வெஜ் சைட் டிஷ்

Spread the love

காலிஃப்ளவர் மஞ்சூரியன் வித் க்ரேவி

தேவையான பொருட்கள்

பொரிக்க தேவையான பொருட்கள்

காலிஃப்ளவர் பெரியது     –     1

இஞ்சி பூண்டு பேஸ்ட்    –     1 டீஸ்பூன்

மிளகாய் பொடி             –     1 டீஸ்பூன்

கார்ன் ஃப்ளார்              –     1/2 கப்

மைதா                    –     1 டேபிள் ஸ்பூன்

உப்பு, தண்ணீர்             –     தேவையான அளவு

எண்ணெய்                 –     பொரிக்க

க்ரேவி செய்ய தேவையான பொருட்கள்

இஞ்சி                     –     1 இன்ச்

பூண்டு                     –     8 பல்

பச்சை மிளகாய்           –     2

ஸ்பிரிங் ஆனியன்         –     1/2 கப்

பெரிய வெங்காயம்        –     1

குடமிளகாய்               –     1

சோயா சாஸ்              –     1 டேபிள் ஸ்பூன்

சில்லி சாஸ்              –     1 டேபிள் ஸ்பூன்

தக்காளி சாஸ்             –     1 டேபிள் ஸ்பூன்

அஜினமோட்டோ          –     1 சிட்டிகை

கார்ன் ஃப்ளார்              –     1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய், உப்பு           –     தேவையான அளவு

செய்முறை

பெரிய வெங்காயம், குடமிளகாயை சதுரமாக நறுக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், ஸ்பிரிங் ஆனியன் முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காலிஃப்ளவரை பெரிய துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் வெந்நீரில் சிறிது உப்பு போட்டு 2 நிமிடம் போட்டு எடுக்க வேண்டும். பின்பு பொரிக்கத் தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் கலந்து காலிஃப்ளவரில் பூசி அரை மணி நேரம் ஊற விடவும். ஊறிய காலிஃப்ளவரை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

க்ரேவி செய்முறை

ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பிறகு ஸ்பிரிங் ஆனியன் போட்டு வதக்கி சதுரம், சதுரமாக வெட்டிய வெங்காயம், குடமிளகாய் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியவுடன் சோயாசாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விட்டு அஜினமோட்டோ சேர்க்கவும். கடைசியாக கார்ன் ஃப்ளாரை தண்ணீரில் கட்டிகள் இல்லாமல் கரைத்து ஊற்றி கொதிக்க விட்டு பொரித்து வைத்துள்ள காலிஃப்ளவரைப் போட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும். (காலிஃப்ளவருக்கு பதில் பனீர், சிக்கன், மீன், மஷ்ரூம் சேர்த்தும் மஞ்சூரியன் செய்யலாம்)

பனீர் பட்டர் மசாலா

தேவையான பொருட்கள்

பனீர்                       –     200 கிராம்

பெரிய வெங்காயம்        –     3

பெங்களூர் தக்காளி        –     3

இஞ்சி பூண்டு பேஸ்ட்           –     1 டீஸ்பூன்

மிளகாய்ப் பொடி           –     2 டீஸ்பூன்

மல்லிப்பொடி              –     1 டீஸ்பூன்

முந்திரி                    –     50 கிராம்

வெண்ணெய்              –     3 டேபிள் ஸ்பூன்

பட்டை                     –     1 இன்ச்

கிராம்பு                    –     2

ஏலக்காய்                  –     2

சோம்பு                    –     சிறிது

உப்பு                       –     தேவையான அளவு

மேத்தி, கொத்தமல்லி       –     அலங்கரிக்க

செய்முறை

வெங்காயம், தக்காளி, முந்திரி முதலியவற்றை தனித் தனியே அரைத்துக் கொள்ளவும். பனீர் சிறு சிறு  க்யூப் வடிவில் நறுக்கிக் கொள்ளவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, மிளகாய் பொடி, மல்லிப் பொடியையும் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் வெண்ணெய் சூடாக்கி அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் அரைத்த விழுது போட்டு நன்கு வதக்கவும். பின் அரைத்த மசாலாவைப் போட்டு வதக்கவும். பனீர் துண்டுகளைப் போட்டு வதக்கி, தக்காளி அரைத்த விழுது, முந்திரி விழுது, உப்பு போட்டு கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்து க்ரேவி கெட்டியானவுடன் சிறிது பட்டரை மேலே போட்டு, மேத்தி இலை, கொத்தமல்லி இலைகளை மேலே தூவி பரிமாறவும்.

பாலக் பனீர்

தேவையான பொருட்கள்

பனீர்                       –     150 கிராம்

பாலக்கீரை                      –     1 கட்டு

வெங்காயம்               –     2

இஞ்சி, பூண்டு பேஸ்ட்     –     1 டீஸ்பூன்

பூண்டு               –     2 பல்

தக்காளி              –     1

பச்சை மிளகாய்      –     2

நெய்                 –     2 டேபிள் ஸ்பூன்

உப்பு                 –     தேவையான அளவு

ஏலக்காய்            –     2

செய்முறை

வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாலக் கீரையைக் கழுவி, நறுக்கி சிறிது நெய் விட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்டும் போட்டு வதக்கவும். பின் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் நெய் சூடாக்கி அதில் ஏலக்காய் போட்டு நறுக்கி வைத்துள்ள பூண்டு பல், வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பின் தக்காளியை போட்டு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியவுடன் அரைத்த பாலக்கீரையை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். பனீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் க்ரேவியில் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி மேலே சிறிது திக்ஷீமீsலீ சிக்ஷீமீணீனீ தூவி பரிமாறவும்.

ஆலு கோபி மசாலா

தேவையான பொருட்கள்

காலிஃப்ளவர் சிறியது       –     1

உருளைக்கிழங்கு          –     4

பெரிய வெங்காயம்        –     1

தக்காளி                    –     1

அரைக்க

பூண்டு                –     4 பல்

இஞ்சி                –     1 இன்ச்

தேங்காய் துருவல்   –     2 டீஸ்பூன்

கசகசா               –     1 டீஸ்பூன்

பட்டை               –     1 துண்டு

கிராம்பு               –     2

சீரகம்                –     1/2 டீஸ்பூன்

சோம்பு               –     1/2 டீஸ்பூன்

தயிர்                 –     1 கப்

மேலுள்ள பொருட்களை சிறிது எண்ணெயில் வறுத்து தயிர் சேர்த்து அரைக்கவும்.

மிளகாய் பொடி       –     1 டீஸ்பூன்

மஞ்சள் பொடி        –     1/4 டீஸ்பூன்

மல்லிப் பொடி        –     1/2 டீஸ்பூன்

உப்பு                 –     தேவையான அளவு

எண்ணெய்            –     தேவையான அளவு

கொத்தமல்லி        –     சிறிது

செய்முறை

பெரிய வெங்காயம், தக்காளி முதலியவற்றை பொடியாக நறுக்கவும். காலிஃப்ளவரை சிறிய சிறிய பூக்களாக நறுக்கி கொதிக்கும் வெந்நீரில் உப்பு சேர்த்து 2 நிமிடம் போட்டு எடுக்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி 1 அங்குலத் துண்டுகளாக நறுக்கவும். காலிஃப்ளவரையும், உருளைக்கிழங்கையும் தேவையான உப்பு போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் காய வைத்து அதில் வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி, மிளகாய் பொடி, மல்லிப்பொடி, மஞ்சள் பொடி போட்டு வதக்கி பின் அரைத்த மசாலாவையும் போட்டு வதக்கவும். பச்சை வாசனை போனவுடன் வேக வைத்த காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கிரேவிக்கு தேவையான உப்பு மட்டும் போடவும். காய்களுக்கு வேகும் போதே போட்டு விட்டோம். நன்கு கொதித்து கிரேவி கெட்டியானவுடன் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

பைங்கன் பாஜி

தேவையான பொருட்கள்

பெரிய கத்திரிக்காய்        –     3

தக்காளி                    –     2

இஞ்சி                     –     1 இன்ச்

வெங்காயம்               –     2

பச்சை மிளகாய்            –     4

மிளகாய் பொடி             –     1 டீஸ்பூன்

சீரகம்                     –     1/2 டீஸ்பூன்

சீனி                       –     1/2 டீஸ்பூன்

கரம் மசாலா              –     1/4 டீஸ்பூன்

பிரிஞ்ஜி இலை             –     1

மஞ்சள் பொடி              –     1/4 டீஸ்பூன்

உப்பு                       –     தேவையான அளவு

எண்ணெய்                 –     2 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி இலை       –     சிறிது

செய்முறை

பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கத்திரிக்காயில் எண்ணெய் தடவி தீயில் சுட்டுத் தோலை நீக்கி விட்டு பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், பிரிஞ்ஜி இலை போட்டு தாளித்துக் கொண்டு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மிளகாய்ப்பொடி, மஞ்சள் பொடி, ஆகியவற்றை சேர்த்துக் கிளறவும். சீனியை சேர்க்கவும். தக்காளியைப் போட்டு பின் கத்திரிக்காயைச் சேர்த்து கிளறி வேக விடவும். தேவையான உப்பைச் சேர்க்கவும். கரம் மசாலா தூவிக் கிளறி விட்டு இறக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

தம் ஆலு

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு          –     1/4 கிலோ

பெரிய வெங்காயம்        –     3

மிளகாய்ப் பொடி           –     1 டீஸ்பூன்

மல்லிப் பொடி             –     1 டீஸ்பூன்

மஞ்சள் பொடி              –     1/4 டீஸ்பூன்

பூண்டு                     –     4 பல்

இஞ்சி                     –     1 இன்ச்

சீரகம்                     –     1 டீஸ்பூன்

தக்காளி                    –     2

கடுகு                           –     1/4 டீஸ்பூன்

எண்ணெய்                 –     3 டேபிள் ஸ்பூன்

உப்பு                       –     தேவையான அளவு

செய்முறை

பெரிய வெங்காயம், தக்காளி முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும். பின்னர் அதன் தோலை உரித்து பெரிய பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். சீரகம், இஞ்சி, பூண்டு, தக்காளி நான்கையும் மிக்ஸியில் போட்டு அரைத்து அதனுடன் மல்லி, மிளகாய், மஞ்சள் பொடிகளையும் சேர்த்து கலந்து மசாலா போல் எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகைப் போடவும். கடுகு வெடித்ததும் வெங்காயத்தைப் போட்டு அது சிவக்கும் வரை வதக்கவும். அரைத்து வைத்துள்ள மசாலாவையும் போட்டு வதக்கவும். அதன் பின் உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு, உப்பு போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும். நன்கு வெந்தவுடன் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

உணவு நலம் நவம்பர் 2011

வெஜ் சைட் டிஷ், காலிஃப்ளவர் மஞ்சூரியன் வித் க்ரேவி, காலிஃப்ளவர் மஞ்சூரியன் வித் க்ரேவி செய்முறை, பனீர் பட்டர் மசாலா, பனீர் பட்டர் மசாலா செய்முறை, பாலக் பனீர், பாலக் பனீர் செய்முறை, ஆலு கோபி மசாலா, ஆலு கோபி மசாலா செய்முறை, பைங்கன் பாஜி, பைங்கன் பாஜி செய்முறை, தம் ஆலு, தம் ஆலு செய்முறை,


Spread the love