விட்டமின்& ஏ:& இது கொழுப்பில் கரையும் விட்டமின் ஆகும். கரோட்டின் என்னும் பொருளானது குடல் சுவரிலோ அல்லது கல்லீரலிலோ விட்டமின் ‘ஏ’ யாக மாறுகிறது. விட்டமின் ‘ஏ’ குறைவால் மாலைக்கண் நோய் ஏற்படுகிறது. விட்டமின் ‘ஏ’ போதுமான அளவுக்கு உடலில் இருந்தால் சருமம் வறண்டு போகாமல் கருக்காமல் பளபளப்பாக இருக்கும். பற்கள் நன்றாக வளரும்.
விட்டமின் ‘ஏ’ முட்டைகோஸ், கொத்தமல்லிக்கீரை, பச்லைக்கீரை போன்ற கீரை வகைகளிலும், காரட் சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பறங்கிக்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.
விட்டமின்‘பி’&& அரிசி கோதுமை போன்றவற்றை தீட்டி மாவுப்பொருளாக உமிநீக்கிய பாலிஷ் செய்யப்பட்ட தான்யங்களாக பயன்படுத்தப்படும் பொழுது அதில் உள்ள சத்துக்கள் நீக்கப்பட்டு விடுகின்றன. விட்டமின் பி1 குறைபாடு காரணமாக பெரிய பெரிய நோய் ஏற்படுகின்றது. காலிலும் பாதத்திலும் திடீர் வலி உணர்ச்சியின்றி காணப்படுதல் நரம்புவலி, மற்றும் உடல் பலகீனமாதல் போன்றவையெல்லாம் பெரிபெரிக்குரிய அறிகுறிகள் ஆகும்.
பெரி பெரி நரம்புகளை சீரழித்து விடுகிறது. இது உணர்ச்சியின்றி காணப்படுவதற்கு தசைப் பலகீனத்திற்கும் காரணமாகிறது. இதயம் விரிந்து பலம் குறைந்து இதன் காரணமாக மார்புக்கடியில் வலி உண்டாகின்றது. பாதங்கள் வீங்கிக் கொண்டு, இந்த வீக்கம் மேலே ஏறும் வீக்கம் பரவி வயிறு வரைக்கும் வரக்கூடும்.
விட்டமின் பி2 அல்லது ரைபோபிளேவின்:& பால் முட்டை பச்சை இலைக்காய்கறிகள், பயறுகள் போன்றவற்றில் விட்டமின் பி2 அதிகம் காணப்படுகிறது. இந்த விட்டமின் குறைவு காரணமாக வாய் ஓரங்களில் வெடிப்பு ஏற்படும்.
நாக்கிலும் புண்கள் தோன்றும். கார்னியா, கண் இமை இவற்றில் உள்ள இரத்த குழாய்கள் விரிந்து போவதால், கார்வையும் மங்கிப்போகிறது. கண் எரிச்சல், உறுத்தல் காணப்படும்.
விட்டமின்பி6: & பைரி டோசைன் என்ற பெயரும் விட்டமின் பி6 க்கு உண்டு. சிடுசிடுப்பு திடுக்கிட்டுப்போதல், இரைப்பையிலும், குடலிலும் கோளாறுகள் விட்டமின் பி6 குறைவு காரணமாக ஏற்படும்.
விட்டமின் ‘சி’:& அஸ்கார்பிக் அமிலம் செவிடாமிக் அமிலம், ஆண்டி&ஸ்கார்பூடிக் விட்டமின் என்கிற பெயர்களும் உண்டு. விட்டமின் ‘சி’ குறைவின் காரணமாக பலகீனம், சோர்வு, தசைகளில், மூட்டுகளில் வலி காணப்படும். மயிர்காலின் அடிவேரைச் சுற்றி இரத்தப்பெருக்கு இருக்கும். சில சமயம் தசைகளின் ஆழத்திலும், மூட்டுக்குள்ளேயும் இரத்தம் ஒழுகும். அதனால் வலி ஏற்படும். ஈறுகளிலும் இரத்தம் வருவதுண்டு. நெல்லிக்காய், கொய்யா, ஆரஞ்சு, தக்காளி இவற்றில் விட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. முருங்கை இலை, கொத்தமல்லிக்கீரையிலும் உள்ளது. இந்த விட்டமினைப் பாதுகாக்க, உணவு தயாரிக்கும்போது வெகு கவனமாக இருக்க வேண்டும். இது கொதி தாங்காது. உலர்த்தினால் அதிக நேரம் உணவுப் பண்டத்தைப் போட்டுச் சமைப்பதை தவிர்க்க வேண்டும்.
விட்டமின்&டி:& விட்டமின் ‘டி’ யில் உள்ள நான்கு பொருட்களும் எலும்பின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. எலும்புக்கு வேண்டிய சுண்ணாம்புச் சத்து விட்டமின் ‘டி’ யிலிருந்துதான் கிடைக்கிறது. விட்டமின் ‘டி’ குறைவவின் காரணமாக விலா எலும்புகள் மார்பு எலும்புடன் கூடுமிடத்தில் வீங்கிப் போகின்றன. மண்டை எலும்புகள் நன்றாக வளராது. ஆகையால் சிறு குழந்தையின் தலையில் உள்ள மென்மையான பாகங்கள் மூடிக் கொள்வதில்லை. தசைகள் தளர்ந்துபோகும். வயிறு பெருக்கும். மூட்டிக்கால், வளைகால் போன்ற குறைபாடுகள் ஏற்படும்.
விட்டமின் ‘டி’ யானது காட், ஹாலிபட் ஷார்க் போன்ற மீன் இனத்தின் கல்லீரலிலிருந்து எடுத்த எண்ணெய் வடிவத்தில் கிடைக்கிறது.
வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, பால் இவற்றிலும் விட்டமின் உள்ளது. தானியங்கள், காய்கறிகள் இவற்றிலும் ஓரளவுக்கு இந்த விட்டமின் உள்ளது. இவற்றில் உள்ள எர்கோஸ் டெரால் சருமத்தில் சூரியக் கதிர்கள் படவும் வைட்டமின் ‘டி’ யாக மாறுகிறது. கொழுப்புச் சத்துள்ள உணவை உட்கொள்ளாதவர்கள் சூரியக் கதிர்கள் உடலில் படும்படியாக வெளிப்புறத்தில் நடமாடுவது நல்லது. வளரும் குழந்தைகளுக்கும், வாலிப வயதினர்களுக்கும் தான் விட்டமின் ‘டி’ அதிகம் தேவை முழு வளர்ச்சி எய்த பின்பு இது தேவைப்படுவது இல்லை.
நையாசின்:& (நிகோட்டினிக் அமிலம்) பரந்து காணப்படும் தோல் அழற்சி, வாய்புண், வயிற்றுப் போக்குக்கு காரணமாக இருப்பது நையாசின் குறைந்த அளவு காணப்படுவதால் தான். நையாசின் சத்தானது, முழுத்தான்யங்கள், வேர்கடலையில் நிறைய உள்ளது.
விட்டமின் குறைவைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
பல வகைப்பட்ட உணவுகளை உண்ண வேண்டும். பழங்கள் காய்கறிகள், முழுத்தானியங்கள், பயறு வகைகள், பால் இவற்றை உண்ண வேண்டும். தினம் குறைந்தது ஒரு வகைப் பழமும், ஒரு காய்கறியும் உணவில் இருத்தல் அவசியம்.