வரகு எலுமிச்சை சாதம்

Spread the love

தேவையான பொருட்கள்

வரகு அரிசி                1 கப்

எண்ணெய்            2 டேபிள்ஸ்பூன்

கடுகு                1/4 டீஸ்பூன்

வேர்க்கடலை         1/4 டீஸ்பூன்

கடலைபருப்பு         1/4 டீஸ்பூன்

உளுந்தம் பருப்பு      1/4 டீஸ்பூன்

பச்சை மிளகாய்       2

கறிவேப்பிலை         சிறிது.

மஞ்சள் தூள்          1/4 டீஸ்பூன்

எலுமிச்சாறு          1 1/2 டேபிள்ஸ்பூன்

உப்பு                       தேவையானஅளவு

செய்முறை

வரகு அரிசியை நன்றாக கழுவி 10 நிமிடம் ஊற வைத்து 3 கப் தண்ணீர் சேர்த்து பாத்திரத்தில் வேக வைத்து வடித்துக் கொள்ளவும். வேக வைத்த சாதத்தை உதிரி உதிரியாக சிறிது நல்லெண்ணெய் சேர்த்து பிசறி பெரிய தட்டில் ஆற விடவும். பச்சை மிளகாய் இரண்டாகக் கீறவும். எலுமிச்சை சாறில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, வேர்கடலை, பச்சைமிளகாய் சேர்த்து தாளித்து கறிவேப்பிலை சேர்த்து எலுமிச்சை சாற்றில் கொட்டவும். இந்த கலவையை வடித்து ஆற வைத்த சாதத்துடன் சேர்த்து கரண்டி காம்பால் கிளறவும். கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். சுவையான வரகு எலுமிச்சை சாதம் தயார்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love