வாழ்வளிக்கும் வாயு விளங்கம்

Spread the love

பல வியாதிகளை குணப்படுத்தும் மூலிகையாக தொன்று தொட்டு பயனளித்து வரும் ‘வாயு விளங்களம்’, ஆயுர்வேத மேதைகளான சரகர், சுச்ருதர் மற்றும் வாகபட்டர் இவர்களின் மருத்துவ நூல்களில் வெகுவாக விவரிக்கபட பெருமை பெற்றதாகும்.

இந்தமூலிகையின் விஞ்ஞான பெயர் – Embelia ribes.

மூலிகை குடும்பம்:- Myrsinaceae.

சம்ஸ்க்ருதம்:- விதங்கா, கிருமிக்னா, ஹிந்தி – பாய்பதங், பாபெரங், வாவுரங்

தெலுங்கு:- வாயு விளங்கம் – தமிழ் – வாயு விளங்கம், வாய் விலங்கம் பர்னனை

பயன்படும் பாகங்கள்:– பழம், விதைகள்.

தாவர விவரங்கள்:- கொடி வகையை சேர்ந்த புதர்செடி. இலைகள் 6 – 14 செ.மீ. நீளமும் 2 – 4 செ.மீ. அகலமும் கொண்டவை. மலர்கள் கொத்து கொத்தாக மஞ்சள் நிறத்துடன் பூக்கும். முழுமையாக பூத்த மலர்கள் 3 மி.மி. விட்டம் அளவு இருக்கும். நன்றாக வளர்ந்த சொடியின். தண்டுகள் மனிதனின் தொடையளவு பருமன் இருக்கும். ஸ்ரீலங்காவில் 45  – 72 செ.மி. தடிமன் கொண்ட கொடிகள் காணப்படகின்றன. மேகாலாயாவில் 22 – 31 செ.மி. பருமன் கொண்ட கொடிகள் இருக்கின்றன. வேர்கள் பழுப்பு நிறத்துடன் 7 – 20 செ.மி. சுற்றளவுடன், பூமியில் ஆழ்ந்து இருக்கும். பழங்கள் 2.4 – 4 மி.மி. அளவு இருக்கும்.

இதில் இன்னொரு வகையும் உண்டு. காடுகளில் வளரும் செடி வகையை சேர்ந்தது. உயரமாக வளரக்கூடியது. மகிழ மர இலைகளை போன்ற இலைகளுடன் காணப்படும். இலை இந்த வகை Embelia tsjeriam – cottam எனப்படும். சிவந்த நிற மலர்கள் கொத்து கொத்தாக காணப்படும்.

வாயு விளங்கம் கற்கள் நிறைந்த ஈரப்பிரதேசங்கள், மலைச் சரிவிலுள்ள காடுகள் இவற்றில் மிகுதியாக காணப்படும். இந்தியாவின் வடமேற்கு பிரதேசங்களில் (ஜம்மு – காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்திரப்பிரதேசம்) வாயு விளங்கம் காணப்படுவதில்லை. கிழக்குப் பகுதிகளில் – நேபாளம், இக்கிம், அஸ்ஸாம், மேகாலாயா, மத்திய பிரதேசம், ஆந்திரபிரதேசம், தமிழ் நாடு (பழனிமலை, ஆனை மலை, கூனூர், ஏற்காடு, திருநெல்வேலி), கர்நாடகம் மற்றும் மஹாராஷ்ராவில் காணப்படுகிறது.

ரசாயனம்: வாயு விளங்கத்தில் எம்பெலின் – 2.5 லிருந்து 3.1%, க்வெட்சிடால் – 1.0%, கொழுப்பு – 5.2%, இவைதவிர, க்ரிஸ்டம்பைன் – பிசின்), சீக்கிரம் ஆவியாகக்கூடிய எணையும் உள்ளன. இந்த ‘எம்பெலின்’ அமிலம் வயிற்றுப் பூச்சிகளில் ஒன்றான நாடிப்புழுவை அழிக்க வல்லது. இரண்டு வகை வாயு விளங்கங்களிலும், இந்த அமிலம் உள்ளது.

பொது குணங்கள்

உலர்ந்த பழங்கள் – வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். டானிக். பாம்பு, தேள் கடிகளுக்கு பயன்படும்.

பழங்களின் கஷாயம் – ஜுரங்களுக்கு, தோல், நுரையீரல் கோளாறுகளுக்கு மருந்து.

வேர்களின் கஷாயம் – இருமல், பேதிக்கு, மருந்து.

மருத்தவ குணங்கள்

பல வியாதிகளுக்கு இந்த மூலிகை, மருந்தாக பயன்படுகிறது. சுஸ்ருதா இதை வயிற்று பூச்சி கொல்லியாகவும் இருமல் மருந்தாகவும் பயன்படும் என்கிறார். ‘விதாங்க ரசாயன்’, – என்ற வாயு விளங்கம் நிறைந்த மருந்தை சுஸ்ருதா ஆயுளை நீடிக்கும் மருந்தாக குறிப்பிடுகிறார். ஆசார்ய வாகபட்டா, குஷ்டம், மஞ்சள் காமாலை, மூச்சுக் குழாய் உபாதைகள் – இவற்றுக்கு மருந்தாகும் வாயு விளங்கம் என்றார். யுனானி மருத்துவத்திலும் வயிற்றுப்பூச்சிகளை அழித்து, ஜுரணத்தை பெருக்கி, பசியை தூண்டும் மருந்தாக வாயுவிளங்கம் குறிப்பிடப்படுகிறது. முக்கியமாக இந்த மூலிகை ஒரு அற்புதமான, பூச்சி, பழுக்கொல்லி மற்றும் கிருமி நாசினியாகும். விதையை (உலர்ந்த பழம்) பொடி செய்து 4 – 16 கிராம் எடை தேனில் குழைத்து, ஒரு நாளுக்கு 2 – 3 முறை கொடுத்து, அடுத்த நாள் சிற்றாமணக்கு எண்ணெய் கொடுக்க, வயிற்றுப்புழுக்கள், அதுவும் நாடாப்புழுக்கள், இறந்து வெளியேறும்.

பொடியில் 2 – 4 கிராம் எடுத்து, பாலிற்கலந்து சிறுவர்களுக்கு கொடுக்க, வயிற்றுப் பொருமல், செரியாமையால் வரும் வயிற்றுவலி நீங்கும்.

தலைவலி, காக்காய் வலிப்பு, தூக்கமின்மை, சரும வியாதிகள், (சொறி, ரணம், புண்கள், நமைச்சல்) இவற்றுக்கு வாயுவிளங்கம் நல்ல மருந்து.

வாயு விளங்கத்தின் வேரை, அரிசி கழுவிய நீருடன் அரைத்து உட்கொள்ள செய்தால் ஸர்ப்ப விஷம் நீங்கும்.

ஜலதோஷத்தை போக்கும். இதன் கஷாயம் ஃப்ளு ஜுரத்தை குறைக்கும். தற்போது மேற்கொண்ட ஆராய்சிகளின் படி, வாயு விளங்கம் குடும்பகட்டுப்பாடு உதவும் மருந்தாக பயன்படுத்தப்படலாம். எலிகளை வைத்து ஆராய்ச்சிகளில் இது தெரியவந்துள்ளது. மேற்கொண்டு ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன.

வாயு விளங்க ஆயுர்வேத மருந்துகள் – விடங்கசாரதி லேகியம் – குஷ்டநோய், வெண் குஷ்டம், இருமல், பெருவயிறு, மூல நோய் நீரிழிவு, கட்டி, குன்மை ஆகியவற்றை தணிக்கும். விடங்காரிஷ்டம் – இது கட்டி, ஊருஸ்தம்ப வாதம், நீரிழிவு, சிறுநீர்ப்பையில் கல், பௌத்திரம், கண்டமாலை, தாடைப் பிடிப்பு, இவற்றை நீக்கும்.

விடங்காதி குடிகை – இது குஷ்டத்தை போக்கும்.

வாயு விளங்க விதைகள் கருமிளகில், கலப்படமாக சேர்க்கப்படுகிறது.

சரக ஸம்ஹிதையும், வாயு விளங்கமும்

தன்மை – கார்ப்புச் சுவை, சிறிது கசப்புச் சுவை, வறட்சித் தன்மை, உஷ்ண வீரியம் கொண்டிருக்கும்.

தீர்க்கும் நோய்கள் – நஞ்சு, தலை சுற்றல், வயிற்று வலி,பெருவயிறு, கிருமி நோய் முதலியவற்றை தணிக்கும்.


Spread the love
error: Content is protected !!