உணவை எடுப்பதும் அதை கழிவாக வெளியேற்றுவதும் ஒரு முக்கிய நிகழ்வு. இதில் ஏற்படும் பிரட்சனை தான் மலச்சிக்கல். இதற்கு உடனடி தீர்வு என்ன என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம். காய்த்த சூடான பாலில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து பருகி வர மலச்சிக்கல் நீங்கும். கடுமையான உணவு சாப்பிட்டு இருந்தாலும், இரவு தூங்குவதற்கு முன்னால் இந்த நெய் கலந்த பாலை குடித்து வந்தால் காலையில் கழிவு பிரட்சனையில்லாமல் வெளியேறும்.
நெய்யில் இருக்கும் கொழுப்பு கழிவுகளை மென்மையாக்கும் தன்மையை கொண்டுள்ளது. அடுத்து, மலச்சிக்கலை போக்க கூடிய ஆற்றல் ஆளி விதைகளில் உள்ளது. வீட்டு வைத்தியத்தில் இது நல்ல பலனளிக்கும். ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் ஆளி விதையை போட்டு மூன்று நிமிடத்திற்கு கொதிக்க வைத்து, ஆறிய பின் அந்த தண்ணீரோடு சேர்த்து ஆளி விதிகளையும் மென்று சாப்பிட்டால், மலச்சிக்கல் சரியாகும். இதனால் செரிமானபாதை சீராகும்.
அடுத்து மலச்சிக்கலுக்கு மாயாஜாலம் அளிக்க கூடியது ஆரஞ்சு பழம். இதை அப்படியே சாப்பிடுவதை விட, அரை கப் ஆரஞ்சு சாற்றோடு, ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் மலச்சிக்கல் நீங்கும். மலச்சிக்கல் ஏற்பட செரிமான குறைவும் ஒரு காரணமாக உள்ளது. அதற்கு ஆரஞ்சு சாற்றோடு, இரு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை கலந்து காலையில் குடித்து வந்தால், இரவு சாப்பிட்ட உணவுகள் எளிதாக செரிமானம் ஆகும்.
மலச்சிக்கல் குணமாகும் வரைக்கும் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த சாற்றை குடித்து வரவும். முடிந்த அளவு Junk Food, பீட்சா மற்றும் மைதா மாவில் தயாரிக்கப்பட்டுள்ள உணவை தவிர்ப்பது நல்லது. இது செரிமான மண்டலத்தை மட்டுமில்லாமல், உடல் ஆரோக்கியத்தையே கெடுத்து விடும்.