இந்தியன் மசாலா டீ
தேவையான பொருட்கள்
டீத்தூள் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
சீனி – 11/2 டீஸ்பூன்
டீ மசாலா – 1/4 டீஸ்பூன்
ஏலக்காய்பொடி – 2 சிட்டிகை
பால் – 1 கப்
செய்முறை
தண்ணீரை கொதிக்க வைத்து அதில் டீத்தூள், சீனி, டீ மசாலா, ஏலக்காய் பொடி போட்டு கொதிக்க வைத்து, 2 நிமிடம் தீயை குறைத்து வைக்கவும். பின்னர் பால் சேர்த்து பொங்கி வரும் சமயம் இறக்கி வடிகட்டி பருகவும்.
துளசி டீ
தேவையான பொருட்கள்
துளசி இலை –1/2 கப்
தண்ணீர் –2 கப்
டீத்தூள் –2 டீஸ்பூன்
சீனி -தேவையான அளவு
பால் -தேவையான அளவு
செய்முறை
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, பின் அடுப்பைக் குறைத்து 3 முதல், 4 நிமிடம் வரை விடவும். பின் டீத்தூள், சீனியைப் போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். தேவையான அளவு சூடான பாலை ஊற்றி பருகவும்.
ஐஸ்ட் மின்ட் டீ
தேவையான பொருட்கள்
புதினா இலை – 1 கைப்பிடியளவு
தண்ணீர் – 1/2 லிட்டர்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
சீனி – தேவையான அளவு
எலுமிச்சம் ஜுஸ்- 11/2 டீஸ்பூன்
செய்முறை
தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் புதினா இலைகளைப் போட்டு, டீத்தூளையும் போட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். சீனியையும் போட்டு ஆறியதும் வடிகட்டி எலுமிச்சம் ஜுஸ், ஐஸ்கட்டி சேர்த்து பரிமாறவும்.
மசாலா டீ
தேவையான பொருட்கள்
தண்ணீர் –21/2 கப்
கிராம்பு –2
ஏலக்காய் –1
மிளகு –4
பட்டை –1சிறு துண்டு
டீத் தூள்-3டீஸ்பூன்
பால் –11/4கப்
சீனி –2டே.ஸ்பூன்
சோம்பு –1/2டீஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கிராம்பு, ஏலக்காய், மிளகு, பட்டை, சோம்பு போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்தவுடன் டீத்தூளையும் போட்டு 2 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். பின் பால், சீனி சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி சூடாகப் பரிமாறவும்.
ஏலக்காய் டீ
தேவையான பொருட்கள்
பச்சை ஏலக்காய் – 3
ப்ரவுன் ஏலக்காய் – 2
டீத்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
சீனி – 4 டேபிள் ஸ்பூன்
பால் – தேவையான அளவு
தண்ணீர் – 5 கப்
செய்முறை
இரண்டு ஏலக்காய்களையும் இஞ்சி பூண்டு தட்டும் உரலில் போட்டு தட்டி இதனை தண்ணீரில் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதிக்கும் பொழுது டீத்தூள், சீனி சேர்க்கவும். தேவையான அளவு பால் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். பால் பொங்கி வரும் சமயம் அடுப்பிலிருநது இறக்கி வடிகட்டி பரிமாறவும்.
ஜிஞ்சர் டீ
தேவையான பொருட்கள்
டீத்தூள் – 11/2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 3 கப்
பால் – 3 கப்
சீனி – 3 டேபிள் ஸ்பூன்
துருவிய இஞ்சி- 3 டேபிள் ஸ்பூன்
டீ மசாலா – 11/2 டீஸ்பூன்
புதினா இலை – 3 (தேவையென்றால்)
செய்முறை
எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து, அடுப்பைக் குறைத்து 2 நிமிடங்கள் வைத்திருந்து வடிகட்டி பருகவும்.
காஷ்மீரி சாய்
தேவையான பொருட்கள்
கிரீன் டீ – 3 டீஸ்பூன்
தண்ணீர் – 4 கப்
பட்டை பொடி – 2 டீஸ்பூன்
கிராம்புத்தூள் – 1 டீஸ்பூன்
ஏலக்காய் – 2 டீஸ்பூன்
பாதாம் விழுது – 3 டீஸ்பூன்
செய்முறை
4 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் கிரீன் டீயைப் போட்டு, தண்ணீர் பச்சையாக மாறியவுடன் கிராம்பு, பட்டை பொடியைப் போட்டு, ஏலக்காய் சேர்த்து, அரைத்த பாதாம் விழுதையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். வடிகட்டி சீனி சேர்த்து, பாதாமை மேலே துருவி சேர்த்து பருகவும்.
ஃப்ரூட் டீ
தேவையான பொருட்கள்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
சீனி – 2 டீஸ்பூன்
எலுமிச்சம் ஜுஸ் – 1 டீஸ்பூன்
புதினா இலை – சிறிது
பைனாப்பிள் – 2 துண்டு
செர்ரிப்பழம் – 3
பீச் – 2 துண்டு
ஐஸ் க்யூப்ஸ் – தேவையான அளவு
செய்முறை
டீயை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். ஆறியவுடன், சீனி, பழங்கள், எலுமிச்சம் ஜுஸ் சேர்த்து ஒரு ப்ளண்டரில் போட்டு ஒரு அடி அடித்து ஒரு உயரமான கண்ணாடி டம்ளரில் ஊற்றி ஐஸ்கட்டிகள் சேர்த்து புதினா இலை தூவி பரிமாறவும்.
காஷ்மீரி டீ
தேவையான பொருட்கள்
சோடா உப்பு – 1/2 டீஸ்பூன்
சீனி – தேவையான அளவு
கிரீன் டீ இலை – 6 டீஸ்பூன்
ஏலக்காய் விதை – 15
ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
பால் – 1/2 லிட்டர்
ஃப்ரஷ் கிரீம் – சிறிது
பிஸ்தா – 6 டீஸ்பூன்
தண்ணீர் – 6 கப்
செய்முறை
பிஸ்தாவை அரைத்துக் கொள்ளவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் ஒரு சிட்டிகை உப்பு, ஏலக்காய் விதை, சோடா உப்பு, டீத்தூள் போட்டு தண்ணீர் மூன்றில் ஒரு பங்காக வற்றும் வரை அடுப்பை குறைத்து வைக்கவும். பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி மேலும் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டவும். பாலுடன் ஏலக்காய் பொடி, சீனி சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டி வைத்துள்ள டீயைச் சேர்த்து மேலே ஃப்ரஷ் கிரீம் சிறிது சேர்த்து, பிஸ்தா அரைத்ததை சிறிது சேர்த்து பருகவும்.
லெமன் – ஜிஞ்சர் டீ
தேவையான பொருட்கள்
தண்ணீர் – 1/2 லிட்டர்
எலுமிச்சம் பழம் – 5
சீனி – 125 கிராம்
இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம் தோல் – சிறிது
டீத்தூள் – 2 டீஸ்பூன்
செய்முறை
தண்ணீரில் சீனி, எலுமிச்சம் தோல் போட்டு கொதிக்க விடவும். தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சியை சீனி சிரப்பில் சேர்க்கவும். சீனி சிரப் ஆறியதும் வடிகட்டி அதில் தேன், எலுமிச்சம் ஜுஸ் கலந்து பாட்டிலில் ஊற்றி வைக்கவும். 2 ஸ்பூன் அளவு டீத்தூள் எடுத்து 1 டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு சிறிது நேரம் கழித்து வடிகட்டி லைம் ஜிஞ்சர் சிரப் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து டீயில் கலந்து ஐஸ் க்யூப்ஸ் போட்டு பரிமாறவும்.
மின்ட் அண்ட் லைம் டீ
தேவையான பொருட்கள்
டீத்தூள் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 11/2 டம்ளர்
புதினா இலை – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம் தோல் – சிறிது
எலுமிச்சம் ஜுஸ் – 2 டீஸ்பூன்
சீனி – தேவையான அளவு
ஐஸ்கட்டி – சிறிது
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் டீத்தூள், புதினா இலை, எலுமிச்சம் தோல் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி ஆறியதும் வடிகட்டி சீனி, எலுமிச்சம் ஜுஸ், ஐஸ்கட்டி சேர்த்து பரிமாறவும்.
ப்ளாக் டீ
தேவையான பொருட்கள்
டீத்தூள் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
சீனி – தேவையான அளவு
செய்முறை
எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பரிமாறவும். சூடாக வேண்டுமென்றால் சூடாகவும், இல்லையென்றால் ஐஸ்கட்டிகள் போட்டு ஜில்லென்று பரிமாறவும்.
உணவு நலம் ஜனவரி 2011
டீ வகைகள், இந்தியன் மசாலா டீ, செய்முறை, டீத்தூள், சீனி, டீ மசாலா, ஏலக்காய் பொடி, துளசி டீ, செய்முறை, துளசி இலை, டீத்தூள், சீனி, ஐஸ்ட், மின்ட் டீ, புதினா இலை, டீத்தூள், சீனி, எலுமிச்சம் ஜுஸ், ஐஸ்கட்டி,
மசாலா டீ, செய்முறை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, பட்டை, சோம்பு, டீத்தூள், ஏலக்காய் டீ, செய்முறை, ஏலக்காய், டீத்தூள், சீனி, பால், ஜிஞ்சர் டீ, செய்முறை,
டீத்தூள், பால், சீனி, துருவிய இஞ்சி, டீ மசாலா, காஷ்மீரி சாய், செய்முறை,
கிரீன் டீ, கிராம்பு, பட்டை ஏலக்காய், ஃப்ரூட் டீ, செய்முறை, சீனி, பழங்கள், எலுமிச்சம் ஜுஸ், ஐஸ்கட்டி, காஷ்மீரி டீ, செய்முறை, பிஸ்தா, உப்பு, ஏலக்காய் விதை, சோடா உப்பு, டீத்தூள், லெமன், ஜிஞ்சர் டீ, செய்முறை, சீனி, எலுமிச்சம் தோல், இஞ்சி, தேன், எலுமிச்சம் ஜுஸ், மின்ட் அண்ட் லைம் டீ, செய்முறை,
டீத்தூள், புதினா இலை, எலுமிச்சம் தோல், சீனி, ஐஸ்கட்டி, ப்ளாக் டீ, செய்முறை, டீத்தூள், தண்ணீர், சீனி,