கரண்டி தேன் சேர்த்தும் சாப்பிடலாம். சாதாரணமாக பச்சைக் காய்கறி அல்லது கீரைச் சாறுகளை சாப்பாட்டிற்கு அரைமணி முன்னதாகக் குடிக்க வேண்டும். சாறுகளை மடக் மடக்கென்று விழுங்காமல் மெல்ல மெல்லச் சுவைத்துக் குடிக்க வேண்டும். அப்போது தான் உமிழ் நீரும் அதனுடன் கலக்கும்.

கீரைச் சாறுகள் பிழியும் போது மிகக் கவனத்துடன் செய்ய வேண்டும். கீரைகளை இரணடு மூன்று முறை கழுவிச் சுத்தம் செய்வதுடன் அவற்றுடன் சேர்ந்திருக்கும் களைகள், கல், மண் போன்றவற்றையும் அழுகிய இலைகளையும் நீக்கித் தூய்மைப்படுத்த வேண்டும். நன்கு கழுவிச் சுத்தம் செய்த பிறகு சரியான கீரை தானா என்று உறுதி செய்து கொண்டு அதன் பின்னரே சாறு பிழிய வேண்டும். முன் பின் தெரியாத, பரிச்சயம் இல்லாத இலைகளையோ தவறான கீரைகளையோ பிழிந்து குடித்து விட்டால் அதனால் பல தொல்லைகள் நேரக் கூடும்.

வெள்ளரிக்காய் சாறு

நல்ல இளம் வெள்ளரிக் காய்களாகப் பார்த்து 3 அல்லது 4 எடுத்து நன்கு கழுவவும். பின்னர் தோலைச் சீவாமல் நான்கைந்து துண்டங்களாக வெட்டி மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும். வெள்ளரிக்காயில் நிறையத் தண்ணீர் இருப்பதால் தனியாகத் தண்ணீர் சேர்க்க வேண்டாம். இந்தச் சாறை வடிகட்டாமல் வாயில் ஊற்றிச் சுவைத்துக் சாப்பிடலாம். தாகத்தைத் தீர்க்கும். சிறுநீரை எளிதாகப் பிரிக்கும். உடல் உஷ்ணத்தைக் குறைத்து நீர்த்தாரை எரிச்சலைப் போக்கும்.

கேரட் சாறு

இது கிழங்கு வகையைச் சார்ந்தது என்றாலும், காய்கறிகளுக்குள்ள எல்லா நல்ல குணங்களும் இதற்கு உண்டு. கால்ஷியமும், பாஸ்பரசும் நிறைந்த அளவில் கொண்டிருக்கிறது. 100 கிராம் கேரட்டில் 60 கிராம் சாறு கிடைக்கும். அதில் 80 மி.கி. கால்ஷியமும் 530 மி.கி. பாஸ்பரசும் 1 மி.கி. அயச்சத்தும் உள்ளன. தவிர 1890 மைக்ரோகிராம் கரோட்டினும் 15 மை.கி. போலிக் அமிலமும் 3 மி.கி. விட்டமின் ‘சி’ யும் உள்ளது. இதில் மிகுந்த அளவில் காணப்படும் கரோட்டின் ஒரு புற்றுநோய் எதிர்ப்பி. கேரட் சாற்றினைத் தொடர்ந்து குடித்துப் புற்றுநோய் நீங்கப் பெற்றவர்களும் உண்டு. இந்தச் சாற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்தும் குடிக்கலாம். விரும்பினால் 1 தேக்கரண்டி எலுமிச்சைசாறும், மிகக் குறைவான உப்பும் சேர்த்துக் குடிக்கலாம். இதய நோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பை விலக்க வேண்டும்.

பீர்க்கங்காய்ச் சாறு

பீர்க்கங்காயில் சாறெடுப்பது எளிது. முற்றாத பீர்க்கங்காயாகக் கால் கிலோ எடுத்து நன்கு கழுவி விட்டுத் தோலைச் சற்று அழுந்தச் சீவ வேண்டும். பின்னர் சிறு துண்டங்களாக நறுக்கி மிக்ஸியில் இட்டு நன்றாக விழுது போல் அரைக்கவும். ஒரு குவளை தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி, வடிகட்டிய பின்னர் அருந்தலாம். இரண்டு, மூன்று சொட்டு எலுமிச்சை சாறோ அல்லது மிகக் குறைவான உப்போ சேர்த்தும் அருந்தலாம்.

பாகற்காய்ச் சாறு

பாகற்காய் சாறு எடுக்கும் போது தோலைச் சீவக் கூடாது. விதை இல்லாத இளம் பாகற்காய்களை நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். சாதாரணமாக 100 அல்லது 150 கிராம் பாகற்காய் போதுமானது. மிக்ஸியில் இட்டு நன்கு அரைத்து எடுத்து தண்ணீர் சேர்த்து வடிகட்டிய பின்னர் அரைக்குவளை மோருடன் சேர்த்து அருந்தலாம்.

இதே போன்று பூசணிக்காய், புடலை, தக்காளி போன்ற காய்களிலும் சாறு எடுத்து அருந்தலாம். இச்சாறுகளை உணவின் ஒரு பகுதியாக உண்டு வரச் செரிமான உறுப்புக்கள் சீரடையும். உடல் வலிவடையும், சிறுநீர்த் தாரை எரிச்சல் குறையும். மலம் எளிதாகக் கழியும்.

விட்டமின்களைப் போல் காய்கறிகளில் உள்ள கனிமச் சத்துகளும் (விவீஸீமீக்ஷீணீறீs) உடல் நலத்துக்கு இன்றியமையாதவைகளாகும். ஆண்மைக்கு வலிதை தருகிறது. துத்தநாகம் (ஞீவீஸீநீ) தோலுக்கும், முடிக்கும், நகங்களுக்கும் பளபளப்புத் தருகிறது. சிலிகன் (). எடைக் குறைவையும், உடல் வளர்ச்சியின்மையையும் உடனடியாக நேராக்குகிறது பாஸ்பரஸ். பொதுவாகக் காய்கறிச் சாறு செரிமானத்தை அதிகரிப்பதுடன் உணவைக் குடலுக்குள் எளிதாகப் பயணிக்கச் செய்கிறது. கால்சியம், பாஸ்பரஸ், நைட்ரஜன் என்ற மூவகைப் பொருள்களையும் தக்க அளவில் உடலில் நிலைத்திருக்கச் செய்து திசுக்களின் வளர்ச்சிக்கும் தேய்மானத்தை ஈடு செய்யவும் உதவுகிறது.

அருகம்புல் சாறு

அருகம்புல் சாறு பிழியும் போது நல்ல கவனம் வேண்டும். அருகம்புல்லை நல்ல, தண்ணீர்ப் பாங்கான, சுத்தமான இடங்களிலிருந்தே பறிக்க «வ்ணடும். குப்பை, கூளம், முடி மற்றும் சாணம் போன்றவைகள் உள்ள இடங்களிலிருந்து புல் பறிக்கக் கூடாது. பறித்த புல்லை ஒவ்வொன்றாக ஆய்ந்து காய்ந்த குச்சிகள், பிற பூண்டுகள் நீக்கிப் பின்பு நிதானமாக இரண்டு, மூன்று முறை கழுவிப் பின்னர் சாறு எடுக்க வேண்டும். அருகம்புல் சாற்றை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். குடித்த ஒரு மணி நேரம் கழித்தே உணவு உண்ண «வ்ணடும். இது இதயத்தை வலிமைப்படுத்தும். கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். இரத்தத்தைத் தூய்மையாக்கும்.

அரசங் கொழுந்து

இது உடலைக் குளிர்ச்சியடையச் செய்யும். ஆண்மையை அதிகரிக்கும். மலட்டுத் தன்மையை நீக்கும்.

கரிசலாங்கண்ணிச் சாறு

ஈரல் வீக்கத்தைக் குறைக்கும். பித்தச் சுரப்பைச் சீராக்கும். மஞ்சள் காமாலையை குணமாக்கும்.

முட்டைக்கோசு சாறு

200 கிராம் முட்டைகோஸைத் துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டுச் சிறிது தண்ணீர் விட்டு மை போல் அரைக்கவும். அரைத்தெடுத்த விழுதுடன் அரைக்குவளை தண்ணீர் விட்டு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இந்தச் சாற்றைப் பச்சையாகத் தினமும் காலையில் அரைக் குவளை குடித்து வந்தால் போதும். வயிற்று வலி நீங்கும். வயிற்றுப் புண் ஆறும். இம்முறையில் பச்சை சாறு குடித்துப் பலர் இரைப் புண் ஆறுப் பெற்றுள்ளனர்.

கீழா நெல்லிச் சாறு

மஞ்சள் காமாலை வந்தவர்கள் தான் கீழாநெல்லிச்சாறு அருந்த வேண்டும் என்பதில்லை. ஈரல் சற்று மந்தமாகச் செயல்படுகின்ற போதும் பசி மந்தம், வாய் நீரூறல், குமட்டல், வாந்தி போன்றவற்றால் சங்கடப்படும் போதும் மூன்று நாட்களுக்குக் கீழாநெல்லிச் சாறு அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.


Spread the love