மஞ்சள் பொடி

Spread the love

மஞ்சள் பொடி தயாரிப்பது மிக எளிது. மஞ்சள் கிழங்குகளை வாங்கி சுத்தம் செய்து அதனை ரைஸ் மில்லில் கொடுத்து அரைத்து சலித்து காற்றுப்புகாத பாட்டில்களில் அடைத்து வைத்துக்கொல்வது எளிய முறை. நயமான மஞ்சள் பொடி வேண்டுமானால், மஞ்சள் கிழங்குகளை வாங்கி அதனை சுத்தம் செய்து சிறு சிறு வில்லைகளாக வெட்டிக்கொள்ளவேண்டும். பின்னர் அதனை போதுமான அளவு தண்ணீரில் போட்டு அடுப்பில் வைத்து பாதி வேகவைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். அதன் பின்னர் அந்த தண்ணீரை வடித்து விட்டு கிழங்குகளை நன்கு வெயிலில் உலர்த்தி நன்கு சருகு போல காய்ந்த்தும் ரைஸ் மில்லில் கொடுத்து அரைத்து சலித்து வைத்துக் கொள்ளவேண்டும்.

மஞ்சள் போடியைப்பொறுத்தவரை ஏதாவது ஒரு முறையில் நாம் வீடுகளில் அரைத்து வைத்துக்கொள்வது தான் நல்லது, ஏனெனில் மஞ்சள் பொடியில் அதிக அளவு லேட் எனும் காரீயம் நிரத்துக்காகவும் விலையை குறைத்து, எடையை கூட்டுவதற்காகவும் கலப்படம் செயட்டப்படுகிறது. காரீயம் புற்று நோயை விளைவிக்கக்கூடியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மஞ்சள் பொடி நன்மைகள்

கெட்ட கொழுப்புக்களைக் கட்டுப்படுத்தும் எதிர் பொருட்கள் நார்ச் சத்துக்கள் அதிகமாக உள்ல இதில் நியாசின், ரிபோபிளவின். பைரிடாக்சின் உள்ளிட்ட பல முக்கிய வேதிப் பொருட்கள் மஞ்சளில் அடங்கி உள்ளன.

இதில் கர்குமின்  அடர்த்தியான ஆரஞ்சு நிறம் கொண்ட வேதிப் பொருள் உள்ளது, இது புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது.

சளியினால் தொண்டை அடைப்பு ஏற்பட்டால் தேனுடன் மஞ்சள் தூள் கலந்துகாலையும் மாலையும் இரண்டு வேளை சாப்பிட்டால் சளி அடைப்பு சரியாகி விடும்.

இருமலை நீக்க நெய்யுடன் மஞ்சள் தூளைக் கலந்து பருகலாம்

சளித் தொல்லையில் இருந்து விடுபட நன்றாக காச்சிய பாலில் மஞ்சள் தூள் கலந்து சா[ப்பிடலாம்.

தண்ணீரை இளம் சூடாக்கி அதில் மஞ்சள் தூள் சிறிது உப்புக் கலந்து மூன்று வேளை கொப்பளித்து வந்தால் முரசு கரைதல் குணமாகும்.

மஞ்சள் தூளுடன் உப்பும் எலுமிச்சை சாறும் சேர்த்துப் பூசினால் புண், சுளுக்,கு, உரசல் காயங்கள்,மூட்டு உளைச்சலென்பவை குணமாகும்.

உடலில் ஏதாவது பாகங்களில் வீக்கம் ஏற்பட்டால் மஞ்சள் தூளையும் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து வீக்கத்தில் தடவினால் குணமாகி விடும்.

மஞ்சள் தூளுடன் எலுமிச்சை சாறு கலந்து அம்மை நோயினால் ஏற்பட்டதழும்புகளில் தடவினால் செம் புள்ளிகள் மறையும்.

சருமத்தில் ஏற்படும் அரிப்பு தேமல் போன்றவற்றிற்கு மஞ்சளுடன் வேப்பிலை கொழுந்து சேர்த்து அரைத்துப் பூசி வந்தால் சருமத்தில் உள்ள நோய்கள் குணமாகும்.

பெருங்காய தூளையும் மஞ்சள் தூளையும் நீரில் கலந்து கொதிக்க வைத்து வேது பிடித்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும்

புதிதாகப் பறிக்கப்பட்ட மஞ்சளில் விட்டமின் சி உள்ளது.

மஞ்சளில் பொட்டாசியம் இருப்பதினால் ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பைக் கட்டுப்படுத்தும். தன்மை கொண்டது.

மஞ்சளில் தாதுப் பொருட்களான மாங்கனிஸ்,பொட்டாசியம், இரும்பு, கல்சியம். துத்தநாகம். தாமிரம், மெக்னீசியம், போன்றவை அடங்கியுள்ளன.

மூக்கடைப்பு ஏற்பட்டால் மஞ்சளைச் சுட்டு அதன் புகையை நுகர்ந்தால் மூக்கடைப்பு குணமாக்கும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love