வளமாக வாழ வல்லாரை கீரை சாப்பிடுங்க..

Spread the love

வல்லாரையில் அதிக அளவு சுண்ணாம்பு சத்து, நார்சத்து, இரும்பு சத்து அடங்கியுள்ளது. இது தமிழ்நாட்டில் நீர் பகுதி நிறைந்த குளம், குட்டை, வயல் வரப்பு போன்ற இடங்களில் செழிப்பாக வளர கூடிய மூலிகை, வெப்பத்தில் இருந்து நம்மை காக்க இயற்கை அளித்திருக்கும் பல அம்சங்களில் ஒன்று தான் வல்லாரை.

படிக்கும் குழந்தைகளுக்கு மூளை நரம்புகளை தூண்டி நினைவாற்றலை பெருக்க வைக்கின்ற ஆற்றல் இந்த மூலிகையில் இருக்கும். வல்லாரை கீரையை கையை வைத்து பொடி செய்து பசும்பாலில் கலந்து குடித்தால் குடல் பூச்சிகள் அழிந்து வெளியேறும். இதனால் நாம் சாப்பிடும் உணவுகளில் இருந்து கிடைக்ககூடிய ஒரு ஊட்டச்சத்தும் நமக்கு கிடைக்கும். உடல் எடை மெலிந்து காணப்படுவதற்கு முக்கிய காரணம் ஒன்று உடல் சூடு, மற்றொன்று வயிற்று பூச்சு, வல்லாரையை இப்படி சாப்பிடுவதனால் அந்த பிரட்சனை தீரும்.

இதில் இரும்புசத்து இருப்பதனால் இரத்த சிவப்பு அணுக்கள் குறைபாடு உள்ளவர்கள் வல்லாரை கீரையை வாரத்தில் இரண்டு நாளாவது தவறாமல் எடுத்துக்கொள்ளலாம். இதனால் ரத்த சோகை வராமலும் தடுக்கலாம். சர்க்கரை நோயாளிகள் வல்லாரை கீரையை சாப்பிட்டு வந்தால் நோயின் தீவிரம் குறையும். இதில் நார்சத்து மிகுதியாக இருக்கும். அதனால் செரிமானம் சீராகி, மலச்சிக்கல் மற்றும் குடல் புண்னையும் ஆற்றும். தீராத கட்டினால் அவஸ்தைப்படுகிறவர்கள் வல்லாரையை அரைத்து கட்டி இருக்கும் இடத்தில் கட்டினால் விரை வீக்கம், வாயு வீக்கம், மற்றும் யானைக்கால் வீக்கமும் குறையும்.

வல்லாரையை துவையல் செய்தோ அல்லது கொதிக்க வைத்தோ தண்ணீரை குடித்து வர இருமல், கண் எரிச்சல் மற்றும் காசநோய் வராமலும் தடுக்கலாம்.  வல்லாரை இலையோடு சிறிய வெங்காயம், பூண்டு மற்றும் மிளகு சேர்த்து சட்னி மாதிரி அரைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், மூளை நரம்புகள் புத்துணர்ச்சிபெறும். இதனால் மன அழுத்தம் நீங்கி படிப்பிலும் நல்ல கவனம் செலுத்தலாம். கீரையை விழுது மாதிரி அரைத்து காலையில் விழுங்கி வந்தால் சிறுநீர் எரிச்சல், தோல் அரிப்பு சரியாகும். 

ஆயுர்வேதம்.காம்


Spread the love