எலும்பு முறிவதில் இத்தனை விதமா?

Spread the love

சிம்பிள் பிராக்சர் என்றால் என்ன டாக்டர்?

பிராக்சர் (fracture) என்றால் எலும்பு முறிந்து போவது. closed அல்லது simple பிராக்சர் என்றால் எலும்பு உடலுக்குள் முறிந்திருந்தாலும் அது சருமத்திற்கு வெளியே தெரியாதிருப்பது. இந்த எலும்பு முறிவு முழுமையாகவோ (completely) அல்லது அரை குறையாகவோ (Partiallt) இருக்கலாம்.

எலும்பு முறிவில் இது தவிர வேறு என்னென்ன வகைகள் இருக்கின்றன டாக்டர்?”

ஓப்பன் அல்லது காம்பவுண்டு பிராக்சர், அதாவது இதில் உடைந்த எலும்பின் முனைகள், சில்லுகள் சருமத்திற்கு வெளியே தெரிவதாகும். இது தவிர கம்மினூட்டட் பிராக்சர் (comminuted fracture) என்று ஒருவகை உண்டு. இதில் எலும்பு இரண்டிற்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தோ அல்லது எலும்பு நொறுங்கியோ அல்லது நசுங்கியோ போவதாகும். மேலும் கம்ப்ரஷன் மற்றும் கிரீன்ஷ்டிக் பிராக்சர் என்று இருவகை உண்டு. தலைகுப்புற விழுகின்ற போது முள்ளியங்களால் அடுக்கப்பட்ட முதுகெலும்பு உடைந்து போவது கம்ப்ரஷன் பிராக்சர். சிறு குழந்தைகளுக்கு ஏற்படுவது போல் எலும்பு இரண்டாக ஒடியாமல் முருங்கைக்காய் மடங்குவது போல் ஆவது கிரீன் ஸ்டிக் பிராக்சர் அல்லது ட்ரம்ஸ்டிக் பிராக்சர்.

நல்ல வேளை என் பாட்டிக்கு ஏற்பட்டிருப்பது சிம்பிள் பிராக்சர்தான், டாக்டர். காம்பவுண்டு அல்லது கம்மினூட்டட் பிராக்சர் என்றால் ஆபத்து மிகுந்ததா?

எல்லா காம்பவுண்டு பிராக்சரும் ஆபத்து மிகுந்தது என்று கூற முடியாது. ஒரு எலும்பில் சின்னச் சின்ன முறிவாக இரண்டு இடத்தில் ஏற்படுவதைக் காட்டிலும் பெரிதாக ஒரு இடத்தில் முறிந்து போனால் கஷ்டம்தான். அதேபோல எலும்பு மிகுதியும் சிதைந்து போகாத காம்பவுண்டு பிராக்சரைக் காட்டிலும் எலும்பு நொருங்கியோ, சிதைந்தோ போனால் சிம்பிள் பிராக்சர் ஆபத்தானது.

எலும்பு முறிவு எப்படி ஏற்படுகிறது?

பொதுவாக எலும்பு முறிவது கீழே விழுவது. காயங்கள் ஏற்படுவது போன்றவற்றாலும், திரும்பத் திரும்ப ஒரு எலும்பு பாதிப்புறுவதாலும் அன்றிச் சில வகை நோயினால் வலுவிழந்து போவதாலும் ஏற்படக்கூடும்.

என் பாட்டி ஒரு வாரத்திற்கு முன்பு குளியலறையில் வழுக்கி விழுந்து விட்டாள். அப்போது வலி ஏதும் இல்லை,” 2 நாள்கள் கழித்துப் பிராக்சர் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இது போல் சிலருக்கு நேரலாம். எலும்பு உடைந்து போனாலும் அப்போதைக்கு வலி ஏதும் தோன்றாதிருக்கலாம். உடைந்து போன உறுப்பை நோயாளியால் பயன்படுத்தவும் கூடும். நாளடைவில் வேதனையும், உறுப்புக் கோணலும் ஏற்படலாம்”.

எலும்பு முறிவின் உணர்குறிகள் என்னென்ன டாக்டர்?

வலி, வீக்கம், உருச்சிதைவு இவை மூன்றும்தான் வெளிப்படையான உணர்குறிகள்.

எலும்பு முறிந்தால் படக் என்று ஒலி கேட்குமா?”

அப்படி எதுவும் இல்லை

“எலும்பு முறிவு ஏற்பட்டால் அதை உடனே சரிசெய்ய வேண்டுமா?”

ஆம் எவ்வளவு விரைவில் செய்கிறோமோ அவ்வளவு நல்லது. ஆனால் சில வேளைகளில் காலம் தாழ்த்திச் செய்வதும் உண்டு. நோயாளி மிகுந்த காயத்துடனோ அல்லாமல் உடல் நலம் குன்றியோ இருந்தால் காலம் தாழ்த்துவது உண்டு”.

முறிந்த எலும்பை எங்கு சரிசெய்வது.?

இதற்காக நுடவைத்தியர் எவரிடமும் செல்ல வேண்டியதில்லை. சிம்பிள் பிராக்சராக இருந்தால் டாக்டருடைய கிளினிக்கிலேயே சரி செய்து விடலாம். பெரிய முறிவு என்றால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

எலும்பு முறிவு மருத்துவம் எவ்வாறு செய்யப்படுகிறது?

முதல் வகை குளோஸ்டு ரிடக்ஷன்” (Closed Reduction) எனப்படும். இதில் வெளிப்புறத்திலிருந்தே ஒடிந்த எலும்பை நேராக்கி உள்ளுக்குள் ஒன்று சேர வைப்பது, இதற்கு ஆபரேஷன் தேவையில்லை. இரண்டாம் வகை அறுவை சிகிச்சை. எலும்பு முறிந்த இடத்தில் தசையைக் கீறித் திறந்து எலும்பைச் சீர் செய்து ஒன்று சேர வைப்பது”.

ஒடிந்து ஒன்று சேர்க்கப்பட்ட எலும்புகள் எவ்வாறு இணைக்கப்படுகின்றன?

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு பிளாஸ்டர் போடுவதன் மூலம் அசையாமல் இணைக்கப்படுகின்றன.

ஏதோ தகடு, ஆணி எல்லாம் வைத்து எலும்புகள் விலகாமல் இருக்கும் படி ஸ்குரு செய்வார்கள் என்று சிலர் கூறுகிறார்களே?

ஆமாம் உண்மைதான். இது தவிரத் தற்போது எலும்புகளை விலகாமல் இணைப்பதற்கென்று சிலவகை அட்ஹெஸிவ் பேஸ்ட்டுகளும் வந்திருக்கின்றன. சில நேரங்களில் (bone graft) என்னும் ஒட்டவைப்பும் நடக்கிறது.

கொஞ்ச நாட்களுக்கு முன் என் அத்தைக்கு தோள்பட்டையில் பிராக்சர் ஏற்பட்ட போது அதுபோல் எதுவும் செய்யவில்லையே?.”

தோள்பட்டை, காலிலுள்ள பிபுலா (Fibula) எலும்பு போன்றவை முறியும்போது, தானே சரியாகும்படி விட்டுவிடப் பட்டு விடுகின்றன. அவைகளைச் சூழ்ந்திருக்கும் தசைகளே அவைகளை கட்டுக்குள் நிறுத்திவிடும்.

விலங்குகளுடைய எலும்புகளை வைக்கிறதாகச் சொல்கிறார்களே, அது உண்மையா?.

ஆம். அதை ஹெட்ரோஜீனஸ் கிராப்ட் (Heterogenous graft) என்பார்கள்.

உலோகத் தகடுகள் வைப்பதானால் என்ன தகடுகள் வைப்பார்கள் டாக்டர்?.”

ஸ்டெயின்லஸ் ஸ்டீல், இரும்பு அலாய், கோபால்ட், மாலிப்டினம், நிக்கல் போன்றவற்றினால் ஆன தகடுகள் வைப்பார்கள்”.

“இவை வைத்தாலும் பிளாஸ்டர் கட்டுப் போட வேண்டுமா?

ஆம், போட வேண்டும், இல்லா விட்டால் தகடுகள் வளைந்தும் உடைந்தும் போகக்கூடும்.

ஒருவர் கீழே விழுந்து விட்டார். எலும்பு முறிவு ஏற்பட்டிருக்குமென நாம் சந்தேகப்படுகிறோம். அப்போது என்ன செய்ய வேண்டும்,”

உடைந்த உறுப்பை ஆடாமல் வைத்துக் கொள்ள வேண்டும். எலும்பு தோலைத் துளைத்து வெளிவந்திருக்குமானால் அங்கு இரத்தம் வருமானால் ஒரு துணியை வைத்துச் சிறிது அழுத்திப்பிடித்து இரத்தம் வருவதைத் தடை செய்ய வேண்டும்.

பிளாஸ்டர் எவ்வளவு நாள் இருக்க வேண்டும்,?

குறைந்தது ஆறு வாரங்களாவது இருக்க வேண்டும். இயன்றவரை தண்ணீர் படாமல் வைத்திருக்க வேண்டும். தேவைப்பட்டால் பிளாஸ்டர் பேண்டேஜை மாற்றிக் கொள்ளலாம்,”


Spread the love