மனிதனின் தற்போதைய வாழ்க்கை முறையைக் கணக்கிட்டால் கடினமாக உழைக்கக் கூடாது. உட்கார்ந்த இடத்திலேயே நாம் விரும்பும் எந்தப் பொருளும் கைக்கு கிடைக்க வேண்டும். கடினமாக வேலை பார்த்ததை விட புத்திசாலித்தனமாக வேலை பார்க்க வேண்டும். பிரச்சனைகளே வரக் கூடாது என்று தான் பெரும்பாலான மனிதர்கள் விரும்புகிறார்கள்… ஆனால் நடைமுறையில் அவர்கள் பல துன்பங்களை அடைவது தான் நிஜம். நமது பிரச்சனைகளை சரியாக தீர்க்கும் விதமாக கையாள வேண்டும் எனில் நமது உடலும் உள்ளமும் ஒத்துழைக்க வேண்டும். அதற்கு உடலும், உள்ளமும் முழுத்தகுதி பெறுவதுடன் அன்றாட வேலைகளை ஒரு ஒழுங்கு முறையுடன் நாம் செய்து வர வேண்டும். இதற்கு முறையான மற்றும் கட்டுப்பாடான உணவுப் பழக்க வழக்கம் அவசியமான ஒன்று. உடலளவில் வசதியாக வாழும் வாழ்க்கை மனதளவில் மிகவும் அழுத்தம் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது. மன அழுத்தம், மனச்சோர்வு, உடல் பலகீனம் என்று நோய்களின் வசிப்பிடமாக மனிதன் வாழ்க்கையை கொண்டு சென்றால், அவனுக்கு முதுமையை, முதுமை உணர்வை கொண்டு வந்து விடும். பல நோய்களில் அவன் சிக்கிக் கொள்வான்.
காய கல்பமாகும் திரிபலா
பண்டையக் காலத்திலிருந்தே சிறந்த ஆயுர்வேத மருந்தாக திரிபலா இருந்து வருகிறது. நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் என்று மூன்று முக்கிய மூலிகைகளின் கூட்டுப் பொருளால் உருவாகும் ஒரு மருந்தாகும். ஆயுர்வேத மருத்துவர்களால் உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுகின்றன. சரக சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவர்களின் அமிர்தத்தினைப் போல, எந்த ஒரு வியாதியைம் தீர்க்கும் அற்புத ஆற்றல் கொண்டது.
இளமையைப் பாதுகாக்கும் பலா
வயது ஒன்று கூட தள்ளாட்டமும் தடுமாற்றமும் தரும் முதுமையானது தவிர்க்க இயலாது. எனினும் வயது மூப்பை, சருமச் சுருக்கத்தைத் தள்ளிப் போடலாம். திரிபலா என்பது இளமையைப் பாதுகாக்கும் எனலாம். ஆரோக்கியமான உணவு நமக்கு அடைந்திருந்தால், நோய் எதிப்புச் சக்தி அதிகமாக காணப்படும். நமது உடலில் இயற்கையாகவே அமர்ந்திருக்கும் தடுப்பு வேலிகளை உடைந்து, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்தும் போராடும் ஆன்டிபாடி எனப்படும் நோய் எதிப்புச் சக்திகளை அதிகளவில் உற்பத்தி செய்ய இந்த திரிபலா பயன்படுகின்றது.
செரிமானக் கோளாறை சரி செய்கிறது
உணவுப் பாதையால் மலத்தினை வெளித் தள்ளும் குடல் இயக்கத்தை சரியாக செயல்பட வைக்கிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்கத் தேவைப்படும் பைல் என்னும் திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்க திரிபலா உதவுகிறது. உணவுப் பாதையில் தேவையான கார, அமில நிலையை தேவையான நிலையில் பராமரிக்கவும் உதவுகிறது. செரிமானக் கோளாறை சரி செய்யும் காரணத்தினால் உடலில் நோய்கள் தோன்றும் வாய்ப்பைக் குறைக்கிறது.
மலச்சிக்கலா.. திரிபலா உதவுகிறது
ஆயுர்வேத, சித்த மருத்துவத்தில் மஷனிதனின் மலச்சிக்கல் பிரச்சனை தீர அதிக அளவில் பயன்படுவதும், பரிந்துரைக்கப்படுவதும் திரிபலாதான். திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பானாக இயங்குகிறது. உடலில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் செயல்படுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.
சர்க்கரை நோய்க்குப் பயன்படும் திரிபலா
இரத்தத்தின் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கியமான பங்கை அளிக்கிறது. நமது உடலில் உள்ள கணையத்தினைத் தூண்டி செயல்பட வைத்து இன்சுலினை சுரக்கச் செய்கிறது. கணைத்தில் தான் இன்சுலினைச் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுகள் எனப்படும் சுரப்பிகள் அமைந்துள்ளன. உடலில் குளுகோஸின் அளவை சம நிலையில் வைத்திருப்பதில் இன்சுலின் பெரும் பொறுப்பு வகிக்கிறது. திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதால் சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைபர்கிளைசீமியா எனப்படும் அதிக சர்க்கரை நிலையில், திரிபலாவினை மருந்தாக எடுத்துக் கொள்வது நல்லது.
உடல் பருமனைக் குறைக்கும் திரிபலா
பலாவில் அடங்கியுள்ள மருத்துவப் பண்புகள் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. நமது உடலில் கொழுப்பு படிவதற்கு காரணமாக இருக்கும் அடிபோஸ் செல்களை குறி வைத்து செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. இதன் மூலம் நமது உடல் எடை, பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது. வழக்கமான உடல் பருமன் அளவை விட அதிகமாக உள்ளவர்கள் திரிபலா சூரணத்தை மருந்தாக உட்கொள்வது சிறந்த பயனைத் தரும்.
திரிபலா குணப்படுத்தும் முக்கிய சில உடல் பிரச்சனைகள்
இரத்தத்தில் ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த சிகப்பு அணுக்களின் அளவு குறைந்து விடுவதன் காரணமாக அனிமியா என்று கூறப்படும் இரத்தச்சோகை தோன்றுகிறது. திரிபலாவினை மருந்தாக உட்கொள்ளும் பொழுது இரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டுள்ளதால் சருமம் சார்ந்த நோய்களில் மிகச் சிறப்பாக பயன் தருகிறது. இரத்தத்தினை சுத்திகரிப்பதால், தொற்று நோய்களை தீர்க்கும் குணமும் உள்ளது. வயிற்றில் பூச்சி வளர்வதையும் தடுக்கிறது. வயிற்றிலிருந்து நாடாப் புழுக்கள், வளையப் புழுக்களையும் வெளியேற்றுவதற்கு திரிபலா உதவுகிறது. உடலில் உள்ள பூச்சிகளும், மற்ற கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பராமரிப்பதற்கும் திரிபலா பயன்படுகிறது.
வளர்சிதை மாற்றத்தின் இடையூறுகள் காரணமாக தோன்றும் தலைவலியை குணப்படுத்துகிறது. சுவாசப் பாதையில் உள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்படவும், சைனஸ் நோயைத் தீர்க்கவும் உதவுகிறது. சுவாசப் பாதையில் உள்ள சளியில் பாக்டிரியாக்கள் தொற்றாமலிருக்க உதவுகிறது. புற்று நோய் செல்களில் மைடேடிக் நிலையில், ஸ்டாண்டில் வடிவத் தோற்றம் உண்டாவதைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் புற்றுநோய் செல்களில் டொஸ்டேடிஸ் வளரும் அபாயத்தைக் குறைத்து புற்று நோயை குணப்படுத்தும் திறன் உள்ளதாக மருத்துவ ஆய்வு ஒன்று கூறுகிறது.