தக்காளிப் பழத்தில் பாஸ்பரஸ், கால்ஷியம்,போன்றவை அதிகமாகவும், இரும்புச்சத்து,வைட்டமின்&பி போன்றவை குறைவாகவும் இருக்கின்றன. மாவுச்சத்து நான்கு சதவிகிதம் தான் உள்ளது. ஆனால், வைட்டமின்&ஏயும் வைட்டமின் c யும் அதிகமாக இருக்கின்றன.
தக்காளிப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் கண்பார்வை சிறப்பாகவும் கூர்மை கொண்டதாகவும் இருக்கும். இரத்தம் சுத்தமாகும். இதில் மாவுச்சத்து குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம். அவர்களுடைய சிறுநீரில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படும்.
உடலின் எந்தப் பகுதியில் எத்தகைய நோய்க் கிருமிகள் இருந்தாலும் அவை வெளியேற்றப்படுகின்றன. சிறுநீர் சிரமமில்லாமல் பிரிகிறது அதன் மூலமாகவே நோய்க் கிருமிகள் வெளியேற்றப்படுகின்றன.
தக்காளிப்பழத்தை அளவோடு சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கோளாறுகள்,வாயுத் தொந்தரவு, அஜீரணம்,மலச்சிக்கல், இரத்த சோகை போன்றவை எளிதில் குணமாகின்றன.
குறிப்பாக, தக்காளியிலுள்ள இரும்புச்சத்து இரத்தத்தால் உடனே உறிஞ்சப்படுவதால் இரத்த சோகை விரைவில் குணமாகிறது.
பசியின்மை, உடல் வெப்பம், இருமல், ரோகம் போன்றவற்றிற்கு நல்ல நிவாரணம் அளிக்கும் சக்தி தக்காளிப்பழத்திற்கு உண்டு.
ஒரு டம்ளர் தக்காளிச் சாற்றுடன் சிறிதளவு தேன் இரண்டு பேரீச்சம்பழம் ஆகியவற்றைச் சேர்த்துச் சாப்பிட்டால் உடலுக்கு அருமையான சத்துணவு கிட்டும். கண்வலி, கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள், சிறுநீரகத்தில் கற்கள் போன்றவற்றைப் போக்கும் தன்மை தக்காளிப் பழத்திற்கு உண்டு.
நீரிழிவு டைப்&2 மனிதர்களுக்கு, சாதாரண மனிதர்களை விட மாரடைப்பு மற்றும் பக்கவாதம் மிக அருகில் இருக்கிறதாம். இதற்கான எளிய தீர்வை ஆஸ்திரேலிய மருத்துவக்குழு கண்டுபிடித்துள்ளது. டைப்&2 பிரச்சனை உள்ள 41 வயது முதல் 82 வயது வரை உள்ள 20 பேர்களைத் தேர்வு செய்து, இவர்களுக்குத் தினமும் ஒரு கோப்பை தக்காளிச் சாறு வழங்கப்பட்டது 21 நாள்களுக்குப் பிறகு இவர்களின் இரத்தத்தில் கட்டி இல்லாமல் 27% அடர்த்தி குறைந்திருந்தது.
இரத்தம் உறைந்தால் மாரடைப்பு அபாயம் வரும். இரத்தம் இப்போது உறையும் நிலையில் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது. தக்காளியில் உள்ள லைகோபென் என்ற பொருளே இரத்தம் உறையாமல் ஓடிக் கொண்டிருக்கச் செய்கிறது என்ற உண்மை கண்டறியப்பட்டது.
திடீர் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றைத் தவிர்க்க நினைக்கும் அனைத்து வயதினரும் தினமும் ஒருகப் தக்காளிச் சாறு அல்லது ஆறு பழங்களை நன்கு கழுவி விட்டு காலை உணவாகச் சாப்பிட்டு வந்தால் போதும். காலை உணவு சாப்பிட வேண்டாம். இது உடல் பருமனைக் குறைப்பதுடன் இதயநோய் அபாயத்தையும் தடுக்கும். ஆப்பிள், திராட்சையை விடச் செலவும் குறைவு. சமைத்த தக்காளியிலும் லைகோபென், சத்து அப்படியே கிடைப்பதால் உங்கள் விருப்பம் போல் தினமும் தக்காளி சாப்பிட்டு மகிழலாம். நீண்ட நாட்களும் வாழலாம்.
உடல் உறுப்புகளைத் தூண்டிச் செயலாற்ற வைக்கும் அதிசய சாறு, தக்காளிச் சாறு என ஆயுர்வேதம் கூறுகிறது. வயிற்றுப்பசியை உண்டு பண்ணும் இருமலையும் தலை கிறுகிறுப்பையும் அகற்றிவிடும்.
எல்லாவற்றிற்கும் மேலாக நீரிழிவு நோயாளிகளும் பருமனானவர்களும் தங்கள் உடல் எடையை குறைத்துக் கொள்ள உதவும் இந்த தக்காளிச் சாறு.
பாரதி.