பல வீடுகளில் குழந்தைகள் பெரியவர்களைத் தொல்லை செய்கின்றன, அவர்களை வேலை செய்ய விட மறுக்கின்றன என்பதற்காக டி.வி.யை ஆன் செய்து குழந்தைகளை பார்க்க செய்கின்றனர். இது முற்றிலும் தவறு என ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு தனிமையில் டி.வி. பார்க்கும் குழந்தைகள் மன நிலையில் மாற்றம் ஏற்படுகின்றது எனவும், அத்தகைய குழந்தைகள் சமூக நலக் கேடுகளை செய்ய துணிந்து விடுகின்றன என்பதும், பிற மனிதர்களுடனும், குழந்தைகளுடனும் அவை பழகுவதற்கு விரும்பவில்லை எனவும், வன்முறையில் ஈடுபடுகின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளது.