துளசி டீ-யின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நலன்கள்….

Spread the love

மாறி வரும் பழக்க வழக்கங்களில் மிகவும் ஆபத்தாக இருப்பது உணவுமுறைதான். அதனால் தான் உணவு கட்டுபாட்டுடன் சேர்த்து ஆயுர்வேத குறிப்புகளையும்எடுப்பது அவசியம். துளசியில் ஏராளமான நன்மைகள் உள்ளது. ஆனால் அதை சரியான முறையில்எடுப்பது அவசியம். துளசி டீ நமது ஆரோக்கியத்திற்கு அதிகளவில் பயனளிக்கின்றது. துளசிகிரீன் டீ, பாக்கெட் செய்து கிடைக்கும் அல்லது துளசி இலைகளை கொதிக்க வைத்தும் டீதயார் செய்து குடிக்கலாம். அதன் பலன்களை பார்க்கலாம்.


துளசி டீ வளர்சிதையை ஊக்குவிக்கும் அதோடு கெட்ட கொழுப்புகளையும்அழிக்கும். இதில் இருக்கும் கேட்டெக்கின்சிஸ் என்ற ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் கொழுப்புஅமிலங்களை அழிக்க கூடியதாக இருக்கின்றது. இதனால் உடல் பருமனை குறைக்கநினைப்பவர்களுக்கு இது நல்ல மருந்து. துளசி டீ நமது உடலில் உயிரியல் செயல்பாடுகளை சீராக்கும்.இதனால் நம்முடைய மன அழுத்தத்தையும் நீக்குவதற்கு உதவியாக இருக்கும். அதோடுநரம்புகளுக்கு புத்துணர்ச்சியை கொடுத்து இரத்த ஓட்டத்தையும் எளிதாக்கும்.


மேலும் இதில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ், விஷத்தன்மையின் செயல்பாட்டைகுறைத்து, இலவச நோய்கிருமிகளிலிருந்து பாதுகாக்கின்றது. இதில் இருக்கும் யூரிக்ஆசிட் சிறுநீரகத்தில் இருக்கும் தொற்றுகளை அழிக்கின்றது. மேலும், துளசி டீ-யில்இருக்கும். வலுவான டீயூரெட்டிக் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாமலும் தடுக்கும்.கேட்டெக்கின்சிஸ் என்று சொல்ல கூடிய பொருள் துளசியில் உள்ளது. இந்தஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் ஆரம்ப கட்டத்திலேயே கேன்சர் செல்களை அழிக்கும்.


மேலும் உடலில் இருக்கும் செல்களின் பாதிப்பில் இருந்தும் காப்பாற்றும்.வயதாகும் போது ஏற்படகூடிய எலும்பு சிதைவில் இருந்து பாதுகாத்து ஓஸ்டியோபோரோசிஸ்(Osteoporosis) பாதிப்பு வருவதில்லை என கூறப்படுகின்றது. துளசி டீ கெட்டகொழுப்புகளை இரத்தத்தில் இருந்து கரைப்பதினால் இதய கோளாறு ஏற்படுவதில்லை எனகூறப்படுகின்றது.

ஆயுர்வேதம்.காம்


Spread the love