எவ்வகை சுவை

Spread the love

இதமான உணவு புருஷ வளர்ச்சிக்கு காரணம். இதமற்ற உணவு நோய்க்கு காரணம் – ஆத்ரேயர்.

நம்மில் பலர் வாழ்வதற்காக உண்கிறோம். சிலர் உண்பதற்காக வாழ்கின்றனர். எப்படியிருந்தாலும் வயிற்றை நிரப்பவும், பசியை போக்கவும் உணவை உண்டே ஆக வேண்டும். அந்த உணவு சுவையாக இருந்தால் நல்லது.

சுவைகளை ஆயுர்வேதம் ரசம் என்கிறது. ஆறு சுவைகளை விவரிக்கிறது. இந்த ரசங்கள் நீரில் அடிப்படையில் அமைந்தவை என்றும், உலகில் உணவுப் பதார்த்தங்கள் தோன்றிய போதே இச்சுவைகளுடன் தோன்றின என்கிறது ஆயுர்வேதம். இந்த சுவைகளை உணர்வது நாக்கு. இந்த ஆறு சுவைகள்.

இனிப்பு (மதுரம்)

புளிப்பு (அம்லா)

உப்பு (லவணா)

உரைப்பு (காட்டு)

கசப்பு (திக்தா)

துவர்ப்பு (கஷாயா)

இனிப்பு– பூமி, நீர் – இந்த இரண்டு மகா பூதங்களடங்கியது இனிப்புச் சுவை. இனிப்புச் சுவை உள்ளவை – அரிசி, பருப்பு, வெல்லம், சர்க்கரை, பால், தேன், கிழங்குகள், முட்டைகள், மாம்பழம், வாழைப்பழம், நெய் போன்றவை. கபதோஷ கோளாறுகளில் இனிப்பை தவிர்க்க வேண்டும். இனிப்பு வாயுவை தணிக்கும். கபத்தை வளர்க்கும்.

புளிப்பு– இந்த சுவை பூமி, நெருப்பு பூதங்களால் ஆனது. வாதத்தை சாந்தப்படுத்தி, கபத்தையும், பித்தத்தையும் அதிகரிக்கும். எலுமிச்சை, தக்காளி, புளி, நெல்லிக்காய், சாத்துக்குடி, ஆரஞ்ச் பழ வகைககள், தயிர், மாங்காய் இவை புளிப்பு சுவைக்கு உதாரணங்கள்.

உப்பு– இந்த சுவை பித்தத்தையும், கபத்தையும் வளர்க்கும். நெருப்பு, நீர் பூதங்களால் ஆனது. உதாரணங்கள் – அப்பளம், ஊறுகாய்.

உரைப்பு– இந்த காரச்சுவை வாயுவும் நெருப்பும் சேர்ந்த கலவை. வாதத்தையும் பித்தத்தையும் அதிகரித்து, கபத்தை கட்டும். மிளகாய், மிளகு, இஞ்சி, பூண்டு, வெங்காயம் இவை இந்தச் சுவைக்கு உதாரணங்கள்.

கசப்பு– ஆகாயமும், வாயுவும் கலந்த சுவை. வாயுவை தூண்டி, கப பித்தத்தை குறைக்கும். பாகற்காய், வெந்தயம், மஞ்சள், மசாலாக்கள், பசலைக்கீரை – இவை இந்த சுவைக்கு உதாரணங்கள்.

துவர்ப்பு– பூமியும், வாயுவும் இணைந்த சுவை. பித்தத்தையும், கபத்தையும் குறைக்கும். இந்த சுவையுள்ள உணவுகள் – பருப்புகள், தேயிலை, முட்டைகோஸ், காலிப்ளவர் போன்றவை.

உணவு நலம் நவம்பர் 2011

எவ்வகை சுவை, இனிப்பு வாயுவை தணிக்கும், புளிப்பு சுவைக்கு உதாரணங்கள்,

பூமியும், வாயுவும் இணைந்த சுவை,


Spread the love