கண்களின் கீழ் கருவளையம்
'பளிச்' என்றும் மிளிரும் முக அழகு தான் பெண்களின் வசீகரத்தை வெளிப்படுத்தும். இந்த முக கவர்ச்சியை பாதிப்பது கண்களின் கீழ் ஏற்படும்.
கரு வளையங்கள். இவை பெண்களின் வயதை மிகைப்படுத்தி காட்டும். கரு வளையங்கள் தோன்ற காரணங்கள் என்ன?
- சூரிய ஒளி, வெய்யிலின் தாக்குதல் முக்கிய காரணம். சூரியன் சர்மத்திற்கு எதிரி. மேனி கறுப்பாக காரணம் சூரிய வெப்பத்தினால் தான்.
- தூக்கமின்மை, களைப்பு.
- சத்து குறைவான உணவு.
- ஒவ்வாமை, தோல் தொற்று நோய்கள்
- பரம்பதை
- வயது.
சூரிய ஒளியில் உள்ள, மனிதரின் கண்களுக்கு புலப்படாத
‘அல்ட்ரா வயலட்’ (Ultra – violet)கதிர்கள் தான் சர்மபாதிப்புகளுக்கு காரணம் ஓரளவு இந்த ‘கதிர்கள்’ உடலுக்கு தேவை. ஏனென்றால் இந்த கதிர்கள் உடலில் விட்டமின் ‘டி’ உண்டாக உதவுகிறது. இதனால் தான் காலை வெய்யில் உடலுக்கு நல்லது என்கிறார்கள். அதிக அளவில், அல்ட்ரா – வயலெட் (யு.வி.) கதிர்கள் தாக்கினால் உடலின் மரபணுக்கள் பாதிக்கப்பட்டு, தோல் திசுக்கள் உற்பத்தி செய்யும் இராசயன பொருட்கள் மாறுபடுகின்றன. இந்த அல்ட்ரா வயலெட் கதிர்கள் ஃபோலிக் அமிலத்தை சிதைத்து அதன் குறைவை எற்படுத்துகின்றன. சூரிய ஒளியின் பாதிப்பை குறைக்க சருமம் சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. சருமத்தின் மேல்பகுதி கடினமாக யு.வி. கதிர்கள் ஊடுருவாமல் தடுக்கின்றது. ‘மெலானின்’ (தோல் நிறத்தை கொடுக்கும் பொருள்) உற்பத்தி அதிகமாவதால் தோலின் கருமை நிறமும் அதிக கருமையாகிறது.
கண்களில் கீழ் ஏற்படும் கருவளையங்களை போக்குவது மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக பெண்களை அழகாக்கும் சாதனங்கள், பொருட்கள் ஆயுர்வேத வைத்தியத்தில் “ஸீப – கங்கரணம்” என்ற தலைப்பில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. மேலை நாடுகள் உட்பட, உலகமே தற்சமயம் அழக சாதனங்களுக்கு இயற்கை வைத்திய மூலிகைகளை நாடுகின்றன. ஆயுர்வேதம் வாத, பித்த தோஷங்களின் குறைபாடுகளால் கண் – கருவளையங்கள் உண்டாகின்றன என்கிறது. உடலில் தேங்கியுள்ள நச்சுப் பொருட்களை போக்கி, சர்மத்தை ஆரோக்கியமாக்கும். சிகிச்சைகளை ஆயுர்வேதம் மேற்கொள்கிறது.
கண்களில் கீழ்ள்ள கருவளையங்கள் மறைய எளிய முறைகள் - சீரான உணவு – வறுத்த, பொரித்த உணவுகளை விட, ‘கூட்டு’ போன்ற வேக வைத்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.
- அதிகமாக தண்ணீர் குடிக்கவும்
- பழங்களை அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்
- உணவில் கீரை வகைகளை சேர்த்துக் கொள்ளவும்
- மலச்சிக்கலை தவிர்க்கவும்
- வைட்டமின் ‘இ’ எண்ணையால் கண்களை சுற்றி மசாஜ் செய்யவும். இதை தினசரி படுக்குமுன் செய்யவும்.
- நன்றாக 7 மணிநேரம் தூங்கவும்.
- உருளைக்கிழங்கை துருவி சாறு எடுத்தக் கொள்ளவும். தினமும் கருவளையத்தின் மீதிபூசி, 15 நிமிடம் காய்ந்த பின் கழுவவும், தோலுடன் கூடிய உருளைகிழங்கின் துண்டுகளையும் கருவளையத்தின் மீது 15 நிமிடம் வைத்துக் கொள்ளலாம்.
- இதே போல் வெள்ளீரிக்காய் துண்டுகளையும் கண்கள் மீது வைத்துக் கொள்ளலாம். கண்களை சுற்றியுள்ள கருமை குறையும். கண்கள் குளிர்ச்சி அடையும்.
- குளிர்ந்த, தூய்மையான பன்னீரில் பஞ்சுத்துண்டுகளை நனைத்து கண்கள் மேல் வைக்கலாம். பன்னீரில்லையென்றால், தண்ணீரை பயன்படுத்தலாம்.
- இதோபோல் உபயோகித்த டீத்தூள் அடங்கிய சிறிய பைகளால் கண்களை சுற்றி ஒத்தடம் கொடுக்கலாம்.
- எலுமிச்சை சாறு, தக்காளிச் சாறு, இவற்றை கலந்து கருவளையத்தின் மீது தடவவும்.
- டென்ஷனை குறைக்கவும், யோகா பயில்வது பலனளிக்கும்.
முக அழகை மேம்படுத்த, கரு வளையங்களை போக்க,
“குங்குமாதி லேபம்” போன்ற பல மருந்துகள்/களிம்புகள்/தைலங்கள் ஆயுர்வேதத்தில் உள்ளன. இவற்றால் பயன்பெற ஆயுர்வேத வைத்தியரை அணுகவும்.
ஆயுர்வேதம்.காம்