வள்ளலார் சொன்ன மருத்துவ மூலிகைகள்

Spread the love

வள்ளலார் உணவு மாறுபாட்டினாலும், கவனக்குறைவு மற்றும் ஊழ் வகையாலும் ஏற்படும் நோய்களிலிருந்து விடுபட பல அரிய மூலிகைகளையும், மருத்துவ முறைகளையும் திருவருட்பாவில் எழுதியிருக்கிறார். அதில் சில மூலிகையினால் கிடைக்கும் பயன்கள்:

கரிசலாங்கண்ணி – உடல் வசீகரம் அதிகரிப்பதுடன் உடல் வலுவடையும். பொற்றாலைக் கையாந்தகரை – உடல் வலுவாகும். தூதுவளை – சளித்தொல்லைகளைப் போக்கி புத்தி அதிகரிக்கச் செய்யும். வல்லாரை – காம உணர்வுகளை அகற்றி ஞான உணர்வு அளிக்கும். ஞாபகத்திறன் அதிகரிக்கும்.

புளியாரை – காயசித்தி,  பித்தமர்த்தினி,  

பொன்னாங்கண்ணி –  கண்ணொளி,    வெப்பசமனி,

அரைக்கீரை – சுரம் போக்கும்

அகத்தி – வேக்காடு போகும்

முசுமுசுக்கை – க்ஷயமர்த்தனி

கீழாநெல்லி – காமாலை போக்கி, பித்தம் போக்கி

மணத்தக்காளி – தணலாற்றி

துளசி – தோசம் போக்கி

முடக்கொத்தான் – வாதம் போக்கி

இருவாட்சி – இரத்த பித்தம் போக்கி

செண்பகம் – பருக்கள் போக்கி

குப்பைமேனி – உப்புக்கட்டு

பொடுதலை – வயிற்றுக் கடுப்பு, போக்கும், வெட்டை

போக்கும், நீரொழுக்குப் போக்கும்

குமட்டி – வாதம் மாற்றும்

கண்டங்கத்தரி – சுவாச மர்த்தனி

சிறுவழுதலை – சுவாச காச மர்த்தனி

கொன்றை – கிருமி மர்த்தனி

விளா – பித்தம் போக்கி

பாகல் – பாஷான தோச மர்த்தனி

அத்தி – பெரும்பாடு போக்கி, உஷ்ண சமனி

பூவரசு – சகல குஷ்டம் போக்கி

ஆடாதொடை – சுரம் போக்கி

வேம்பு – பித்தம் போக்கி

தாமரை – கண் குளிர்ச்சி

நந்தியாவட்டம் – கண்ணுக்குக் குளிர்ச்சி

எலுமிச்சை – பித்தம் போக்கி

முந்திரிப்பழம் – தோசம் போக்கி

திப்பிலி – தாது விருத்தி

வெற்றிலை – ஜீரணகாரி

சுண்டை –  சுரம்போம்

பூசணி – ஊறல் போக்கும், வசீகரி

விலாமிச்சை – பித்தம் போக்கி

நன்னாரி – தேக சித்தி

சர்க்கரை – தாகம் போக்கி, மயக்கம் போக்கி

கரும்பு – கல்லுடைப்பு போக்கி

வெண்கரும்பு – க்ஷயம் போக்கி

முருங்கை – கண்ரணம் போக்கி

முருங்கைக் கீரை – மலம் போக்கி

பேயன் வாழை – காயசித்தி

பேயன் தண்டு – சர்வ விச நாசினி

பேயன் பழம் – ஜீரணகாரி, மலம் போக்கி

வாழைப்பூ – பெரும்பாடு போக்கி

இப்படி சுமார் 480 மூலிகைகள் குறித்தும் மருத்துவக் குறிப்புகள் குறித்தும் வள்ளலார் தெரிவித்துள்ளார்.

தொகுப்பு: சித்ரா பலவேசம்.

மேலும் தெரிந்து கொள்ள…

https://www.youtube.com/channel/UCVomVtXE3uRJ9PKz088mQFQ


Spread the love