கேன்சர் மனித குலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் உயிர்க்கொல்லி நோய். நாம் உண்ணும் உணவின் மூலம் அவை ஏற்பட வாய்ப்புள்ளது. கேன்சரை தடுக்கும் உணவுகளும் உள்ளன. அது குறித்து பார்ப்போம்..
தாவர எண்ணெய்களை பெரு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொழுது, அதனை சுத்திகரிக்கும் பொழுது, பதப்படுத்தும் பொழுதும் அதில் உள்ள பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் மாற்றம் காண்கின்றன. இதனால் உடலுக்கு ஊறு விளைவிக்கின்றன. ஆக்சிடண்ட் ஆக உருவெடுக்கிறது. பிரிரேடிக்கள் உருவாகிறது. பிரிராடிக்கள் என்பது ஒரு வகை நச்சுப் பொருள். மின் அணுவை இழந்த பிராண வாயுவின் மூலக்கூறு ஆகும். எதிர் மின்சாரத் தன்மை உடையது. இந்த பிரிரேடிக்கிள்ஸ் காரணமாக கட்டிகள், திசுக்கள் நசிதல், உருமாற்றம் உருவாகலாம். ரீபைண்ட் ஆயில் மூலம் பிரிரேடிக்கள் உருவாகலாம்.
நாம் தவிர்க்க வேண்டிய உணவுகளாக பிஸ்கட், கேக், பொரித்த உணவுகள், சிப்ஸ்கள், பொரித்த இறைச்சிகள், கொதிக்கும் எண்ணெயை மீண்டும், மீண்டும் பயன்படுத்துதலில் உள்ளது. இத்தகைய உணவுகளில் டிரான்ஸ் கொழுப்புகள், பிரிராடிக்கிள்கள் உருவாகி கேன்சர், இரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு தோன்றுவதற்கு காரணிகளாக அமைகின்றன.
இவைகளை நாம் எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
ஆன்டிஆக்சிடண்ட் அதிகம் உள்ள வைட்டமின் இ, ஏ, பி காம்ப்ளெக்ஸ், வைட்டமின் சி, குளூட்டாயின் போன்றவைகள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
ஆக்ஸிஜன் ரேடிக்கல் அப்சார்பன்ஸ் கெபாசிட்டி என்று கூறப்படும் ஓ.ஆர்.ஏ.சி.யானது ஆன்டிஆக்ஸிடன்ட் பவர் எனப்படுகிறது. தினசரி ஓ.ஆர்.ஏ.சி யூனிட் அளவு 3500 வரை இருக்கலாம். கோதுமை, பீன்ஸ், மக்காசோளத்தில் வைட்டமின் இ உள்ளது. காரட், கோதுமை, அருகம்புல் சாறு எந்த கேன்சரையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் காய்கறிகளில், காலிபிளவரில் 888 யூனிட்டும், புதினாவில் 909 யூனிட்டும் வெங்காயத்தில் 450 யூனிட்டும் உள்ளது. காய்கறிகளை விட பழங்களில் அதிகம் காணப்படுகின்றன.
பழங்கள், காய்கறிகளை தினசரி சாப்பிடும் பொழுது, தேவையான வைட்டமின் இ, செலினியம் போன்ற ஆன்டியாக்சிடன்ட் அதிகம் கிடைக்கும்.
அக்ரிலமைய்டு உணவுகள்
பேக்கரி, சிப்ஸ், எண்ணெய் மூலம் தயாரிக்கப்படும் உணவுகள், வனஸ்பதி, தாளித்தல், பொரித்தல் போன்றவைகள் 200 முதல் 300 டிகிரி வரை சூடுபடுத்தப்படும் பொழுது, சூடுபடுத்தப்பட்ட உணவுகளில் ஆன்டி ஆக்சிடன்ட் மறைந்து அக்ரிலமைடு (உணவுகளாக) என்ற பிரிரேடிக்கலாக உருவாகிறது. பதப்படுத்தப்பட்ட, பிளாஸ்டிக் டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள் மற்றும் பிளாஸ்டிக் பேப்பர், பாக்கெட்டுகளில் பின்னால் ‘ஏ’ என்ற பிரிரேடிக்கள் உருவாகி கேன்சராக மாற சந்தர்பங்கள் அதிகம் உண்டு. மார்பக புற்று நோய்க்கு பெரும்பாலும் அக்ரிலமைடு உணவுகளே காரணமாகும்.
நார் சத்து உணவுகள்
தண்ணீரில் கரையும் மாவுப் பொருள் ஜீரணத்திற்கு குளுக்கோஸ் சக்தியைத் தருகிறது. தண்ணீரில் கரையாத மாவுப் பொருள், நார்ச் சத்து மலச்சிக்கலை நீக்குவதுடன் மலக்குடல் கேன்சர், குடல் புற்று நோய் மற்றும் இதயம் சார்ந்த பிரச்சனைகளை கட்டுக்குள் வைத்து, உணவுக் கழிவுகள் உடலில் தேங்காமல் வெளியேற்றி புற்று நோய் பரவுவதை கட்டுப்படுத்துகிறது. நமது தினசரி நார்சத்து தேவையின் அளவு சுமார் 35 கிராம் ஆகும்.
அமில உணவுகள்
அமில உணவுகள், அதிக நேரமும், அதிக சூட்டிலும் தயாரிக்கப்படும் உணவுகள், அதிக அமிலத் தன்மையைப் பெற்ற உணவாகி ஃபிரிரேடிக்கல்ஸ், கார்சினோஜனை வழங்கி புற்று நோய், வயிற்றுப் புண், அதிக கொலஸ்ட்ரால் அளவு, இதயம் சார்ந்த பிரச்சனை, உடல் பருமன், கிட்னி கெட்டுப் போதல், தோல் வியாதி, ஒரு பக்கவாதம் என்று உடலுக்கு பல நோய்களைத் தோற்றுவிக்கக் காரணமாகின்றன. உணவில் கலக்கப்படும் நைட்ரேட் பிரசர்வேட்டிவில் உள்ள இரசாயனங்கள் கார்சினோஜனையும், நைட்ரோசமைனையும் உருவாக்கி வயிறு, குடல் புண்ணை அதிகரிக்கச் செய்கிறது.
டால்டா, ரீபைன்ட் எண்ணெய்கள், ஊறுகாய் உணவுகள், வெள்ளைச் சர்க்கரை சேர்த்த இனிப்புப் பண்டங்கள், சிப்ஸ் வகைகள், மிக்சர், பக்கோடா, அதிக பால், தயிர், அசைவ உணவுகள், பேக்கரி உணவுகள், பதப்படுத்திய உணவுகளில் அதிகமாகக் காணப்படுகிறது. வறுத்தல், பொரித்தல் உணவுகளும் அமில உணவுகள் தான். மது, பான்பராக், பீடி, புகையிலை, அதிக அளவு ஆங்கில மருந்துகள் பயன்படுத்துவதால் புற்று நோய் உருவாவதற்குரிய காரணிகளாக அமைகின்றன.