துளசி, மஞ்சள் என இது இரண்டிற்கும் சம்மந்தமே இல்லையே என நினைக்கிறீர்களா?
ஆனால் இதன் தன்மையே வேறமாதிரிங்க….
அச்… என தும்புவதில் இருந்து ஐயோ என்று சத்தமிட வைக்கின்ற இடுப்புவலி வரைக்கும் அனைவரும் மருத்துவமனையை தேடி தான் செல்கிறார்கள். ஆனால் கொஞ்சம் கஷ்டப்படாமல் இயற்கை மருத்துவத்தை கைக்கொண்டால் அதிகமான மருந்து, மாத்திரை செலவை தவிர்க்கலாம்.முதலாவது துளசி நீரில் மஞ்சள் கலந்து குடித்தால் என்னென்ன நன்மைகள் இருக்கின்றது என பார்க்கலாம்.
இந்த தண்ணீரை குடிப்பதினால் சிறுநீரக பாதையில் இருக்ககூடிய நச்சுகளையும், சிறுநீரகத்தில் இருக்கும் டாக்ஸின்களையும் சுலபமாக வெளியேற்றலாம். இதனால் ஆஸ்துமா பிரச்சனைகளிருந்து விடுபட்டு, சீரான, தடையில்லாத சுவாசத்தை பெற முடியும்.துளசி நீரில் மஞ்சள் கலந்து அடிக்கடி குடித்து வருகிறார்கள் என்றால்?இதில் இருக்கும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள், தற்போது அனைவரையும் அச்சுறுத்தும் அனைத்து விதமான புற்று நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும். வாய் புண்ணாக இருந்தாலும், வயிற்று புண்ணாக இருந்தாலும் எல்லா வித அல்சரையும் இந்த பானத்தில் இருக்கும் மருத்துவ குணம் சரி செய்துவிடும்.
எந்த வேலையையும் நிம்மதியாக செய்யமுடியாத இரண்டு விஷயம், ஒன்று மலச்சிக்கல், இரண்டாவது அசிடிட்டி. இவ்வித பாதிப்பு உள்ளவர்கள், இந்த தண்ணீரை குடித்து வரலாம். இது குடலியக்கத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை குணமாக்கும். வயிற்றில் உண்டாகும் அமிலத்தின் வீரியத்தை குறைத்து அசிடிட்டியையும் குறைக்கிறது. அதுமட்டுமல்லாமல் சைனஸ் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலியை முற்றிலும் குணமாக்கும்.அதிகபடியான கொலஸ்ட்ராலால் அவதிபடுகிறவர்கள் காலையில் எழுந்ததும் துளசி நீரில் மஞ்சள் கலந்து குடித்து வந்தால் கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து விடும். இந்த பானத்தை தயாரிப்பது மிகவும் சுலபம். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதில் சிறிதளவு துளசி இலை, மஞ்சள் தூள் சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கிவிடவும். சுகாதார பானம் தயார் !.