வயிறு/நெஞ்சு எரிச்சல்

Spread the love

            வயிற்றெரிச்சலை நெஞ்செரிச்சல் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். உணவுக்குழாய் அமிலத்தால் பாதிப்படைந்திருப்பது தான் இதன் முக்கிய காரணம். வயிற்றிலிருந்து அமிலம் அடிக்கடி மேலேறி உணவுக் குழாயை அரித்து விடுவதை ஒஸோபேகைடீஸ் எனப்படும். இரப்பைக்கும் உணவுக்குழாயின் கடைசி பகுதிக்கும் இடையே உள்ள ஒரு வழி வால்வு எப்படி அமிலத்தை மேலேற விடலாம் என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் உண்ணும் சில உணவுகளால் இந்த வால்வு பழுதடையும்.

•             உதாரணமாக கொழுப்பு உணவுகள் வால்வின் அழுத்தத்தை குறைக்கும். வால்வின் அழுத்தம் சீராக இருந்தால் தான் வால்வு இறுக்கமாக மூடிக் கொள்ளும்.

•             அதே போல் சாக்கலேட்டில் காஃபின் மற்றும் தியோ ப்ரோமைன் பொருட்களும் வால்வின் அழுத்தத்தை குறைத்து விடும். அதே போல் ஆல்கஹால் (சாராயம்)

•             காப்பி காஃபின் செறிந்தது. வால்வை பாதிப்பது மட்டுமில்லாது, அமிலச் சுரப்பையும் அதிகரிக்கும் கைங்கர்யத்தையும் செய்யும்.

•             சிகரெட்டில் உள்ள நிகோடினும் வால்வை பாதிக்கும்.

•             ‘சிட்ரஸ்’ பழவகைகளின் சாறு – ஆரஞ்ச், தக்காளி பழ சாறுகள் உணவுக் குழாயில் எரிச்சலை உண்டாக்கலாம்.

•             தவிர ‘ஹெர்னியாவும்’ இஸோ ஃபேக்டீஸை உண்டாக்கும்.

“உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு” என்பார்கள். ஆனால் உண்ட பின் படுக்காதீர்கள். குனிந்து நிமிர்ந்து வேலை செய்யாதீர்கள். கொஞ்ச நேரமாவது மெதுவாக நடை பயிலுங்கள். இல்லை உட்கார்ந்திருங்கள்.

            அடுத்த பாதிப்பு “அக்கலேஸியா’ உணவுக்குழாய் தசைகள் அசைந்து நெளிந்து உணவை இரப்பைக்குள் தள்ளும் வேலையை செய்பவை. இதில் பாதிப்பு ஏற்பட்டால் ஒரு பகுதியில் தசைகள் சரியாக தள்ளும். இன்னொரு பகுதியில் தசைகள் வலிவிழந்து இறுகிவிடும். சாதாரணமாக இது உணவுக்குழாயின் அடிப்பகுதி தசைகளில் ஏற்படும். இறுக்கம். அதனால் உணவு இரைப்புக்குள் செல்லமுடியாமல் தேங்கி நிற்கும். எந்த வயதிலும் இந்த அக்கலேஸியா வரலாமென்றாலும், சாதாரணமாக 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகினறனர். இதன் அறிகுறிகள் விழுங்குவதில் சிரமம். மார்புவலி.

வீட்டு வைத்தியம்

•             காய்ச்சி, நன்றாக குளிர்விக்கப்பட்ட பாலை இரண்டு, மூன்று வேளை குடிக்கவும். பசுவின் பாலாக இருந்தால் உத்தமம். ‘ஜில்’ லென்று சர்க்கரையுடன் சேர்த்து (நீரிழிவு நோயாளிகள் தவிர) குடிக்கவும். இஞ்சி போட்டு காய்ச்சியும் குடிக்கலாம். பால் ஒரு நாளைக்கு 200 லிருந்து 500 மி.லி. குடிக்கலாம்.

•             சர்க்கரை சேர்த்த தண்ணீரை குடிக்கலாம்.

•             சந்தனம் கரைத்த கஷாயத்தை குடிக்கலாம். அளவு 50 மி.லி.

•             ஒரிரவு ஊற வைத்த நெல்லிக்காயை உலர வைத்து பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியில் ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு இத்துடன் 1/2 தேக்கரண்டி இஞ்சிப் பொடி, 1/2 தேக்கரண்டி சர்க்கரை, 1 தேக்கரண்டி நெய், சேர்த்து கலக்கவும். இந்த கலவையில் 1 தேக்கரண்டி தினமும் காலையில் எடுத்துக் கொள்ளவும்.

•             பெருஞ்சீரகத்திலிருந்து எடுத்த சாரத்தில், 4 துளிகளை எடுத்து, ஒரு தேக்கரண்டி தேனுடன் தினசரி 3 வேளை உட்கொள்ளலாம்.

•             உலர்ந்த, பெரிய கருப்பு திராட்சையுடன், சிறிய கடுக்காயை சேர்த்து நசுக்கவும். சிறு உண்டையாக உருட்டி ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிடவும்.

•             தனியாப்பொடி, சீரகப்பொடி, சர்க்கரை – இவைகளை ஒரு தேக்கரண்டி அளவில் எடுத்துக் கொண்டு கலக்கவும். இந்த கலவையில் ஒரு தேக்கரண்டி எடுத்து ஒரு கப் சுடு நீரில் போட்டு, தினம் மூன்று வேளை குடிக்கவும்.

•             முட்டைக்கோஸ் ஜீசுடன் (2 மேஜைக்கரண்டி) ஒரு மேஜைக்கரண்டி தேன் சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இதை 2 மாதம் எடுத்துக் கொள்ளவும்.

•             சுரைக்காய் ஜுஸ் (2 மேஜைக்கரண்டி) + ஒரு மேஜைக்கரண்டி, பொடித்த சீரகம், தினம் காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

•             வெறும் சர்க்கரை சேர்ந்த தண்ணீர் குடித்தாலே அமில அளவு குறையும்.

ஆயுர்வேத மருந்துகள்

•             சதுர்முக ரஸ

•             தாத்ரீலோஹம்

•             காமதுகா ரஸ

•             லீலாவிலாஸ ரஸ

•             ஸப்தாம்ருத லோஹம்

•             சூரணங்கள் – த்ரிபால சூரணம், அவிபித்தகாக சூரணம்


Spread the love