நமக்குத் தெரியாத நச்சுப் பண்டங்கள்

Spread the love

இன்றைய நாகரிக காலத்தில் நாம் உண்ணும் உணவில் எவ்வளவு உடலுக்கு கேடு விளைவிக்கும். நச்சுத் தன்மையுள்ளது என்று நமக்கத் தெரிவதில்லை. நமக்குப் பிடித்த உணவுகளில், சிறு தீனியில், ஹோட்டலிலிருந்து வாங்கி வரும் பண்டங்களில் எவ்வளவு உப்பு, சர்க்கரை, நன்கு கரைக்கப்பட்ட, பூரிதக்கரைசலான கொழுப்புச் சத்துக்கள், இருக்கின்றனவென்று நமக்குத் தெரிவதில்லை. உதாரணமாக ரெடிமேட் பன்றி இறைச்சியில் அதிக உப்பு உள்ளது. இது கோழிக்கறி டிக்கா மசாலாவிலுள்ளதைவிட அதிகமானது, ஆபத்தானது.

என்னென்ன சாப்பிடலாம்

தண்டூரி அல்லது ப்ரௌன் ரொட்டி அல்லது சப்பாத்தி (கோதுமையில் செய்தது) சாப்பிடவும், சுத்திகரிக்கப்பட்ட மாவில் தயார் செய்தது கெடுதல், ‘நான்’ கூடாது. வெள்ளைவெளேரென்று இருக்கக் கூடிய மாவில் செய்த பண்டங்கள், நன்றாக ஒட்டிக் கொண்டிருப்பவை கெடுதலை விளைவிக்கும். ஹோட்டலில் தயார் செய்யப்பட்ட பராதாக்களை தவிர்க்கவும். அங்கு உபயோகப்படுத்தப்படும் நெய் தரத்தில் உயர்ந்தவையில்லை. கொழுப்பு அதிகமுள்ளதாகும். கருத்த சாக்லெட்கள் ஆன்டிஆக்சிடான்ட்ஸ் அதிக அளவில் உள்ளவை. கொழுப்பும் குறைந்துயிருக்கும். பாலில் செய்யப்பட்ட சாக்லெட்டுகள் பூரிதக்கரைசலான பாலின் கொழுப்பு அதிகம் கொண்டது.

சிறிய பெப்பர் நான் பீட்சாவில் அதிக அளவில் மீனில், வறுவல்களில் இருக்கும் பூரிதக்கரைசல் கொழுப்பைவிட அதிகமுள்ளது.

நாம் உண்ணும் உணவில் இருக்கக் கூடிய உப்பு ( நாள் முழுவதும் சாப்பிடுவதில்) ஒரு டீஸ்பூனுக்கு மேலிருக்கக் கூடாது.

வாங்கும்பொழுது விலைக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. உணவை பழைய தானியங்களிலிருந்து, வாடிப்போன காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கக் கூடாது.

பூரிதக் கரைசலான கொழுப்பு இருந்தால் வாங்கக் கூடாது.

சர்க்கரை குறைவான பொருட்களை உண்ணவும்.

உறையப்பட்ட, பேக் பண்ணப்பட்ட உணவுகளை வாங்கினால் உப்பு, சோடியம் அளவு எவ்வளவு அதிகமாகத் தெரிந்துக் கொண்டு வாங்கவும்.

பிஸ்கட்ஸ், கறி, காக்ரா, மத்ரி, சிப்ஸ், மாரக்ரெய்ன், உறையப்பட்ட உணவுகள், Hydrogenerated கொழுப்பைக் கொண்டுள்ளன. நன்றாக மொறுமொறுவென்று உண்பதற்கு ருசியாகயிருக்கும். ஆனால், அவற்றிலுள்ள அமிலங்கள் ரத்த நாளங்களை இறுகச் செய்யும், ஹார்மோன் உற்பத்தியாவதை தடுக்கும்.

சூமகா 3, 6 போன்றவைகளை உணவில் சேர்க்கவும்.

மார்க்கெட்டில் விற்கப்படும் உணவில் கொழுப்புச் சத்து முற்றிலும் இல்லையென்று பேக்கில் காணப்படும். இது உண்மையாகயிருக்காது. டின்னில் விற்கப்படும் பழங்கள், காய்கறிகள், சிப்ஸ் போன்றவற்றில் அதிக அளவில் சர்க்கரை, உப்பு சேர்ந்திருக்கும். எனவே இவைகளைத் தவிர்க்கவும்.

குறைந்த அளவில் கொழுப்பு சேர்ந்த உணவுயென்று பேக்கில் போடப்பட்டிருக்கும். ஆனால், சர்க்கரை, கொழுப்பு அதிக அளவில் இருக்கும். உங்கள் எடை அதிகரிக்கும்.

பாலடைக் கட்டிகள், பாலடைக்கட்டி தடவிய பண்டங்கள், சாஸ் (Sauce) தடவிய உணவுகள், கொழுப்பு, சோடியம், போன்றவை அதிகமுள்ளதாகும். இவைகள் .

ஆயுர்வேதம் .காம்


Spread the love