மோரிலும் இத்தனை வகைகளா?

Spread the love

பாலிலிருந்து தயிரும், தயிரிலிருந்து வெண்ணெய், நெய், மோர் எல்லாம் தயாரிப்போம். தெரியும். ஆனால், மோரில் ஐந்து வகை உண்டு. தெரியுமா? அவை :

·     தயிரில் தண்ணீர் ஊற்றாமல் அப்படியே சிலுப்பி வைப்பது ஒருவகை. இந்த மோருக்கு பெயர் & கோல மோர்.

·     தயிரின் மேற்புறத்தில் கட்டும் ஆடையை எடுத்துவிட்டு, மீதியைக் கடைந்து மோராக்குவது இன்னொரு வகை.இதற்குப் பெயர் & மதித மோர்.

·     தயிரில் நாலில் ஒரு பங்குத் தண்ணீரைக் கலந்து சிலுப்பி வைப்பது, மற்றொரு வகை, இதற்குப் பெயர் & தக்ர மோர்.

·     தயிரில் நிறையத் தண்ணீரை ஊற்றித்தயாரிப்பது, இன்னொரு வகை, இதற்குப் பெயர் & உதச்வித் மோர்.

·     தயிரை கடைந்து வெண்ணெய்யை எடுத்துவிட்டுத் தண்ணீரைக் கலந்து கடைந்து வைப்பது ஐந்தாவது வகை. இதற்குப் பெயர் & வச்சிகா மோர்.


Spread the love