மனிதனுக்கு மரணம் இல்லை

Spread the love

மனிதனுக்கு மரணம் ஏற்படுவதற்கு இரண்டு காரணங்கள் தான் உள்ளன என்று அலெக்ஸ் கேரல் என்னும் வெளிநாட்டு உயிரியல் அறிஞர் கூறியுள்ளார். அவர் தான் எழுதிய மனிதன் – புரியாத புதிர்’ என்னும் புத்தகத்தில், ஒரு ஆய்வின் மூலம் மனிதன் மரணம் இல்லாதவன் என்றும் மனிதனுக்கு மரணம் ஏற்படுவதற்குரிய காரணம்

                1. உள் விபத்து

                2. வெளி விபத்து

என்றும் கூறியுள்ளார்.

இவ்விரு விபத்துகளும் மனிதனுக்கு இல்லையென்றால், மரணம் என்பது மனிதனுக்கு அறவே இல்லை என்கிறார். இதற்காக அவர் பரிசோதனை ஒன்றை கோழிக்குஞ்சு ஒன்றின் மூலம் செய்து பார்த்தார்.

“ஒரு கோழிக்குஞ்சின் இதயத்தின் சதைத் துண்டை அறுத்தெடுத்து அதை ஒரு சோதனைக் குழாயில் போட்டார். அச்சதையில் உள்ள செல்களை உயிருடன் இயங்க ஒரு நுண்ஊட்ட திரவத்தை அச்சோதனை குழாய்க்குள் ஊற்றினார். அச்சதையின் செல்களின் கழிவுகள் வெளியேறும் வண்ணம் அதற்குரிய ஒரு திரவத்தையும் அச்சோதனைக் குழாய்க்குள் ஊற்றினார். எனவே, கோழிக்குஞ்சின் இதயத் தசையில் உள்ள செல்கள் உயிருடன் இயங்கவும். கழிவுகள் வெளியேறவும் அதில் திரவங்களை ஊற்றி, ஒரு மைக்ரோஸ்கோப் கண்ணாடி கருவி மூலம் அச்செயல்களின் இயக்கத்தைக் கவனித்தார்.

தொடக்கத்தில் அச்செயல்களின் இயக்கம் எவ்வாறு இருந்ததோ, பல ஆண்டுகள் ஆகியும், அந்தச் செல்களின் இயக்கம் சிறிது கூட குன்றவில்லை. மாறாக எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தொடக்கத்தில் இருந்த இயக்கமே காணப்பட்டது. இதிலிருந்து அவர் ஒரு முடிவுக்கு வந்தார். ஒரு கோழிக்குஞ்சின் செல்லுக்கே உரிய நுண்ணு£ட்டமும், கழிவுகள் வெளியேறவும் வாய்ப்புக் கொடுத்தால், திறமையுடன் குன்றாது செல் இயங்கினால், மனிதனின் செல்,  கோழிக்குஞ்சின் செல்லை விட மிகவும் அளப்பரியது. திறமை வாய்ந்தது. பேராற்றல் உடையது. மிகவும் வலுவானது என்பதால் மனிதனின் செல்களும் திறமையாக இயங்கத் தகுந்த நுண்ணு£ட்டமும், கழிவுகள் வெளியேறுவதற்கும் உரிய வசதி செய்து கொடுத்தால், மனிதனின் செல்லும் சிதையாது. வளர்ச்சி குன்றாது. இறக்காது. மனிதர்களது செல்கள் இறக்காமல் இருந்தால், மனிதனுக்கு மரணம் இல்லை.

மாறாக மனிதனுக்கு மரணம் வந்தால் உயிருக்கு ஒவ்வாத உணவுகளை அவன் உட்கொண்டு உள்விபத்து ஏற்பட்டு மரணம் ஏற்படலாம். அல்லது வெளி விபத்து ஏற்பட்டு மரணம் வரலாம். இரண்டும் இல்லையேல், மனிதனுக்கு மரணமே இல்லை.


Spread the love