வெள்ளைபடுதல்

Spread the love

பெண்களில் இனப் பெருக்க உறுப்புகளில் சுரப்பு என்பது இயற்கையான ஒன்றேயாகும். பெண்கள் இயற்கையான இயல்பான சுரப்பிற்கும் வெள்ளை படுதலுக்கும் உள்ள வித்தியாசங்களை உணர்வது அவசியம் எவ்வாறு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவுகளில் உடலில் வியர்வை உண்டாகின்றதோ அதே போல பெண்களின் பெண் உறுப்பில் சுரப்பு ஏற்படும்.

ஆனால் வெள்ளைபடுதல் என்பது அதிகமான வெள்ளை நிற அல்லது மஞ்சள் நிறமான அளவிற்கு அதிகமான சுரப்பினைக் குறிக்கும். வெள்ளைபடுதலுடன் பலஹீனம், இடுப்பு வலி, முதுகு வலி, மூட்டு வலி, மற்றும் உடல் சோர்வு சேர்ந்தே தோன்றும். இவை இருந்தால் மட்டுமே அது வெள்ளைபடுதலாகும்.

பெண்களின் தொற்றுநோய்களும், வெள்ளைபடுதலும் பெண்களுக்கு வரும் தொற்று நோய்கள். யோனியில் அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் (Vaginal candidiasis) கெட்டியாக, நாற்றமில்லா, தயிர் போன்ற வெண் திரவம் வருதல், அரிப்பு, சிறுநீர் போகையில் எரிச்சல், புண்ணாகுதல், உடலுறவின் போது வலி, இவை அறிகுறிகள் ஆகும். பெண்ணுறுப்பில் சாதாரணமாக இருக்கும் Candida Albicans எனும் காளானால் (Yeast) அதிக வளர்ச்சியால் விளையும் பொதுவான பெண்ணுறுப்பின் தொற்று பாதிப்பு தான் Vaginal candidiasis.

பேக்டீரியா வாஜினோஸிஸ் (Bacterial Vaginosis)  – நாற்றமுடைய, நீர்த்த, மஞ்சள் அல்லது வெள்ளைநிற திரவம் வெளியேறுதல், உடலுறவின் பின் நாற்றம் அதிகரித்து, அரிப்பும் எரிச்சலும் ஏற்படும்.

சாலமைடியல் தொற்று (Chlamydial Infection) – இது ‘சாலமைடியல்’ என்ற பேக்டீரியாவால் வரும் தொற்றுநோய். இந்த பாக்டீரியா, வைரஸ் போலவே சிறியது. Gram – Negative வகையை சேர்ந்தது. இதன் அறிகுறிகள் – மஞ்சள் நிற, சளி போன்ற திரவம் வெளியேறுதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கையில் வலி, அசாதாரணமான இரத்தப் போக்கு இவைகளாகும்.

டிரைகோமனியாசிஸ்  வாஜினாலின் – (Trichomanasis Vaginalis) அரிப்பு, சிறுநீர் கழிக்கையில் வலி, அதிகமாக பச்சை மஞ்சள் நிற, நுரையுடன் கூடிய, மீன் நாற்றமுடைய திரவப்போக்கு இவை அறிகுறிகள். இந்த நோய்களில் மிகவும் அதிகமாக காணப்படுவது (Vaginal candidiasis).

பல சமயம் அரிப்புடன் சேர்ந்து இருக்கும். துர்நாற்றம் வீசும் இதனால் திருமணமானவராக இருந்தால் கணவருக்கும் ஆணுறுப்பில் அரிப்பு ஏற்படும். இதற்கு அடிப்படை காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் TRICHOMONAS VAGINALIS என்ற பூசணம் பெண் உறுப்பில் வளர்வதேயாகும். இந்த பூசனம் தொற்றை உண்டாக்கும். அரிப்பு இல்லாத வெள்ளைபடுதல், கர்பமாக இருக்கும் பொழுதும் கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் பொழுதும் நீரிழிவு நோய் உள்ள போதும் கூட ஏற்படும்.

அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல்

பெண்ணுறுப்பில் சாதாரணமாக இருக்கும் ‘கான்டிடா அல்பிகான்ஸ்’ (Candida Albicans) எனும் காளானின் (Yeast) அதிக வளர்ச்சியால் விளையும் பொதுவான பெண்ணுறுப்பின் தொற்று பாதிப்பு தான் (Vaginal candidiasis).

இது எதனால் ஏற்படுகிறது?

குறைந்த நோய் எதிர்ப்பு, சக்தி பலவீனமான உடல் ஆரோக்கியம்.

இந்த காளான் வகை தொற்றுக்கிருமிகள் சளி, காய்ச்சல் முதலியவற்றுக்காக சாப்பிடும் Anti – Biotic மாத்திரைகளாலும் அதிகமாக வளர்ச்சி அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் உண்டாகிறது.

கர்ப்பம் அல்லது கருத்தடை மாத்திரைகளால் ஹார்மோன் அளவுகள் மாறி இந்த காளான்கள் வளர சரியான சூழ்நிலை உண்டாகிறது.


Spread the love
error: Content is protected !!