வாத பிரகிருதிகள்

Spread the love

ஆயுர்வேதத்தின் அடிப்படை தத்துவங்களில் ஒன்று ‘த்ரிதோஷங்கள்’. இதை ‘பஞ்ச பூதத்ரிதோஷ தத்துவம்’ எனலாம். ஆகாயம், வாயு, அக்னி, நீர், பூமி இவை பஞ்ச பூதங்கள். வாயுவும், ஆகாயம் இணைந்து உடலில் வாயுவை (வாதம்) உண்டாக்கும். அக்னி பித்த ரூபமாகும். நீரும் நிலமும் கபமாக செயல்படுகிறது. இந்த மூன்று தோஷங்களும் சீராக இருக்கும் வரை வியாதிகள் வராது.

ப்ரகிருதி மனித உடலை குறிக்கும் சொல். மனித உடல் தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போதே ப்ரகிருதியின் வாத, பித்த, கப அளவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிடும். த்ரிதோஷ அடிப்படையில் மனிதர்கள் (ப்ரகிருதிகள்) பிரிக்கப்பட்டு விடுகின்றன எனவே ஒரு மனிதன் எந்த தோஷத்தை சேர்ந்தவன் என்பன தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். தெரிந்து கொண்டால் அதற்கேற்ற வைத்தியம், உணவு இவற்றை மேற்கொள்ளலாம். வாயு, வாதம் இரண்டும் ஒரே அர்த்தம் உள்ள சொற்கள்.

வாதம் உடலில் இருக்கும் இடம்:- இடுப்பு எலும்புக்கூடு, நாபி, பெருங்குடலின் பகுதி, தொடை, காது, தோல், நுரையீரல், மூளை, மூத்திரப்பை.

வாதத்தின் ஐந்து வகைகள்:-  ப்ராண, உதான, வியாந, சாமன மற்றும் அபான வாயுகள்.

வாதத்தின் இயக்கம் – சரகஸம் ஹிதையின் படி வாதம் 5 வகைகள்:-

·வாயு (வாதம்) தன் இயக்கத்தை மின்சாரத்தைப் போல் நரம்புகள் மூலம் செய்கிறது.

·ப்ராண வாயு மூச்சு விட, உணவு உண்ண, பொறுப்பானது. மூளை, மனம், உணர்வுகள், அறிவு, ரத்த நாளங்கள், நரம்புகள் இவற்றை இயக்குகிறது. உதான வாயு பேச்சு, ஞாபகசக்தி இவற்றை பாதுகாக்கிறது. சமான வாயு ஜீரணத்தை பார்த்துக் கொள்கிறது. அபான வாயு கழிவுகளை வெளியேற்றும் செயல்களுக்கு உதவும். வியான வாயு உடல் முழுவதும் சென்று ஊட்டசத்துக்களை கொடுத்து விடும். வியர்வை, கண்கள் மூடுவதும், திறப்பதும், உடல் இயல்பாடுகள் இவற்றை கவனிக்கும்.

·உடல் நகர்தல், நடப்பது, இதர அசைவுகளை செய்வது வாதம்.

வாத கோளாறுகளால் வரும் வியாதிகள் ஆஸ்துமா, மனநோய்கள், காக்காய் வலிப்பு, நரம்புத்தளர்ச்சி தோல் வியாதிகள் ஜுரம், சோகை, அதிக உடல்பருமன், நீரிழிவு, மலச்சிக்கல், பேதி தவிர தைராய்டு, அட்ரீனல் சுரப்பிகளில் பாதிப்பு, மூட்டுவாதம் கிட்டத்தட்ட 80 வாதவியாதிகள் உள்ளன.

பாதிக்கப்படும் உடல்பகுதிகள்                           பாதிப்பு

குடல்                                                          –                  மல மூத்திரங்கள் வெளியேறாமல் சேர்ந்து

                                                                             விடுவது, இதயநோய், வயிற்றில் வாய்வு

                                                                             ஏற்படுவது, மூலம்

உடல் (பொதுவாக)                         –                  கை, கால் வலி, நடுக்கம், மூட்டுவலி

குதம்                                                  –                  வாய்வு தேங்குதல், சிறுநீரகத்தில் கற்கள்,

                                                                             வயிற்று கோளாறுகள், இடுப்பு, கை

                                                                             கால்கள் தேய்வது.

வயிறு                                               –                  இதயவலி, தொப்புள், கீழ்வயிறு

                                                                             இவைகளின் பாதிப்பு, ஏப்பம், வாய்

                                                                             உலர்தல், பெருமூச்சு

அடிவயிறு                                         –                  வயிறு வலி, வயிற்று பிரட்டல்,

                                                                             மலச்சிக்கல் மலமூத்திரங்கள் கழிக்கும்

                                                                             போது சிரமம்

ஐம் புலன்கள்                                   –                  உணர்ச்சிகள் இல்லாமல் போவது

சருமம்                                               –                  வலி, சிவப்பது, தோல் வெடிப்புகள்,

                                                                   மரத்துப் போதல்

உதிரம்                                              –                  வலி, நிறத்தை இழத்தல், பசியின்மை,

                                                                   மெலிவடைவது, சினைப்பு

தசை, கொழுப்பு                               –                  அவயங்கள் கனமான உணர்வு,

                                                                   தீவிரமான வலி (அடித்தது போல்),

                                                                   களைப்பு.

எலும்பு                                             –        வலி, எடைகுறைவு

விந்து                                                          –        விரைவாக விந்து வெளியேறுதல்

                                                                   அல்லது விந்து வெளியேறாமல்

                                                                   தடைபடுவது

மூட்டுகள்                                          –        வீக்கம், வலி

கை, கால்கள்                                    –        வலி, கைகால்கள், அங்கவீனம்

சரகர் மேற்கண்டவை மற்றுமல்ல, வாதக்கோளாறுகளை விலாவாரியாக விவரித்து, உரிய சிகிச்சை முறைகளையும் சொல்லியிருக்கிறார்.

வாதப்பிரகிருதிகளின் தோற்றமும், இயல்புகளும்:-

.         வாதம் என்றால் வாயுதான். வாயு என்றால் காற்று. காற்றைப்போல் (எடையில்லாமல்) வாத மனிதர்கள் மெலிந்து இருப்பார்கள்.

·        மெலிந்து, எடைகுறைந்து காணப்படுவார்கள்.

·        குரல் மெலிந்து, பேச்சில் தளர்ச்சியும் கரகரப்பும், கம்மலும் இருக்கும். பேச்சு தடுமாறும்.

·        கண்கள் சிறியவையாக இருக்கும்.

·        சருமம், கூந்தல் வறண்டிருக்கும். கால் வெடிப்பு அதிகமாக இருக்கும்.

·        ஜீரண சக்தி குறைவாக இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படும்.

·        குளிர்ச்சி உடலாக இருப்பதால், இவர்களுக்கு குளிர் பிடிக்காது. வெய்யிற் காலத்தை விரும்புவார்கள்.

·        தூக்கம் குறைவாக இருக்கும். தூங்கினாலும் ஆழ்ந்த நித்திரை வராது. உறக்கத்தில் பற்களை கடித்துக் கொள்வார்கள்.

·        அதிகம் வியர்க்காது.

·        இவர்களின் உணவுப் பழக்கம், ஆசைகள் மாறிக் கொண்டேயிருக்கும் இனிப்புகளை அதிகம் விரும்புவார்கள்.

·        வாத பிரக்ருதி பெண்கள் மாதவிடாய் கோளாறுகளால் பாதிக்கப்படுவார்கள்.

·        வேகமாக செயல்படுவார்கள். ஆனால் சீக்கிரமே தளர்ச்சியடைவார்கள்.

·        நிலையற்ற தன்மை உடையவர்கள். வலி, உரத்த சப்தம் இவற்றை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். ஐம்புலன்களை கட்டுப்படுத்தும் திறன் குறைவு.

·        நரம்புத் தளர்ச்சி அதிகம் இருக்கும்.

·        விஷயங்களை சீக்கிரம் புரிந்து கொள்வார்கள். ஆனால் ஞாபக மறதி அதிகம்.

·        பணத்தை சம்பாதித்தாலும், சீக்கிரமே செலவு செய்து விடுவார்கள்.

·        பதட்டம், பரபரப்பு, பயம் இருக்கும். ரஜோ குணம் பிரதானமாக இருக்கும்.

·        பாலியல் உணர்வுகள், ஆசை அதிகம் இருக்கும். ஆனால் அதை செயல்படுத்தும் சக்தி குறைவு.

·        நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.

·        வாத மனிதர்கள் உடற்பயிற்சியை விரும்புவார்கள். புதிய விஷயங்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள்.

·        வாதத்தில் இரண்டு நிலமைகள் உண்டு. குறைந்த வாதம் ஒன்று. தடைப்பட்ட வாதம் என்பது இன்னொன்று. உடலில் எங்கேயாவது, வலி, அசௌகரியத்துடன் வாதம் தடைபட்டு நிற்கும். சில பிராணயாம ஆசனங்கள் இந்த தடையை போக்கி விடும். குறைந்த வாதம் வயதானவர்களை பாதிக்கும். இதற்கும் யோகா நிவாரணம் அளிக்கும்.

வாத பிரக்ருதிகளுக்கு உகந்த உணவு

பொதுவாக வாத மனிதர்களுக்கு, சிறிது எண்ணை பசையுள்ள, சூடான, இனிப்பான உணவுகள் ஏற்றவை. துவர்ப்பு, கசப்பு, காரம் நிறைந்த உணவுகளை தவிர்க்கவும்.

·        கோதுமை, அரிசி, பயறு வகைகள்

·        காய்கறிகளில், கேரட், பீன்ஸ், தக்காளி, வெள்ளரிக்காய், முள்ளங்கி, முட்டை கோஸ், காலிஃப்ளவர், பூசணி தேங்காய் போன்றவை.

·        பழங்களில் திராட்சை, எலுமிச்சை, மாம்பழம், ஆரஞ்சு, பலா, மாதுளை, அத்தி, போன்றவை.

·        பாதாம் ( ஊற வைத்த), பேரீச்சை

·        மஞ்சள், இஞ்சி, கொத்தமல்லி, பெருங்காயம், மிளகு இவற்றை தாராளமாக சேர்த்து கொள்ளலாம்.

·        அளவோடு / குறைவாக நெய், பால், வெண்ணை இவற்றை பயன்படுத்தலாம்.

          நீங்கள் உங்கள் பிரக்ருதியை தெரிந்து கொள்வதின் மூலம், நோய்களின் காரணங்களை அறிந்து, மருத்துவமும், உணவு முறைகளையும் சரியாக கடைபிடிக்கலாம்.


Spread the love