என்ன ஷாலுகுட்டி- காலங்கார்த்தால புது யூனிஃபார்மெல்லாம் போட்டுக்கிட்டு எங்க கிளம்பிவிட்டாய்? “முதலுதவி சிகிச்சைக்கான வகுப்பிற்கு போறேன் பாட்டி. “ஆமாம், மிகவும் அவசியமானதுதான்.அதேசமயம், முதலுதவி செய்வதில் பல விஷயங்கள் நம்முடைய பாரம்பரியத்திலேயே இருக்கிறது.“ஓஞ். அந்தக்காலத்து ரெட் கிராசா? கொஞ்சம் விரிவாக எனக்குப் புரியும்படி சொல்லுங்களேன் பாட்டி…
எதெல்லாம் நோயோட அறிகுறி? எது மிகவும் அலட்டிக்க வேண்டாத பிரச்சனை? எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற சில அடிப்படை விஷயங்களை முதலில் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும்.“ஒரு கோப்பை ஓம திரவத்தில் ஒரு ஏப்பத்தோடு போக வேண்டிய மார்புவலி, இருபதாயிரம் ரூபாய் ஆஞ்சியோகிராமில் நிஜமாகவே வந்து நிக்குதே..! இதெல்லாம் நாம் நமது பாரம்பரிய (கை வைத்திய) முதலுதவியை மறந்ததால்தான்”.
“நூற்றுக்கு நூறு உண்மை தான் பாட்டி!
நேற்று நம்ம விஸ்வா குட்டி இருமிக்கிட்டே இருந்தானே அதற்கு ஏதாவது சொல்லுங்க பாட்டி”,
“சளி மற்றும் இருமலுக்குச் சிறந்த முதலுதவி ஆடா தொடா இலை தான். அதிகமாக கசப்பாக இருக்கின்ற இந்தச் செடியின் சாற்றுடன் தேன் கலந்து “சிரப்” செய்து அருந்தலாம்.கொடிய இருமலுக்கும், சளி வர மிகவும் கஷ்டப்படுத்துகிற இரைப்போடு, நீடிச்ச இருமலுக்கும் மிகவும் அற்புதமான மருந்தாகும்.உலர்ந்த இதன் இலைப் பொடியை கஷாயமாக்கி 30 அல்லது 60 மி.லி எடுத்து அதன் கசப்பு போக தேன் கலந்து சாப்பிடலாம்.
சளி இல்லாத மற்ற வறட்டு இருமலுக்கு என்ன செய்யலாம் பாட்டி?
“இயற்கையிலேயே சற்று இனிப்புடன் இருக்கும் அதிமதுரம் வறட்டு இருமலுடன் சேர்த்து வயிற்றுவலியையும் போக்கும் அதனால், அதில் சிறிய துண்டை நாக்கின் அடியில் வைத்து அடக்கினால் வரும் சாற்றை விழுங்கினாலே போதும், வறட்டு இருமல் நீங்கிவிடும். சிலருக்கு வறட்டு இருமலின் காரணமாக அழுத்தம் ஏற்படுவதால் சிறுநீர் சிந்தும் பிரச்சனை கூட இருக்கும் அதற்கும் சிறந்த முதலுதவி இந்த அதிமதுரம் தான்.
“சளியுடன் முகத்தில் நீர் கோர்த்திருந்தால்” என்ன செய்யலாம் பாட்டி?
“தண்ணீரை கொதிக்கவைத்து அதில் நொச்சி இலை, மஞ்சளைப் போட்டு ஆவி பிடிக்கலாம். இரவு தூங்கப் போவதற்கு முன் மஞ்சளுடன், சுக்கை சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போடலாம், காலையில் தலைவலி காணாமல் போய் முகமும் ஃப்ரெஷாயிருக்கும்”.
சரி பாட்டி காய்ச்சல் வந்தால் என்ன செய்யலாம் பாட்டி?
“சாதாரண வைரஸ் காய்ச்சலில் இருந்து டெங்கு, சிக்குன்குனியா வரை எல்லாக் காய்ச்சலுக்கும் சிறந்த மருந்து நிலவேம்புக் கஷயம் தான். நிலவேம்போடு பற்படாகம், மிளகு, விலாமிச்சம் வேர், வெட்டி வேர், பேய்ப்புலன்னு.. இன்னும் ஏழு மூலிகைகளுடன் சேர்த்து செய்த பொடியை கண்ணாடி புட்டியில் போட்டு எப்பவும் அடுப்பங்கரையில் தயாராக வைத்துக்கொள்வது மிக மிக நல்லது மட்டுமில்லை மிகவும் அவசியமானதும் கூட, ஏன் என்றால் இதைப் போல் காய்ச்சல் வந்தால் ஒரு வேளைக்கு 60 மி.லி என்று இரண்டு வேளையாக மூன்று நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குள் வந்த காய்ச்சல் குணமாகும். ஒருவேளை காய்ச்சல் குறையவில்லை என்றாலும், கழுத்திருக்கம், பல் ஈறுகளில் இரத்தம் கசிவது, உடலில் நீர் வற்றி உலர்ந்து போவது, வலிப்பு போன்றவை இருந்தால் உடனடியாக தக்க மருத்துவரிடம் செல்வது மிகவும் நல்லது.
“சில சமயம் வயிறு உப்பி புஸ்னு ஆயிடுதே அதுக்கு என்ன வைத்தியம் செய்யலாம் பாட்டி?
“ஏற்கனவே வீட்டில் தயாராக இருக்கிற அன்னப்பொடி இல்லையென்றால் அஷ்ட சூரணத்தை ஒரு டீஸ்பூன் எடுத்து அதை வெந்நீரில் போட்டு சாப்பிடணும் வயிறு செரிக்காமல், உப்புசமா வயிற்றுப்போக்குடன் இருந்தால் ஓமத்தை வறுத்து கஷாயமாக்கி 30 லிருந்து 60 மி.லி சாப்பிடலாம் இல்லையென்றால் ஓமத்திரவம் இருந்தால் 10 மி.லி எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து அரை கோப்பை அருந்தலாம். அல்லது மோரில் பெருங்காயம் சேர்த்து பருகலாம்.
முதுகில் வாயுப் பிடிப்பும் சேர்ந்திருந்தால் வாய்விடங்கம், சுக்கு, மிளகு சாரணை வேர் சேர்த்து கஷாயமாக்கி இரண்டு வேளைக்கு சாப்பிடலாம்.
அஜீரணத்தால வருகின்ற கிறுகிறுப்புக்கு என்ன செய்யலாம் பாட்டி?
“பித்தம் மற்று வெர்ட்டிகோ எனப்படும் உட்காது பிரச்சனைகள் இவற்றிற்கான சிறந்த முதலுதவியே கரும்புச்சாற்றுடன் சீரகத்தூளை சேர்த்து சாப்பிடுவதுதான் சிறந்த முதலுதவி:.
சரி பாட்டி காலில் ஏற்படும் சிறாய்ப்பிற்கு என்ன வைத்தியம் செய்யலாம் பாட்டி?
“மஞ்சள் தூளை கொஞ்சம் எடுத்து நீரில் கலந்து கெட்டியாக்கி, வெதுவெதுப்பான சூட்டில் பற்று போட்டால் புண்ணும் ஆறும், நோய்க்கிருமிகளும் தாக்காது தெரியுமோ!
“அதுவே கொஞ்சம் வீங்கிவிட்டால் என்ன செய்வது“ ?
நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கின்ற மூசாம்பரத்தை வாங்கி, வெந்நீரில் அரைத்து பற்று போட சரியாகிவிடும்.
சரி, சரி கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகாதே உன் வகுப்பிற்கு நேரமாகவில்லையா??
“அதான் எல்லா விஷயமும் நீங்களே சொல்லிவிட்டீங்களே, வகுப்புக்கு வேறு போகணுமான்னு யோசிக்கிறேன் பாட்டிஞ்.”
“உதைபடுவே.. ஓடு. ஓடு முதலில் நவீன முதலுதவிகள் பற்றி தெரிந்துகொண்டு, அதைப்பற்றி எனக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடு.
மேலும் தெரிந்து கொள்ள…