பொதுவாக நமது வீட்டு சமயலறையிலேயே மிகவும் சிறந்த அழகு நிலையம் உள்ளது. அதை பற்றிய சில குறிப்புகளை காண்போம்: உங்களின் உதடு வறண்டு போகும்போது அப்படியே விட்டுவிடாதீர்கள். அது வெடிப்பு விட்டு உயிர் போகும் மாதிரியான வலியையும் உண்டாக்கிவிடும். அதற்கு சுத்தமான நெய்யை எடுத்து உதட்டில் பூசி வாருங்கள். இது நீரேற்றத்தை தடுக்கும். உதட்டிற்கு ஈரப்பதத்தை வழங்கி இறுகும் தன்மையை கொடுக்கின்றது. அதோடு வெடிப்புகளை குணமாக்கி, உதட்டை மென்மையாகவும் வைக்கின்றது.
அடுத்து நெற்றிபகுதியில் அமைதியாக வளர்ந்து வரும் பருக்கள், இதற்கு சந்தன பவுடர் தான் சிறந்தது. ஆனால் ஆண்கள் இதில் இருந்து விலகியேதான் இருக்க வேண்டும். இது முகப்பருவை போக்குவதோடு, சருமத்தில் வளரும் தேவை இல்லாத முடியையும் நீக்கும். ஆயில் முகம் உள்ளவர்கள் பருவிற்கு சந்தன பவுடருடன், எலுமிச்சை சாற்றை கலந்து பரு இருக்கின்ற இடத்தில் தடவி வர முகபரு மறையும்.
சருமம், அக்குள்களில் வர கூடிய முடிக்கு சந்தனபொடியில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் ஆக மாற்றி தடவி குளித்து வர தேவையில்லாத இடத்தில் வளரும் ரோமங்களின் வளர்ச்சி நின்றுவிடும். தேன் குறிப்பாக உலர்ந்த தோலிற்கு மிகவும் சிறந்தது. தேன் உதடு வறட்சி, சரும வறட்சி, முக சுருக்கம், வயதான தோற்றம், தொற்றுகள் போன்ற பிரட்சனைகளை தீர்க்கும். இதை நேரடியாக பயன்படுத்தினாலே நல்ல பலன் கிடைக்கும். ஆனால் 1௦ நிமிடம் கழித்து கழுவி வந்தால் இது வறண்ட சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தை தருகின்றது. இது முகத்திற்கு பொலிவையும், மிருதுவான குணத்தையும் தருவதோடு இதில் இருக்கும் ஆக்சிஜனேற்றம் தொற்றுகளையும் நீக்கும்.
தேனை பருகி வந்தாலும் உடலிற்கும், தோலிற்கும் நல்லது. தேங்காய் எண்ணெய் தலை முடிக்கு மட்டுமே பயன்படும் பொருள் இல்லை. இது முகத்திற்கும் நல்ல Makeup Remover ஆக இருக்கின்றது. இதை முகத்தில் தடவி 1௦ நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவி வந்தால் விடாபிடி கெமிக்கல்ஸ் வெளியேறும். தேங்காய் எண்ணெயோடு Baking சோடாவை சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகத்திற்கு பொலிவு வந்து, வயது ஆனாலும் சருமம் இளமையாக இருக்கும்.