மஞ்சளின் மகத்துவம்

Spread the love

குர்குமின்  

சமையலிலும், இந்திய மருத்துவத்திலும் தவிர்க்க முடியாத ஒரு பொருள் மஞ்சள் ஆகும். புற்றுநோயினை எதிர்க்கும் ஒரே ஒரு மூலிகை மஞ்சள் என்று கூறலாம். இதற்கு காரணம் மஞ்சளில் உள்ள குர்குமின்  என்ற வேதிப்பொருள் தான். புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாக இருப்பது என்றவென்று ஆராய்ந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதது, கலப்படமான உணவுப் பொருட்கள், நவநாகரிகம் உணவுப்பழக்க வழக்கம், நாம் உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, அருந்தும் தண்ணீர் என்று கூறலாம். புற்றுநோயை தோற்றுவிக்கும் முக்கிய காரணம் பிரிராடிக்கல், இது உடல் செல்களின் ஆற்றலை உருவாக்கச்செய்யும், ஒரு உடல் நிகழ்வு. பிரிராடிக்கல் காரணமாக மனிதனுக்கு 80 வகையான நோய்கள் ஏற்படுகின்றது. இதன் தாக்குதல்களால், செல் கருவானது சிதைக்கப்பட்டு மரபு அணுக்களின் இயல்புத் தன்மை பாதிக்கப்பட்டு, தவறான செயல்கள் நடைபெற்று  செல்கள் என உருமாற்றம் பெறுகின்றன. இவை உடலில் காணப்படும் ஆரோக்கியமான செல்களிலும் பரவி புற்றுநோயினை உறுதியாக தோற்றுவித்துவிடும். மேற்கூறிய ஃப்ரிராடிக்கல்களை கட்டுப்படுத்த மஞ்சளில் காணப்படும் ஆன்டி ஆக்சிடன்ட்  பொருட்களில் முதன்மையானது குர்குமினய்டு எனப்படும். குர்குமினய்டுகளில் மிகவும் ஆற்றல் கொண்ட ஆன்டி ஆக்சிடன்ட்  குர்குமின் எனப்படும்.

குர்குமின், வைட்டைமின் C,டி போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்களுக்கு நிகரான ஆன்டி ஆக்சிடன்ட்  பண்புகளை கொண்டுள்ளது. நீரிழிவு, புற்றுநோய், மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற பல நோய்கள் தோன்றுவதற்கு உடல் அழற்சிகளே காரணம். இந்த அழற்சியை உருவாக்க கூடியது என்சைம்கள் மற்றும் மூலக்கூறுகளே, இவற்றின் அளவுகளைக் குறைத்து குர்குமின் அழற்சியை கட்டுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகுந்த உதவியாக இருக்கும் செல்கள் H மற்றும் டி செல்கள் என்று அழைக்கப்படுகிறது.  உடலில் H செல்கள் குறைவதால், வெள்ளை இரத்த செல் புற்றுநோய்,  கருப்பை புற்று தோன்றுகின்றது. உடலில் டி செல்கள் குறைவதால் இணைப்புத்திசு, மற்றும் நார்த்திசு புற்றுநோய் தோன்றும்.

மேற்கூறிய இரண்டு செல்களும் அதாவது H, டி செல்கள் உருவாகும் செயல் வேகம் பெற்று, மேற்கூறிய இரண்டு வகை நோய் எதிர்ப்பு செல்களும் அதிக அளவில் பெருகி, நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிப்பதால் புற்று செல்களை வேகமாக அழிக்க இயலுகிறது. கல்லீரலில் வந்து சேரும் பல நச்சுப்பொருட்களில், ஒரு சில நச்சுப்பொருட்களில் உள்ள நஞ்சை எடுக்க செய்யும் பொழுது அவை கார்சினோஜன் என்ற நஞ்சாக மாறுகிறது. இது புற்றுநோய் ஏற்படுவதற்கான புற்று செல்களை உருவாக்கவும், புற்று வளர்ச்சியை தூண்டுவதாகவும் உள்ளது. மேற்கூறிய நச்சுப்பொருள் கார்சினோஜன் உருவாகாமல் தடுக்க குர்குமின் உதவுகிறது. குர்குமின் பல புற்றுநோய்களை தடுக்கிறது.             

மார்பக புற்றுநோய்

ஹார்மோன் சார்ந்த அல்லது சாராத மார்பு புற்றுகட்டி செல்கள் இடம் பெயர்ந்து உடலில் பரவுகிறது. புற்று செல்கள் இடம்பெயர்வதை குர்குமின் முற்றிலும் தடுத்து விடுகிறது.

தோல் புற்றுநோய்

புற்று செல்கள் இடம்பெயர்வதால் நுரையீரலில் சென்று பரவுகிறது. இதில் உள்ள இரத்த வட்டு செல்களின் செயல்பாடுகள், ஒரு சில காரணிகளை அதிகரிக்க தூண்டுகிறது. இக்காரணிகள் செயல்படாமல் இருப்பதால், தோல் புற்று செல்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

பெருங்குடல் புற்றுநோய்

உணவில் அதிகளவு மஞ்சள் சேர்த்து கொள்ளப்படும் போது அதிலுள்ள குர்குமின் வேதிப்பொருள்கள் காரணமாக புற்றுநோய் உருவாக, வளர்ச்சி பெற உதவும் மரபனுக்கள் செயல்பட முடியாமல் தடுக்கப்படுகிறது.


Spread the love