இந்த Tips சொல்லி நீங்களும் அசத்தலாம்!

Spread the love

பலவித பிரட்சனைக்கு, சில எளிய வீட்டு வைத்தியத்தால் உங்களையும், உங்களை சார்ந்து அனைவரையும் அசத்தகூடிய குறிப்புகளை பார்க்கலாம்.மந்தாரை இலையோடு கொத்தமல்லி, உளுந்து, உப்பு, புலி, மிளகாய் சேர்த்து சாப்பிட்டால் பித்த வாந்தி உடனே நிற்கும். கோதுமையை பொன்னிறமாக வறுத்து அதை அரைத்து, தேன் கலந்து சாப்பிட்டு வர மூட்டுவலி குணமாகும். இளம் வயதினர் தினமும் ஒரு கப் பால் குடித்து வந்தால் கால்சியம் சத்து அதிகமாகி எலும்புகள் பலம் பெறும்.

பெண்கள் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்கு சளி பிடிக்கும் என நினைப்பது தவறு. தயிரில் புரொபயோட்டிக் சத்து அதிகமாக இருக்கின்றது. அது குழைந்தைகளுக்கு மிகவும் நல்லது. அதோடு அலர்ஜி வராமலும் தடுக்கும். உடல் சூடு உள்ளவர்களுக்கு பச்சைபயிர், மோர், உளுந்தவடை, பணங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தய கீரை, மாதுளம்பழம், இளநீர், இவைகளை சாப்பிட்டால் உடல் உஷ்ணம் தணியும். சுண்டைக்காய் உணவில் சேர்த்தால் வயிற்றில் பூச்சி தொல்லை சரியாகும்.

சமையலுக்கு கைகுத்தல் அரிசியை பயன்படுத்தினால் மிகவும் நல்லது. அதில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்திருக்கின்றது. கேன்சர் செல்களை அழிக்கிற சக்தி திராட்சையின் தோலிலும் விதையிலும் அடங்கியிருக்கிறது. அதோடு வைரஸ் எதிர்ப்பு சக்தியை பெரிதும் துண்டகூடியதாக இருக்கின்றது.பீட்டா கரோட்டீன்ஸ் அதிகமாக இருக்கும் உணவுகளை சாப்பிட்டால் இதயத்திற்க்கு மிகவும் நல்லது. அதற்கு கேரட், முட்டைக்கோஸ், சர்க்கரை வள்ளி கிழங்கு, பச்சை நிற கீரைகள் உணவில் எடுத்து வரலாம்.

ஆயுர்வேதம். காம்Spread the love