மனித உடலில் பருவமாற்றங்கள் உருவாவதற்கும், இனவிருத்தியாவதற்கும் காரணமாக இருப்பது ‘ஈஸ்ட்ரோஜன்’ மற்றும் ‘ப்ரொஜஸ்ட்ரான்’ என்னும் இரு ஹார்மோன்கள் ஆகும். இந்த ஹார்மோன்கள் சரிவிகித அளவிலிருந்து குறையும் போதும் அதிகரிக்கும் போதும் உடலில் பல உபாதைகள் ஏற்படுவதற்கு காரணமாகின்றன. இந்த ஹார்மோன்களின் ஏற்றதாழ்வை பிஷீக்ஷீனீஷீஸீணீறீ வீனீதீணீறீணீஸீநீமீ என கூறுவர். இந்த ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வினால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
பெண்களுக்கு பூப்பெய்தியதிலிருந்து தொடங்கி பேறுகாலம், மற்றும் இறுதி மாதவிடாய்வரை இந்த ஹார்மோன்களின் சீரமைப்பு தேவைப்படுகிறது. ஆண்களுக்கு ஆண்மைத்தன்மை வளரவும் விந்தணுக்கள் சரியான முறையில் உருவாவதற்கும் செயல்படுவதற்கும் இந்த ஹார்மோன்கள் அவசியமாகின்றது. இந்த ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு ஏற்படும் போதும் பெண்களுக்கு முறையற்ற மாதவிடாய், அதிகமான உதிரப்போக்கு, உடலுறவில் நாட்டமின்மை, தூக்கமின்மை, மனஅழுத்தம், நீர்க்கட்டிகள், கருப்பையில் கட்டிகள், இருதயநோய், மார்பகப்புற்றுநோய், கருப்பை புற்றுநோய், எலும்புகள் வலுவிழத்தல் (ஆஸ்டியோபோரேசிஸ்) மலட்டுத்தன்மை ஆகிய நோய்கள் உருவாக காரணமாகின்றன. ஆண்களுக்கு &விந்தணுக்களில் குறைபாடு, ப்ராஸ்ட்ரேட் சுரப்பியில் வீக்கம், மன அழுத்தம், தூக்கமின்மை, மார்பகவளர்ச்சி (நிஹ்ஸீமீநீஷீனீணீstவீணீ) ஆகிய உபாதைகள் ஏற்பட காரணமாகின்றன.
இந்த உபாதைகளைக் குறைக்கவும், ஹார்மோன்களின் ஏற்றதாழ்வுகளைச் சரிசெய்யவும், வேதியல் கூடங்களில் தயார் செய்யவும் செயற்கை ஹார்மோன்கள் (sஹ்ஸீtலீமீtவீநீ பிஷீக்ஷீனீஷீஸீமீ) மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த சின்தடிக் ஹார்மோன்கள் பல பக்கவிளைவுகளை தோற்றுவிக்கும்.
பைட்டோ ஹார்மோன்கள்
தாவரங்களில் உள்ள ஹார்மோன்களை பைட்டோஹார்மோன்கள் என கூறுகின்றனர். இந்த வகை ஹார்மோன்கள் தாவரங்களின் வளர்ச்சிக்கும், தாவரங்கள் பூப்பதற்கும், காய்ப்பதற்கும், விதை முளைப்பதற்கும் தாவங்களுக்கு சிறிய அளவில் தேவைப்படுகிறது. இவை நமது உடலில் சுரக்கும் ஹார்மோன்களைப் போன்றவை அல்ல. ஆனால் இவ்வகைத்தாவரப் பொருட்களை உணவாகவோ, மருந்தாகவோ நாம் உட்கொள்ளும் போது நமது உடலில் சுரக்கும் ஈஸ்ரோஜனுக்கும், ப்ரொஜஸ்ட்ரானுக்கும் ஒத்த செயல்பாடுகளைத்தரவல்லது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
ஜெனோ ஹார்மோன்கள்
பூச்சிக் கொல்லி, களைக்கொல்லி, செயற்கைஉரம் ஆகியவைகள் பயன்படுத்தி விளையும் பொருட்களை நாம் உட்கொள்வதால் உருவாகும் நச்சுப்பொருள்கள் ‘ஜெனோ ஹார்மோன்கள்’ எனப்படும். இவைகளை நமது உடலிருந்து எளிதில் நீக்க இயலாது. இவை நமது உடலில் நீண்ட நாட்கள் தங்கி மலட்டுத்தன்மை, புற்றுநோய் போன்ற பல கொடிய நோய்கள் வர காரணமாகின்றன. தாவரஹார்மோன்கள் ஜெனோஹார்மோன்களின் நச்சுத்தன்மையின் செயல்பாட்டை தடுக்கவல்லது.
பைட்டோ ஹார்மோன்கள் உள்ள உணவுகள்
ஓட்ஸ், சோயா, அலரிவிதை, பறங்கிவிதை, காரட், ஆப்பில், எள், வெந்தயம், பார்லி, சேணை, கைகுத்தல் அரிசி, உளுந்து, மாதுளை, முளைக்கவைத்த பயிர்கள், சோம்பு, கருணை, வால்நட், பச்சை கீரைவகைகள் சில ஆகியவை.
பாரம்பரிய உணவில் பைட்டோ ஹார்மோன்கள்
ஹார்மோன்கள் பற்றித்தெரியும் முன்பே நமது முன்னோர்கள் நம் உடல் வளர்ச்சிக்கும் ஊக்கத்திற்கும் எந்த வகை உணவுகள் தேவை என நன்கறிந்து பயன்படுத்தியிருக்கின்றனர்.
பெண்கள் வயதிற்கு வரும்போதும்,. கர்பகாலத்திலும். இருதிமாதவிடாயின் போதும் புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து ஆகியவை அதிக அளவில் தேவைப்படுகின்றது. பெண்கள் பூப்பெய்தியகாலத்தில் உளுந்தங்களி, நல்லெண்ணெய் கருப்பட்டி ஆகியவை கொடுப்பது வழக்கமாகும். இவ்வகை உணவுகள் எலும்புவளர்ச்சிக்குத் தேவையான கால்சியம், இரத்த விருத்திக்குத் தேவையான இரும்புச்சத்து, உடல்வளர்ச்சிக்குத் தேவையான புரதசத்து ஆசியவற்றை அளிப்பதுமட்டுமல்லாது ஹார்மோன்களின் செயல்களையும் ஊக்குவிக்கின்றன்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு உளுந்து, கருப்பட்டி, வெல்லம், ஆகியவைகளால் செய்த பலகாரங்களும், வெண்ணெய் பால், பனங்கற்கண்டு, கீரைவகைகள், பழங்கள் பல கொடுக்கப்பட்டு வருகின்றன.
பிரசவித்த பெண்களுக்கு வெந்தயத்தினால் செய்த கஞ்சி மற்றும் லேகியங்கள் கொடுப்பது இன்றளவும் வழக்கத்தில் உள்ளது. இறுதி மாதவிடாயின் போது மாதுளை, முளைக்கட்டிய பயிர்கள், வெந்தயம், நெல்லிக்காய், உலர்ந்த திராட்சை, கைகுத்தல் அரிசி ஆகிய உணவுப் பொருள்கள் அந்த சமயத்தில் ஏற்படும் உபாதைகளை குறைக்க உதவும்.
ஆயுர்வேத மருத்துவத்தில் அதிமதுரம் (பைட்டோ ஈஸ்ட்ரோஜன் உள்ள தாவரம்) மலட்டுத்தன்மை நீக்குவதற்காக சதாவரி மற்றும் சில கூட்டுப் பொருட்களுடன் சேர்த்து மருந்தாக கொடுக்கப்பட்டு வருகின்றது.
சீனாவில் ‘ரெட்பெப்பர்’ மற்றும் ‘ஜிங்செங்’ என்னும் மூலிகைகள் இறுதிமாதவிடாயின் போது ஏற்படும் அதிக உதிரப் போக்கை (பிஷீt யீறீusலீ) குணப்படுத்துவதற்கு மருந்தாக பண்டைய காலம் முதல் பயன்படுத்துகின்றனர். இப்படி நாம் பண்டையகாலம் முதல் இவ்வகை தாவர உணவுகளையும், மருந்துகளையும் பயன்படுத்தி வருகின்றோம்.
பைட்டோ ஹார்மோன்களால் ஏற்படும் விளைவுகள்
‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்னும் பழமொழிக் கேற்ப இந்தவகை உணவுகளையோ, மருந்துகளையோ அதிகமாக உட்கொள்ளுவது மார்பகப் புற்று நோய் மற்றும் கர்ப்பப்பை புற்று நோய்க்கு காரணமாக அமைவதாக மேலைநாட்டு ஆராய்ச்சிகள் பல கூறுகின்றன. அதே சமயம் அவ்வகை தாவரஉணவுகள் புற்றுநோயை கட்டுப்படுத்த உதவுவதாகவும் பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்தவகை உணவுகளை தினசரி உணவாக பயன்படுத்தும் ஆசிய நாடுகளில் மார்பகப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக உலக அளவிலான புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இதிலிருந்து நாம் அறிந்துகொள்வது என்னவெனில் ஒரே வகையான உணவாக எடுத்துக் கொள்ளாமல் கூட்டுப்பொருளாக கலந்து எடுத்துக்கொள்ளும் போது அதன் செயல்பாடு நமக்கு நன்மையளிக்க வல்லதாகும்.
சரியான விகித உணவும் (ஙிணீறீணீஸீநீமீபீ ஞிவீமீt) இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விளைவித்த உணவு (ஷீக்ஷீரீணீஸீவீநீ யீஷீஷீபீ) முறையான மருந்துப் பிரயோகமும், யோகக்களையும், முறையான உடற்பயிற்சியும் நமது உடல் எதிர்ப்புசக்தியை அதிகரித்து ஹார்மோன் ஏற்றத் தாழ்வினால் வரும் உபாதைகளிலிருந்தும், வேறு கொடிய நோய்களிலிருந்தும் நம்மை காத்து நல்ல சீரான வாழ்க்கையை சிறப்பாக வாழ உதவும்