முட்டியில் கூட வர்மம் இருக்கிறதா?
அது தேய்ந்துவிட்டது. இடையில் உள்ள திரவம் காலியாகிவிட்டது. உராய்கின்றது. இப்படியாகத்தானே ஆங்கில மருத்துவர்கள் முட்டிவலி என சென்றால் எக்ஸ்ரே எடுத்து பார்த்துவிட்டு கூறுவார்கள் அல்லது வயதாகிவிட்டது.இனிமேல் சரியாகாது என்று கூறுவார்கள்.
ஆனால் வயதுப் பிள்ளைகளுக்குக் கூட முட்டி வலிக்கிறது. உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியவில்லை. சிறிது நேரம் நின்றாலே நடக்க முடியவில்லை. அதிக நேரம் நிற்க முடியவில்லை என எத்தனையோ பிரச்சினைகள். இவை அனைத்துக்கும் முட்டி எலும்பில் வர்மம் கொண்டுள்ளதே காரணம். அறிவியல் பூர்வமாக உண்மையாக்கப்படவில்லை என இணையதளத்தைப் பார்த்துவிட்டு கூறிவிடுவார்கள். ஆனால், உணர்வுப் பூர்வமாக மெய்ப்பிக்க முடிகிறதே. அதற்கு என்ன சான்று தேவைப்படும்.
சரியாக வலி உள்ள இடத்தை முடிச்சு உள்ள இடத்தை தொடுகிறீர்களே, எப்படி என்று வர்ம வல்லுநரிடம் நோயாளிகள் எப்படி கேட்கிறார்கள். வர்ம வல்லுநருக்கு இவர்களுக்கு முட்டியில் எங்கே பிரச்சினை உள்ளது என்பது எப்படி தெரிகிறது. அதுதான் அனுபவத்தின் மகிமை. வர்ம மருத்துவத்தின் சிறப்பு மிகச் சரியாக ஒரு வாரத்தில் வலி குறைந்து பிரச்சினையும் தீர்ப்பது என்பது வெறும் வலி நிவாரணியை வழங்கும் மருத்துவருக்கு இயலாத காரியம்.
தற்போது முட்டியில் உள்ள வர்மங்கள் பற்றிக் காண்பது தற்கால தலைமுறையினருக்கும் நம் முட்டியில் என்னதான் நடக்கிறது. எக்ஸ்ரேயில் ஒன்றுமில்லை. ஆனால், வலிக்கிறதே என கவலையில் உள்ளவர்களுக்கும் ஒரு தெளிவை ஏற்படுத்தும்.
முட்டு வர்மம்
முழங்காலை ஊன்றி தரையில் முட்டுபடும்போது உள்ள பாகம் சிரட்டை என பாமர மக்கள் கூறுவர். இதனை பெடில்லா (patela) என ஆங்கில மருத்துவர்கள் கூறுவர். இந்தப் பகுதியில் அடிஇடி கொண்டால் உண்டாகும் விளைவுகள்.
பாகம் பார்க்க இயல்பாக இருக்கும் ஆனால், இருக்கும் இடத்தை விட்டு நகன்று இருக்கும்.
பொறுக்க முடியாத வலி, வேதனை இருக்கும்.
தளர்ச்சியாக இருக்கும்.
பக்க வர்மம்
முட்டுவர்மப் பகுதியின் இரு பக்கங்களிலும் உள்ளது. இந்த இடத்தில் பிரச்சினை இருந்தால் அந்த பாகம் வீங்கி காணப்படும். கால் மடக்கி நீட்ட முடியாத வலி இருக்கும். தரையில் மண்டியிட்டு அமர முடியாது.
மிக முக்கியமானதும் அதிகம் அலட்சியப்படுத்தக் கூடியதுமான வர்மம் முட்டி வர்மத்தின் நேர் பின்புறத்தில் உள்ளது. இதற்கு அசடுதிரி எனப் பெயர். இந்த இடத்தில் அடிபட்டால் கால் அசைக்க முடியாததாகிவிடும். கால் நடக்கும்போது மடக்கி நீட்ட முடியாததால் காலை நீட்டிய வாக்கிலேயே காலை வீசி நடப்பர். தொட்டுத் தடவி பார்த்தால் நரம்பின் முடிச்சு போல இருக்கும். அதனை எல்லோரும் நரம்புச் சுருட்டல் (varicose vein) எனத் தவறாக நினைத்துக் கொள்வர். ஆனால், நரம்பு சுருட்டல் காலின் எல்லா பாகத்திலும் வரும் சின்னச் சின்னதாகவோ, பெரியதாகவோ இருக்கும். ஆனால், இது வீணையின் நரம்புபோல் இருக்கும் மீட்டினால் அதிக வலி தரும். அழுத்தமாக காலின் பின்புறத்தில் இருக்கும்.
கண்ணு வர்மம்
முட்டிப் பகுதியினை அடுத்து காலினை மடக்கி வைத்து பார்த்தால் முட்டிக்கு அடுத்து கீழே இரு பக்கமும் சற்று குழிந்த பாகம் காணப்படும். பலருக்கு அந்த இடத்தில்தான் பிரச்சனையே இருக்கும். காலை மடக்கினால் வலிக்கிறது என்பார்கள். எலும்பின் மெல்லியதான பாகம் உள்ளதால் அங்கே செல்லும் நரம்புகள் பாதிக்கப்படுவதால் வலி உண்டாகிறது. இந்த பிரச்சினை இருந்தால் சரியாக கொஞ்சம் நாளாகும்.
நாய்த்தலை வர்மம்
கண்ணு வர்மத்தின் கீழ்ப்பகுதியில் உள்ளது பார்ப்பதற்கு நாயின் தலைபோல் உருவாகி இருப்பதால் இந்த பெயர் கொண்டிருக்கலாம். வீங்கி காணப்படும். ஆங்கில மருத்துவர் அழற்சி கொண்டுள்ளது என கூறுவர்.
அடுத்ததும் மிக முக்கியமான யாரும் அறியாத ஒரு வர்மம் குளிர்ச்சி வர்மம். இது தொடையின் அடிப்புறத்தில் காணப்படுகிறது.