கிறிஸ்துமஸ் டின்னர்

Spread the love

உலகெங்கும் கிறிஸ்துமஸின் போது கோழி, மட்டனை விட டர்கி எனப்படும் வான்கோழியை அதிகமாக சமைக்கப்பட்டு உண்ணப்படுகின்றனர். கீழே இந்திய வான்கோழி பிரியாணி செய்முறை தருகிறோம்.

வான்கோழி பிரியாணி

தேவை

பாஸ்மதி (அ) ஜீரக சம்பா பச்சரிசி      3 கப்

வான்கோழியின் பக்கவாட்டு பாகங்கள் – 900 கி

மஞ்சள் பொடி                             – 1/4 டீஸ்பூன்

வெங்காயம்                                2

தக்காளி                                    2

நறுக்கிய கொத்தமல்லி தழை           1 கைப்பிடி

நறுக்கிய புதினா இலை                  – 1 கைப்பிடி

இஞ்சி பேஸ்ட்                            2 டீஸ்பூன்

பூண்டு பேஸ்ட்                            – 1 டீஸ்பூன்

பெருஞ்சீரகம்                              1 டீஸ்பூன்

தேஜீபட்டா (லவங்க செடியிலை)        – 2

லவங்கப்பட்டை                           2 அங்குலம்

ஏலக்காய்                                  2

லவங்கம்                                   4

தயிர்                                        1 கப்

நெய்                                        2 டே.ஸ்பூன்

ஆலிவ் எண்ணெய்                        – 3 டே.ஸ்பூன்

மிளகாய்ப்பொடி                           2 டீஸ்பூன்

நறுக்காத பச்சைமிளகாய்                5

எலுமிச்சை                                1

முந்திரிப்பருப்பு                           10

உலர்ந்த திராட்சை                       – 10

குங்குமப்பூ கலர்                         – 2 துளி

ரோஜா எஸன்ஸ்                         – 2 துளி

பால்                                       2 டே.ஸ்பூன்

உப்பு                                       – தேவையான அளவு

குறிப்பு

வான்கோழி பிரியாணியின் சுவை அதிகரிக்க வான்கோழி மாமிசத்தை ஒரு நாள் முன்பு மசாலாக்களில் தோய்த்து வைக்க வேண்டும். சரியாக சமைக்கும் முன்பு 24 மணி நேரம் தான் ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த மாமிசத்தை ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லது. இதை செய்யும் முறை – வான்கோழி மாமிச பாகங்களை நன்றாகக் கழுவவும். பெரிய துண்டுகளாக வெட்டவும். அதன் மேல் 1/4 கரண்டி மஞ்சள் பொடியை தடவவும். பிறகு 1 கப் தயிர் அதில் 2 டீஸ்பூன் மிளகாய்ப்பொடி, கரம் மசாலாப் பொடி, 1 டீஸ்பூன் இஞ்சி பேஸ்ட், 1/2 டீஸ்பூன் பூண்டு பேஸ்ட், 2 டீஸ்பூன் உப்பு, 1/2 மூடி எலுமிச்சைபழச்சாறு இவற்றை கலந்து அதில் வான்கோழி மாமிசத்தை தோய்த்து வைக்கவும். ஒரு பாலித்தீன் பையில் மூடி ஒரு மூடிய பாத்திரத்தில் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

க்ரேவி செய்முறை

அடிகனமான வாணலியில் 3 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை காய்ச்சவும். பெருஞ்சீரகம், லவங்கப்பட்டை, ஏலக்காய், லவங்கம், தேஜீபட்டா இவற்றை சேர்க்கவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பாதியை எடுத்து தனியாக வைக்கவும்.

இப்பொழுது நறுக்கிய தக்காளி சேர்த்து எண்ணெய் கசியும் வரை வதக்கவும். மீதியுள்ள இஞ்சி, பூண்டு பேஸ்ட்டுகளை போட்டு நன்றாக கலந்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இப்பொழுது ஃப்ரிட்ஜில் வைத்த வான்கோழி மாமிசங்களை போட்டு சிறிது நேரம் வதக்கவும். பிறகு ப்ரஷர் குக்கரில் போட்டு நான்கு விசில் வரும் வரை வேக விடவும். அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

அரிசியை சமைக்கும் முறை

அரிசியை கழுவி அரை மணிநேரம் ஊற விடவும். அடுப்பில் பத்து கப் தண்ணீரை கொதிக்க விடவும். அத்துடன் எலுமிச்சை சாறு , 2 டீஸ்பூன் உப்பு சேர்த்து கிளறவும். பிறகு ஊற வைத்த அரிசியை சேர்க்கவும். பாதி வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி நீரை வடிகட்டவும். வடிகட்டிய அரிசியை தனியே வைக்கவும்.

அலங்கரிக்க

முந்திரிப்பருப்பையும், உலர்ந்த திராட்சையையும் ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு வதக்கவும். தனியே எடுத்து வைக்கவும்.

பிரியாணி அடுக்குகளை தயாரித்தல்

ஒரு பேகிங் தட்டை எடுத்து அதில் பாதி அரிசியை பரவலாக நிரப்பவும். இதன் மேல் வான்கோழி கிரேவியை பரப்பவும். மறுபடியும் இன்னொரு அடுக்கு அரிசியை பரவலாக நிரப்பவும்.

இதன் மேல் நறுக்கிய புதினா இலை, நறுக்கிய கொத்தமல்லி, நறுக்காத பச்சை மிளகாய், வதக்கிய வெங்காயம், முந்திரிப்பருப்பு, மற்றும் உலர்ந்த திராட்சையை பரப்பவும்.  2 டீஸ்பூன் பாலுடன் இரு துளிகள் ரோஜா எஸன்ஸையும், குங்குமப்பூ கலரையும் கலக்கவும்.

இதை அரிசியின் மேல் பாகத்தில் தூவவும். இவற்றின் மேல் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை தடவவும்.  தட்டை ஒரு அலுமினிய ஃபாயிலால் மூடவும். முன்பே சூடுபடுத்திய அவனில் 350 டிகிரி எஃப் சூட்டில் ஒரு மணி நேரம் சமைக்கவும்.

வான்கோழி பிரியாணியை சூடாக வெங்காய பச்சடியுடனும், கோழி கிரேவியுடனும் பரிமாறலாம். உணவு நலம் டிசம்பர் 2010

கிறிஸ்துமஸ், டின்னர், வான்கோழி, பிரியாணி, செய்முறை, பாஸ்மதி, வான்கோழி, பக்கவாட்டு பாகங்கள், மஞ்சள் பொடி, வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி தழைபுதினா இலை, இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட், பெருஞ்சீரகம், தேஜீபட்டா, லவங்க, செடியிலை, லவங்கப்பட்டை, உப்பு, க்ரேவி, செய்முறை, ஆலிவ் எண்ணெய், பெருஞ்சீரகம், லவங்கப்பட்டை, ஏலக்காய், லவங்கம், தேஜீபட்டா,

இஞ்சி, பூண்டு, பிரியாணி, அடுக்குகளை, தயாரித்தல், அரிசி, வான்கோழி கிரேவி, புதினா இலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், வதக்கிய வெங்காயம், முந்திரிப்பருப்பு,


Spread the love