பொதுவாக உடலில் ஏற்படும் நாற்றத்திற்கு காரணம் அப்போக்கரின்சுரப்பிகள் தான். இது உடலில் மற்ற பகுதிகளை விட Under arm, மார்பு, காது மற்றும்மறைவான பகுதியில் அதிகளவு சுரக்கும். இதை சுத்தப்படுத்தாத போது, கெட்ட நாற்றம்வீசும், பின் பாக்டீரியாவின் தாக்கத்தினால் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதனால்நாம் என்ன தான் குளித்து சுத்தமாக நமது உடலை வைத்திருந்தாலும் அந்த சுரப்பிகள் சுரந்துகொண்டு தான் இருக்கும். அதனால் உங்களுக்கு அந்த பிரட்சனையால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிரீர்கள் என்றால் சில எளிமையான இந்த வழிமுறைகளை வீட்டில் செய்து வாருங்கள்.
ஒரு சிறிய பாத்திரத்தில் ஆப்பிள் சீடர் வினிகர் எடுத்து கொள்ளவும்.அதில் ஒரு துண்டு காட்டனால் Dip செய்து நேரடியாக உங்கள் Under arm-ல் தடவவும். இதைஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பதற்கு பின் செய்து வாருங்கள். ஆப்பிள் சீடர்வினிகரில் ஆண்டி-நுண்ணுயிர் பண்புகள் நிறைந்துள்ளது. இது நாற்றத்தை உண்டாக்ககூடிய கெட்டபாக்டீரியாக்களை அழித்துவிடும். அதனால் சுரப்பிகள் கொஞ்சமாக சுரந்தாலும், அதில் பாக்டீரியாக்களின்தாக்கம் இருக்காது. கெட்ட நாற்றமும் இருக்காது.
அடுத்து எளிமையான ஒரு நுட்பம்தான் எலுமிச்சை சாறு, ஒரு எலுமிச்சையை நறுக்கி, அதில் பாதிதுண்டை எடுத்து Under arm-ல் நன்கு தேய்க்கவும். ஒரு 5 நிமிடம் அப்படியே விட்டு, காய்ந்த பின் கழுவிவிடலாம். ஒரு வேலை உங்களுக்கு Sensitive Skin-ஆக இருந்தால் அரை எலுமிச்சைசாற்றில், அரைகப் தண்ணீர் கலந்து பயன்படுத்தலாம். இதை உங்களுக்கு நல்ல மாற்றம்தெரியும் வரை தினமும் செய்துவரவும்.
எலுமிச்சையில் அசிடிக் மற்றும் பாக்டீரியாவை அழிக்ககூடிய பொருட்களும் உள்ளது. இது வியர்வையை கட்டுப்படுத்தி நாற்றத்தை உண்டாக்ககூடிய பாக்டீரியாக்களையும்அழிக்கும். இதை பயன்படுத்தி Under arm-ல் இருந்து வரக்கூடிய நாற்றத்தில் இருந்தும்,தொற்றுகளில் இருந்தும் விடுபடலாம்.
https://www.youtube.com/embed/JYZaPKhS_7E