ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் திருவள்ளூர்
புருபுண்ணியர் என்ற முனிவர், புத்திர பாக்கியத்திற்காக மகாவிஷ்ணுவை இதன் பலனாக பிறந்த ஆண் குழந்தைக்கு யாகத்தின் பெயரால், “சாலிகோத்தர்” என்று பெயர் சூட்டினார். சாலிகோத்ரரும் பெருமாள் பக்தராக விளங்கினார். இங்குள்ள தீர்த்தக்கரையில் பெருமானின் தரிசனம் தவமிருந்தார். சுவாமிக்கு தினைமாவு படைத்து. யாராவது ஒருவருக்கு கொடுத்தபின்பு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு சமயம் பூஜையின் போது வந்த முதியவர், பசிப்பதாகச் சொல்லி உணவு கேட்டார். மகரிஷி அவருக்கு சாப்பிட சிறிது தினை மாவு கொடுத்தார். அதைச் சாப்பிட்டவர் தனக்கு மேலும் பசிப்பதாகச் சொல்லவே. தான் சாப்பிட வைத்திருந்த மாவையும் கொடுத்தார். தனக்கு களைப்பாக இருப்பதாகச் சொன்னவர், சயனத்தில் சாய்ந்து மகாவிஷ்ணுவாக சுயரூபம் காட்டியருளினார். பின்னர் இவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது. அஹோபிலமடம் ஆதீன பரம்பரை மிராசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் இது.
வெற்றி தரும் விமான தரிசனம்
மகரிஷிகள் சிலர் இங்கு ஒரு யாகம் நடத்தினர். அப்போது இரண்டு அசுரர்கள். யாகத்தை நடத்த விடாமல் தொந்தரவு செய்தனர், ரிஷிகள் மகாவிஷ்ணுவை வேண்டவே, அவர் அசுரர்களை வென்று, யாகம் தொடர்ந்து நடக்க அருளினார். இந்த வெற்றியைக் குறிக்கும் வகையில் “விஜயகோடி விமானம்” அமைக்கப்பட்டது. இந்த விமானத்தை தரிசனம் செய்தால் அனைத்துச் செயல்களிலும் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பாவம் போக்கும் தீர்த்தம்
கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடினால் செய்த பாவங்கள் தீரும், இங்குள்ள தீர்த்தத்தை நினைத்தாலே, பாவங்கள் நீங்கிவிடும் என்பது ஜதீகம். இதனால் “ஹருத்தாபநாஸினி” என்று இத்தீர்த்தத்திற்கு பெயர், மனதில் எண்ணும் பாவங்களைக் கூட இந்த தீர்த்தத்தை நினைத்தால் மன்னிக்கப்பட்டு விடும், ஒன்பது கரைகளுடன் அமைந்த மிகப்பெரிய தீர்த்தம் இது.
அமாவாசை தலம்
சாலிகோத்ர மகரிஷிக்கு, மகாவிஷ்ணு ஒரு தை அமாவாசை யன்று காட்சி கொடுத்தார். இதனால் இத்தலம் அமாவாசை வழிபாட்டிற்குரியதாகத் திகழ்கிறது. அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். அமாவாசை யன்று இங்கு வரும் பக்தர்களுக்கு தினை மாவு பிரசாதம் தருகின்றனர். பிதுர்கள் நம்மைத் தேடி வரும் புரட்டாசி மகாளய அமாவாசையன்று இங்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது விசேஷ பலன் தரும். இவ்வாண்டு வரும் 18ம் தேதி மகாளய அமாவாசை வருகிறது.
மகளாக வந்த தாயார்
இங்கு அருளும் கணகவல்லித் தாயார், இப்பகுதியை ஆண்ட தர்மசேனன் என்ற மகாராஜாவின் மகளாக அவனே அறியாமல் பிறந்தாள். அவள் திருமாணப்பருவம் அடைந்தபோது தன் மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டி, மன்னன் சுவாமியை வேண்டினான். சுவாமியே, இளைஞனாக வடிவம் தாங்கிச் சென்று கனகவல்லியை மணம் முடித்துத் தரும்படி கேட்டார். கனகவல்லிக்கும் அந்த இளைஞனைப் பிடித்துப்போகவே, அவருக்கு தன் மகளை மணம் முடித்துக்கொடுத்தார். பின்னர், இருவரும் சுவாமி சன்னதிக்குள் சென்று மறைந்தனர். தன்னிடம் மகளாக வளர்ந்தது “தயார்” என்பதை அறிந்த என்றும் பரவசப்பட்டான். பின்னர், தாயாருக்கு தனிச்சன்னிதி கட்டப்பட்டது. வசுமதி என்றும் இவளுக்குப் பெயருண்டு, மன்னன் வசித்ததாகக் கருதப்படும். ஈக்காடு என்னுமிடத்திலும் தாயாருக்கு சன்னதி இருக்கிறது. தை பிரம்மோற்ஸவத்தின் போது, 3 நாட்கள் சுவாமி இங்கு சென்று வருவார்.
வயிற்று வலி தீர்க்கும் பாட்டு
திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் மற்றும் வேதாந்த தேசிகனால் மங்களாசானம் செய்யப்பட்ட தலம் இது, வள்ளலாரும் சுவாமியை போற்றிப்பாடியுள்ளார். ஒரு சமயம் வள்ளலாருக்கு தீராத வயிற்று வலி உண்டானது. இங்கு வந்து சுவாமியை வணங்க, அவரது வலி நீங்கியது. மகிழ்ந்த வள்ளலார் சுவாமியை வணங்கி போற்றிப்பஞ்சனம் பாடினார். வயிறு உபாதை உள்ளவர்கள் இந்த பாடலைப் பாடி சுவாமியை வணங்குகிறார்கள்.
எவ்வுள் கிடந்தான்.
இத்தலத்திற்கு வந்த திருமங்கையாழ்வார் சுவாமியை மங்களாசாசனம் செய்த போது, ராவணனை சமஹாரம் செய்த ராமன், இங்கு பள்ளி கொண்டிருப்பதாக பாசுரம் பாடினார். இதனால் சுவாமிக்கு “வீரராகவர்” (அசுரர்களை வென்றதால் வீரர், ராகவர் என்றால் ராமன்) என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர், “எவ்வுள் கிடந்தான்” என்றும் இவருக்குப் பெயருண்டு, சுவாமி, முதியவராக வந்த போது மகரிஷியிடம் “தான் எங்கே படுப்பது? என்ற அர்த்தத்தில் எவ்வுள்? என்று ஒரே வார்த்தையில் கேட்டார் இதனால் சுவாமிக்கு இந்த திருநாமமே அமைந்து விட்டது.
வைத்திய பெருமாள்
வீரராகவப்பெருமாள் ஆதிசேஷன் மீது தெற்கே தலை வைத்து புஜங்க சயனக்கோலத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். இவர் முதியவராக தனியே வந்தவர் என்பதால், அருகில் தாயார்கள் கிடையது. மார்பில் மகாலட்சுமி, நாபியில் பிரம்மா இருக்கின்றனர். சாலிகோத்தரருக்கு காட்சி தந்து சுவாமி, அவரது தலை மேல் கை வைத்து ஆசிர்வதித்தார். இந்த கோலத்திலேயே தற்போதும் காட்சியளிக்கிறார். தீராத நோய்களை தீர்த்து வைப்பவர் என்பதால் சுவாமியை” வைத்திய வீரராகவப்பெருமாள்” என்றும் அழைக்கின்றனர். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தீர்த்தத்தில் பால், வெல்லம் கரைத்து வழிபடுகிறார்கள். நோய் குணமானதும் உருவ காணிக்கை செய்து நேத்திக்கடன் செலுத்துகின்றனர்.
சுவாமியே பிரதானம்
இக்கோயில் பிரகாரத்தில் ராமபிரானுக்கு சன்னிதி உள்ளது. ராமநவமியன்று, வீரராகவப்பெருமாள் அச்சன்னதிக்கு எழுந்தருள்வார். வீரராகவப்பெருமாளே இங்கு பிரதானம் என்பதாலும், இவரே ராமனாக (ராகவன்) அருளுவதாலும் இவருக்கே ராமநவமி பூஜையைச் செய்வர். சித்திரை பிரம்மோற்ஸவத்தின் போது சுவாமி கண்ணாடிப் பல்லக்கில் எழுந்தருளுவார். இவவேளையில் எண்ணற்ற சுவாமியின் பிம்பங்கள் கண்ணாடியில் தெரியும், திருமால் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர் என்பதை உணர்த்தும் விதமாக இந்த வைபவம் நடக்கிறது. கார்த்திகைத் திருநாளன்று சுவாமிக்கு சந்தன தைலக்காப்பு சாத்தப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பொடி செய்யப்படும் சந்தனத்துடன் தைலம் சேர்ந்து, வீரராகவப்பெருமாளுக்கு காப்பிடுகின்றனர்.
துணைவர்
இத்தலத்தில் வசித்த பேசும் திறனற்ற ஒருவர், அமாவாசை தோறும் இங்கு தீர்த்த நீராடுதலை வழக்கமாகக் கொண்டிருந்தார். வாழ்நாள் முழுவதும் பேச முடியாத இவர். தனது அந்திமக்காலத்தில் “பப்புளி துப்பட்டியுடன் பெருமாள் வந்து என்னை அழைத்துக்கொண்டு போகிறார்” என இரண்டு முறை சொல்லிவிட்டு உயிரை விட்டார். தன்னை வழிபட்டவர்களுக்கு அந்திமக் காலத்தில் பின்பு துணைவருபவராக இத்தல பெருமாள் அருளுகிறார். உதிரிப்பூக்கள் திருப்பதி போலவே, இத்தலத்திற்கு தனியே சுப்ரபாதம் உண்டு வீரராகவரை வணங்க பதவி, தலைமைப்பொறுப்பு கிடைக்கும் என திருமங்கையாழ்வார் மங்களா சாசனம் செய்துள்ளார்.
நவராத்திரியின் 9 நாட்களும் சுவாமி தயார் இருவரும் கண்ணாடி அறையில் சேர்த்தியாகக் காட்சி தருவார். யோக நரசிம்மருக்கு இங்கு சன்னதி உள்ளது. இவருக்குரிய உற்சவர் மகாலட்சுமியுடன் அனுக்கிரகம் செய்யும் மூர்த்தியாக அருளுகிறார்.