நீர்க் கட்டி நீங்கணுமா….

Spread the love

கர்ப்பப்பையில் கட்டி ஏற்படுவது மிகவும் சாதாரணமான ஒன்று. குழந்தையை கர்ப்பப்பையில் சுமக்கும் காலத்தில் தான் இவ்வகை கட்டிகள் தோன்றுகின்றன. இவ்வாறு தோன்றும் கட்டிகள் பெரிதாக ஆபத்தை ஏற்படுத்துவது இல்லை. இது போன்ற கட்டிகள் பெரிய ஆபத்தை தராவிட்டாலும் அதிக வலியை ஏற்பத்துவதாக இருப்பதால் அறுவை சிகிச்சை செய்வது நல்லது. பொதுவாக கர்ப்பப்பை கட்டிகள் 30 முதல் 40 வயதிலேயே ஏற்படுகின்றன.

அறிகுறிகள்

· மாத விடாய் உதிரப் போக்கு அதிகமாக இருக்கும்.

· மாத விடாய் நாட்கள் அதிகரிப்பது.

· இடுப்பு பகுதியில் வலி அல்லது அழுத்தம், சிறுநீர் அடிக்கடி கழித்தல், கால்வலி இவை அனைத்தும் ஏற்படும்.

· முகப்பரு அதிகமாக வரலாம்.

· உடலில் சில பகுதிகளில் மட்டும் கருமை நிறம் அதிகரித்து காணப்படும்.

எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்

· 14 வயதாகியும் மாதவிலக்கு ஆரம்பிக்காவிட்டால்.

· ஒரு வருடத்தில் எட்டு முறைக்கும் குறைவாக மாதவிடாய் வருகிறது என்றால் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

· மார்பு மற்றும் முகத்தில் முடி வளர்கிறது என்றால் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

· உடல் எடை அதிகமாக இருந்தால் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

· அளவுக்கு அதிகமாக முப்பரு இருந்தால் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

கட்டி குறைய எளிய வழிகள்

· நாம் சாப்பிடும் பொருள், பசியை போக்க கூடியதாக இருக்க வேண்டும். உடல் எடையை பெருக்க வைக்க கூடாது.

· கீரை, நார்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும்.

· வெந்தயம், பூண்டு, சிறிய வெங்காயம், மற்றும் மலைவேம்பு ஆகியவற்றை உண்டு வந்தால் கட்டி படிப்படியாக குறையும்.

· பீட்ரூட் ஜுஸ் அல்லது  அல்லது புதினா ஜுஸ் தினமும் குடிக்கலாம்.

· நாவல் பழக் கொட்டையை காயவைத்து பொடி செய்து சுடு தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் கட்டி குறையும்.

· அசோக பட்டை பொடியை சுடுத் தண்ணீரில் கலந்து காலை, மாலை சாப்பிட்ட பிறகு குடித்து வந்தால் கட்டி குறையும்.

· வேர்க்கடலையை தினமும் சாப்பிட்டு வந்தால் கட்டி குறையும்.

· தினமும் காலையில் எழுந்த உடனே நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்

மைதா, ரவை, பிராய்லர் கோழி முட்டை, எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிப்பது நல்லது. உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத பொருட்களை உண்டு, தினமும் காலையும் மாலையும் உடற்பயிற்சி அல்லது யோகா போன்றவற்றை மேற்கொண்டு வந்தாலே கர்ப்பப்பையில் உள்ள கட்டி குறைந்து விடும். 


Spread the love