இதுதான் ஹெல்தி சூப்… சாயந்தரம் ஒரே ஒரு கிளாஸ்…!

Spread the love

சூப் என்றாலே தயார் செய்வதற்கு மிகவும் எளிமையாக இருக்க வேண்டும். உடலிற்கு நன்மையும் தர வேண்டும் என்று நினைப்போம். அதற்கு சிறந்த உதாரணம் தான் தக்காளி சூப், இதனால் ஊள சதையை குறைக்கவும் முடியும். உடலிற்கு தேவையான புரதம், பொட்டாசியம் மற்றும் நார்சத்துகள் ஆரோக்கியமான தேகத்தை கொடுக்கின்றது. சைவம், அசைவம் ஆகிய இரு பிரிவினருக்கும் இது வர பிரசாதமாகும்.

தக்காளியில் பொதுவாக கலோரியும், கொழுப்பும், குறைவு இது உடம்பில் கொழுப்பு சேர்வதை தடுப்பதோடு, அதிகமான கலோரிகளையும் எரித்துவிடும். அடிகடி சிறு பசி ஏற்பட்டு எதையாவது சாப்பிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு தக்காளி சூப் நல்ல தீர்வாகும்.


இதில் அதிகபடியான நார்சத்தும், நீர்சத்தும் இருப்பதினால் பசியை போக்கவும், வயிற்றை நிரப்பவும் செய்கிறது, தக்காளியில் இருக்கும் லைகோபின், மற்றும் கரோட்டீனாய்டு போன்ற அதிசிறந்த ஆண்டி-ஆக்சிடண்ட் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கின்றது. கொழுப்புகள் இல்லாத தக்காளியின் சிறப்பு என்னவென்றால்?, இதய கோளாறு ஏற்படாமல் பாதுகாத்து, இரத்த நாளங்களை உறுதிபடுத்தும்.

என்ன முயற்சி எடுத்தும், புகை பழக்கத்தை விடமுடியாமல் தவிப்பவர்கள்.`அடிக்கடி தக்காளி சூப் குடித்து வந்தால், புகைபிடிப்பதினால் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம். இதில் இருக்கும் வைட்டமின் கே மற்றும் ஏ ஊட்டச்சத்துகள், கண் பார்வைக்கும், எலும்புகளின் உறுதிக்கும் மிகவும் நல்லது.

ஆயுர்வேதம்.காம்


Spread the love