மஞ்சள்

Spread the love

இதில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மாங்கனிசு, துத்த நாகம், மெக்னீசியம், தாமிரம் போன்ற தாது பொருட்கள் உள்ளன. இதில் உள்ள இரும்பு சத்தானது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

மஞ்சளில் கர்குமின் என்ற வேதிப் பொருள் உள்ளது. இது அடர்த்தியான ஆரஞ்சு நிறத்தில் உள்ளது. இந்த கர்குமின்தான் புற்றுநோயை அழிக்கும் தன்மையுடையது.

பைரிடாக்சின், சோலைன், நியாசின் போன்ற பல முக்கிய பொருட்களில் மஞ்சள் உள்ளது. 100 கிராம் மஞ்சளில் 1.80 மில்லி கிராம் பைரிடாக்சின் உள்ளது.

வலி நிவாரணியாகவும், கிருமிநாசினியாகவும், புற்றுநோயை கட்டுப்படுத்தும் வலிமையுடையதாகவும் இருக்கும். இதில் உள்ள பொட்டாசியம் செல் திரவங்களில் முக்கிய அங்கம் வகிக்கிறது. மஞ்சளில் கொழுப்பு கிடையாது. இதில் கெட்ட கொழுப்புகளை கட்டுப்படுத்தும் எதிர் பொருட்கள், நார் சத்துக்கள் உள்ளன.

புதிதாக பறிக்கப்பட்ட மஞ்சளில் வைட்டமின் சி, உள்ளது. தண்ணீரில் கரையக் கூடிய வைட்டமின் சி, கிருமிகளைஅழிக்க வல்லது. பசியை தூண்டுவதோடு, செறிமானத்திற்கு உதவும் மருத்துவ குணம் கொண்டது.

வாசனை திரவியமாகவும் பயன்படுகிறது.

பழச்சாறு போன்றவற்றிலும் மஞ்சள் சேர்க்கப்படுகின்றன.

பி. சாந்தி

இராசிபுரம்


Spread the love