மூலிகை உலகில் இருளர்கள்

Spread the love

 இருளர் பழங்குடியின பெண்கள் நல வாழ்வு அமைப்பு (ஐ டி டபிள்யூ. டபிள்யூ. எஸ்) தண்டறையில் 1986 – ம் ஆண்டு துவங்கப்பட்டது. சென்னையில் இருந்து 60 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம் தான் தண்டறை. இந்த அமைப்பு பல்வேறு அமைப்புகளின் நிதி உதவியுடன் வனப்பகுதியை அதிகரிக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில், மிகப் பிரபலமாக அறியப்பட்ட பழங்குடியின சமூகம் இருளர் சமூகம் ஆகும். பாம்பு, எலி, கரையான் பிடித்தல் இவர்களது பரம்பரை பணியாக உள்ளது. இருளர்கள் தங்கள் பகுதியில் உள்ள மருத்துவத் தாவரங்கள் குறித்து, மிக நன்றாக அறிந்துள்ளனர். இந்த மருத்துவ தாவர அறிவு இருளர் பழங்குடியின பெண்கள் நல வாழ்வு அமைப்புக்கு வெகு உதவியாக உள்ளது. இதன் மூலம் இந்த அமைப்பு மூலிகை மருத்துவத் திட்டத்தை துவங்கியுள்ளது.

இதன் முடிவாக, மூலிகைத் தோட்டமும், நர்சரியும் உருவாகி உள்ளன. இந்த மரபு சார்ந்த தோட்டத்தில் 75 தாவர இனங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. இந்தத் தோட்டங்களில் வளரும் தாவரங்கள் உள்ளூர் கிராம மக்களுக்கும், அரசு சாரா நிறுவனங் களுக்கும் நியாயமான விலையில் விற்கப்படுகின்றன. வன வளர்ப்புத் திட்டத்தில் விதை வங்கியும் உருவாக்கப்பட்டுள்ளது.

மூலிகை தாவரங்கள் குறித்து, இருளர்களின் அறிவுத் திறன் என்றைக்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என ஆவணப்படுத்துதல் மற்றும் ஆராய்ச்சியையும் இருளர் பெண்கள் நல வாழ்வு அமைப்பு துவக்கியுள்ளது. மேலும் இந்த அமைப்பு முறை சாரா மற்றும் முதியோர் கல்வித் திட்டத்தையும் துவக்கியுள்ளது. ஆரோக்கியம், சுகாதாரத் தூய்மை, சட்ட உரிமை, மனித உரிமைகள், மது அருந்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்தும் குறிப்பிட்ட திட்டங்களை இந்த அமைப்பு நடத்தி வருகிறது. மேலும் பயிர் விளைச்சல் இல்லாத 9 ஏக்கர் நிலத்தை உற்பத்தி அளிக்கும் பண்ணை நிலமாகவும் இது மாற்றியுள்ளது.

பாதுகாப்பு மற்றும் முறை சாரா தோட்டக்கலை பயிர் வளர்ப்பை கருத்தில் கொண்டு இந்த நிலம் உருவாக்கப்பட்டுள்ளது. இருளர் பெண்கள் நல வாழ்வு அமைப்பால், இருளர்கள் மிகப் பிரகாசமான, மிகச் சிறந்த எதிர்காலத்தை நோக்கி முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.

இருளர்கள் பெரும்பாலும் பெரும்பாலும், மலைப் பிராந்தியமான ஏற்காடு, வள்ளிமலை, பசனக்குடி, ஊட்டிப் பகுதிகளில் வசித்து வருகிறார்கள். வெளிநபர்களுடன் கலந்து வாழ்வதை தவிர்த்து தங்கள் சமூகத்தினரை சார்ந்தே வாழ்க்கை நடத்துகிறார்கள்.

பாம்புக்கடி மற்றும் இதர விஷங்களுக்கும், மருத்துவ மூலிகைகளை, இருளர்கள் தருகிறார்கள் இருளர்கள் பாம்பு விஷம், தங்கள் உடலில் ஏறினாலும் கவலைப்படுவது இல்லை. அவர்கள் விஷத்தை முறிக்கும் மூலிகைளை அறிந்துள்ள துடன், தொடர்ந்தும் சாப்பிட்டு வருகிறார்கள்.

பாம்புக்கடிக்கு பதப்படுத்தப்படாத மூலிகை இலைகளையும் அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இருளர்கள் காட்டுக்குள் அலையும் போது, பாம்புகள் அவர்களை கண்டு ஓடி விடுகின்றன. கிராமங்களில் உள்ள மக்கள் சொல்கிறார்கள்.

இருளர்களை பற்றி ஆராய்ச்சி செய்ய ராபர்ட் வெளிநாட்டுக்காரர் அந்த பழங்குடியின மக்களை சந்தித்தால் அவர்களும் அந்த வெளிநாட்டு நபருக்கு தங்க, காட்டு தழைகள் மற்றும் கட்டைகளால் ஆன ஊஞ்சல் உருவாக்கி அதில் இரவு படுக்க வைத்தனர். அந்த வெளிநாட்டுப் பயணி அபாயகரமான குகைப் பகுதியில், விஷப்பாம்புகள் படம் பிடித்த போது, அவரது இடது கையில் விஷப் பூச்சி கடித்தது. இதனால் ராபர்ட் மூச்சு விடத் திணறினார்.

இந்த நிலையில் பல்வேறு மூலிகைகளை அரைத்து மருந்தாக்கி தந்தனர். 4 நாள் சிகிச்சையில் ராபர்ட் உயிர் பிழைத்தார். உயிர் பறி போகும் வகையில் வாயில் நுரையுடன் போராடிய ராபர்ட்டின் உயிரை மீட்டுத்தந்த இருளர்களின் மூலிகை மருத்துவ சிகிச்சையை மறக்க முடியாது.

தகவல்: ஹெரிடேஜ் அம்ருத் திஸிலிபிஜி


Spread the love