ஆசையை கட்டுப்படுத்தும் முக்கிய உணவுகள்

Spread the love

ஆண்களுக்கும், பெண்களுக்கும் தாம்பத்திய ஈடுபட அதிகரிக்க இயற்கை மருத்துவத்திலும், ஆயுர்வேதத்திலும் நிறைய மூலிகை உணவுகள் தீர்வாகிறது. அதே சமயம் பாலியல் உணர்வு ஓர் அளவிற்கு மேல் இருப்பதும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடும். இது போன்ற அதிகப்படியான இச்சை ஆசையை குறைக்கவும் இயற்கை உணவுகள் பரிந்துரைக்கப்படுகிறது. ஆசையை கட்டுக்குள் வைக்க நினைப்பவர்கள் இந்த உணவுகளை பயன்படுத்தும் போது எந்தவித பக்க விளைவும் ஏற்படாது. ஆனால் சில செயற்கை உணவுகள் உங்களை அறியாமலேயே பாலியல் திறனை குறைக்க நேரிடும். பின்வருவனவற்றில் அதை பற்றின விரிவாக்கங்களை பாப்போம்.

அதனால், அதிக அளவான காதல் உணர்வை சோயா நிறைந்த உணவுகள் இயற்கையாகவே கட்டுப்படுத்தும். இந்த பாலியல் ஆசையை கட்டுப்படுத்த உதவும் சோயாவில் இருக்கும் டோஃபு (tofu) மற்றும் சோயா பால் இந்த இரண்டும் உடலில் துத்தநாகம் சேருவதை தடுக்கும்.

ஒரு சராசரி மனிதனுக்கு தேவைப்படும் புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு, விட்டமின்கள், மற்றும் தாதுப்பொருட்கள் உள்ள உணவுகளை தேவையான அளவு கலோரிகள் எடுக்காமலே விட்டால், உடல் ஆரோக்கியத்துடன் சேர்ந்து, பாலியல் திறனும் சிதைந்து விடும். ஆசையை குறைக்கவும், அதிகரிக்கவும் நினைப்பவர்கள் இவர்களில் எந்த வகையாக இருந்தாலும், இந்த ஊட்டச்சத்துக்களை குறைவில்லாமல் எடுத்துக்கொள்வது தான் சரி.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருப்பதில்லை. எடுத்துக்காட்டாக சத்து நிறைந்த கோதுமையை வெள்ளை மாவுக்குள் பதப்படுத்தும் போது, அதில இருக்கும் துத்தநாகத்தின் முக்கால் பங்கையும் சேர்த்து, ஆணின் இனப்பெருக்க திறனையும் அழித்து விடுகிறது. அந்த வகையில் பதப்படுத்தப்படும், பீசா, பர்கர், சான்விச் இதெல்லாம் விற்கப்படும், கே எப் சி, டொமினோஸ் பக்கம் அடிக்கடி போகாமல் இருப்பது நல்லது.

மைக்ரோவேவ் பாப்கார்ன்

ஈவ்னிங் படம் பார்த்துவிட்டு, சுவையான வார்த்தைகளோடு இன்பமாய் இரவு உணவு முடித்து வீடு திரும்பும் தம்பதிகளுக்கு தாம்பத்திய உணர்வை தூண்டும் என பல ஆய்வுகள் திணிக்கப்பட்ட உண்மை. ஆனால் அதன் இடையில் நீங்கள் சாப்பிடும் உணவுகள் பாலியல் திறனை குறைக்கும். இடைவேளையில் வாங்கி சாப்பிடும் மைக்ரோவேவ் பாப்கார்னில் இருக்கும் (perfluorooctanoic)  ஆசிட் பாலியல் தூண்டுதலை கொன்றுவிடும். அதனோட துணையாக பெறப்படும் டயட் சோடா, உடலுறவை கெடுக்கும் மிக ஆபத்தான மூலப்பொருளை கொண்டுள்ளது. இது ஆசையை தூண்டக்கூடிய ‘செரோடோனின்’ என்ற விட்டல் ஆர்மோனை குறைத்துவிடுகிறது.  

அளவுக்கு அதிகமான சர்க்கரை, மது பானம், காபியில் நிறைந்திருக்கும் காஃபின்,   இவையெல்லாம் ஊட்டச்சத்து இருக்கக்கூடிய உணவுகளை உடலில் தங்க விடாது. மேலும் ஆண்மை குறையவும் வழி வகுத்து விடும்.

சீஸ்

ஏற்கெனவே சொன்னவற்றில், பதப்படுத்தப்படும் உணவுகளில் அதிகம் சேர்க்கப்படும் இந்த செயற்கை சீஸ், செயற்கை ஹார்மோன் செலுத்தப்படும் பசுக்களில் இருந்து பெறப்படுவதால், இது மனித உடலில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரான் உள்ளிட்ட ஹார்மோன்களின் இயற்கை உற்பத்தியில் பங்கம் விளைவிக்கும். இதனால ஹார்மோன் சூப்பில் தடை ஏற்பட்டு, காதல் உணர்வில் சரிவு ஏற்படும்.

டெலி மீட்ஸ்

இறைச்சியை பதப்படுத்த, அதோடு சேர்க்கப்படுகிற மிக மோசமான மூலப்பொருட்கள் மனித இனபெருக்க செல்களை சீண்டி பார்த்துவிடும். மேலும் இதில சேர்க்கப்படும் எருமை மாட்டின் கொழுப்பு, மனித ஹார்மோன்களில் பல மாற்றங்களை ஏற்படுத்திவிடும். சில மாதங்களை வரை இந்த இறைச்சி கெடாமல் இருக்க செயற்கை ஆசிட் கலக்கப்படும். இது சிக்கன் விங்க்ஸ் என்று சிறிய அளவில் விற்கப்படுவதால் மாட்டிறைச்சி என்று கூட தெரியாமல் பல பேர் வாங்கி சாப்பிடுவதுண்டு. அது போல் சிக்கன் விங்சில் மாட்டின் அதிநிறைந்த கொழுப்புகளே சேர்க்கப்பட்டு வருவதால் இதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

அதை தொடர்ந்து, வெள்ளரிக்காய், டர்னிப், முட்டைகோஸ் இவையெல்லாம் பாலியல் ஆசையை குறைக்கும் உணவுகள். மேலும் தைராய்டு செயல்பாட்டையும் குறைக்கும்.

மை. திவாகரன்


Spread the love