வைட்டமின் E ஆயில் என்ன பயன்-?

Spread the love

வைட்டமின் ணி ஆயிலில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது நமது உடலிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து, எந்தவிதமான ப்ரீ ராடிக்கல் தாக்காமல், ஆபத்தில் இருந்து நமது தோலை பாதுகாக்கிறது. இது சருமத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி என்றும் இளமையாக வைக்க உதவுகிறது. இது கடைகளில் கேப்சூல் வடிவத்தில் கிடைக்கின்றது. இது அழகு, மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகும்.

உடல் எடை அதிகரிப்பு மற்றும் கர்ப்பக்காலத்தில் ஏற்படும் stretch marks நீக்குவதற்கு, வைட்டமின் ணி ஆயில் நல்ல பலனளிக்கிறது. இதை stretch marks உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்யவும், இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், stretch marks முழுவதும் நீங்கி, தோல் மென்மையாக இருப்பதை காணலாம். 

சூரிய ஒளியில் அதிக நேரம் இருப்பவர்களுக்கு தோல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே வெளியில் செல்வதற்கு முன் வைட்டமின் ணி ஆயிலை சிறிது எடுத்து உடல் முழுவதும் தடவி, பின் வெளியே செல்வது மிகவும் நல்லது.

கரும்புள்ளிகள் மறைய

வைட்டமின் ணி மாத்திரையை பிரித்து அதிலுள்ள எண்ணெயுடன், கஸ்தூரி மஞ்சளை சேர்த்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு கழுவி வந்தால், கரும்புள்ளிகள் இருந்த இடம் தெரியாமல் மறையும்.

வறண்ட சருமத்திற்கு

வறண்ட சருமம் எளிதில் சுருக்கமடைந்து, தொய்ந்து காணப்படும். இதற்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வைட்டமின் ணி ஆயிலை, முகத்தில் தடவி மசாஜ் செய்து வரவும். இவ்வாறு தொடர்ந்து செய்வதால், வறண்ட சருமம் பளிச்சிடும்.

சிவப்பான இதழ்களுக்கு

உதட்டில் ஈரப்பதம் இல்லையென்றால் உதடு விரைவில் கருத்து, வெடித்துவிடும். இதனை சரிசெய்வதற்கு வைட்டமின் ணி ஆயிலை உதட்டில் தடவவும். இவ்வாறு செய்வதால், சிவப்பான, மென்மையான உதட்டை பெறலாம். 

தலையில் ஏற்படும் அரிப்பிற்கு

தலையில் ஏற்படும் அரிப்பை நீக்க, வைட்டமின் ணி ஆயிலை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்யலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் தலையில் அரிப்பு நீங்கி, முடியும் நன்கு வளரும்.

தலைமுடிக்கான சீரம்

சிறிதளவு ஜோஜாபா எண்ணெயுடன், 3 அல்லது 4 துளிகள் வைட்டமின் ணி ஆயிலை கலந்து, தலைமுடியில் தேய்க்கவும். இதை உடைந்த முடி, வறண்ட முடிகளின் மீதும் தடவலாம், இதனால் முடி மென்மையாகும். அதுமட்டுமின்றி சூரியக்கதிர்கள் முடியை தாக்காமல் முடியினை பாதுகாக்க இந்த எண்ணெய் உதவுகின்றது.

கால் வெடிப்புகளுக்கு

கால்களுக்கு போடும் அளவிற்கு, வாஸ்லின் (க்ஷிணீsமீறீவீஸீமீ) எடுத்து, அதில் சிறிதளவு, வைட்டமின் ணி ஆயிலை சேர்த்து கால் மற்றும் பாதங்களில் வெடிப்பு இருக்கும் இடத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்கி, பாதம் மென்மையாகும்.

உடல் மென்மையாக

வைட்டமின் ணி ஆயிலுடன், 2 அல்லது 3 டீஸ்பூன் லாவெண்டர் ஆயில் கலந்து உடல் முழுவதும் தேய்த்து வரவும். தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை காணலாம். இது அனைத்து வகை சருமத்திற்கும் ஏற்றது. வறண்ட சருமத்திற்கு ஈரப்பதமளிக்கும்.

தேங்காய் எண்ணெயுடன், 3 அல்லது 4 துளிகள் வைட்டமின் ணி ஆயிலை கலந்து, தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன் கைகளில் தேய்க்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்வதால் கைகளில் உள்ள தழும்புகள், வெட்டுகள் நீங்கி மென்மையாகும்.


Spread the love