சிறுநீர் எரிச்சல் சீராக

Spread the love

சங்குப்பூ 

காக்கணம் செடி, காக்கட்டான் என்று கிராம பகுதிகளில் அழைக்கப்படும் சங்குபுஷ்பம் கொடி வகையைச்சார்ந்தது. இதன் தாவர பெயர் கிளிடோரியா டெர்ன டீ, தாவரக்குடும்பம் பாபசியே இச்செடியின் பூ, இரு நிறங்களில் இரு வகை செடியாக உள்ளது. வெள்ளைப்பூ பூக்கும் செடியை வெள்ளை காக்கணம் என்றும், நீலநிற பூ பூக்கும் செடியை கருப்பு காக்கட்டான் என்றும் கூறுகின்றனர். பெண்ணின் பிறப்புறுப்பின் அமைப்பை போல இருப்பதால் கிளிடோரிஸ் என்ற பெயரில் இருந்து கிளிடோரியா டெர்ன டீ என்ற தாவர பெயர் வந்தது.

இத்தாவரத்தின் இலை, பூ, வேர் மற்றும் விதை அனைத்தும் மருத்துவத்தில் பயன்படுகிறது. கொடி வகை இனமான கூட்டிலைகளை உடையதாக, வேறு கொடியாக வளரும். இதனை அழகு செடியாகவும் வளர்த்து வருகின்றனர். வெள்ளை நிறமுடைய பூக்கள் மலரும் வெண் காக்கட்டான் தான் மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. காக்கண விதைகள் எப்படி இருக்கும்? நறுமணமும், புளிப்பு சுவையுமாக காணப்படும். சிறுநீர் பெருக்கில், குடற்பூச்சி கொல்லி, தாது வெப்பக்கற்றி என பல குணங்கள் உண்டு. வாந்தி, பேதி, தும்மல் உண்டாக்கும்.

சங்குப்பூவின் இலையை சாறு எடுத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக்கொண்டு அதே அளவு இஞ்சி சாறு சேர்த்து கலக்கி, அருந்தி வந்தால் நெறிக்கட்டிகள் நீங்கும்.

சங்குப்பூவின் இலைகளை வாணலியில் இட்டு, இளம் வறுப்பாக வறுத்து சூரணமாக செய்து கொள்ளவும். 250 முதல் 500 மி.கி வரை அருந்தி வர மலக்கட்டு நீங்கி, மலம் எளிதாக கரையும்.

வேர் தரும் மகிமை:

தலைவலி, காய்ச்சல் நீங்க வேண்டுமா? சங்குப்பூவின் பசுமையான வேரை, 40 முதல் 50 கிராம் வரை எடுத்து சிதைத்து அரை லிட்டர் நீர் விட்டு பாதியாக காய்த்து சுண்ட காய்ச்சிக்கொண்டு,  இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை என்று ஆறு முறை அருந்தி வர வேண்டும்.

சத்யா


Spread the love