தேவையானவை:
வெந்தயக்கீரை – 2 கட்டு
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 10 (கீரையின் கசப்பு அடங்க, மிளகாய் அதிகம் தேவை)
புளி, உப்பு, கடுகு, பெருங்காயம் – சிறிது
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
பூண்டு – 2 பல்
வெல்லம் – சிறுகட்டி அளவு.
செய்முறை:
புளியை நீரில் நனைத்து அத்துடன் வெல்லத்தைச் சேர்க்கவும். உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை சிறிது எண்ணெயில் சிவக்க வறுத்துக்கொள்ளவும். சிறிது எண்ணெய் விட்டு, உப்பு, வெந்தயக்கீரையை வதக்கி ஆறவிட்டு, எல்லாவற்றையும் சேர்த்து அரைத்த பின், கடுகு, பெருங்காயம் தாளித்துப் போட வேண்டும்.
வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்