காதல் ஆப்பிள் தக்காளி!

Spread the love

பால் சேர்க்காமல் பால் கோவா இல்லை என்ற மாதிரி, தக்காளி இல்லாமல் சமையல் இல்லை. அந்த அளவிற்கு தக்காளியின் உதவி நம்ம ஊரு சமையலிற்கு பயன்படுகின்றது….
இந்த தக்காளியின் அறிமுகம் மெக்சிகோ, பொலிவியா, ஈகுவேடார் போன்ற தென் அமெரிக்கா தேசத்தில் தோன்றியுள்ளது என கூறப்படுகின்றது. அங்கே இருந்து சுற்றி இருக்கும் ஐரோப்பிய தேசங்களுக்கு பரவி world wide தக்காளி அறிமுகமாகியுள்ளது…

ஆரம்ப கட்டத்தில் தக்காளிக்கு, தங்க ஆப்பிள், காதல் ஆப்பிள், பெருவியன் ஆப்பிள் என பெயர் இருந்துள்ளது.. இதில் அதிசயம் என்னவென்றால்?   ஐரோப்பாவில் தக்காளி செடியை வெறும் அழகு செடியாக பயிரிட்டு வளர்த்துள்ளனர்… இந்த செடியில் வளரும் தக்காளி பழத்தை விஷம் என்று சொல்லி சாப்பிடாமல் இருந்துள்ளனர். அதற்கு பின் 18 ம் நூற்றாண்டின் முடிவில் தான், தக்காளி சாப்பிடும் பொருளாக வழக்கத்தில் வந்துள்ளது…
இப்போது இந்த தக்காளி மிகவும் பிரபலமாகவும், குறைந்த விலையில் கிடைப்பதனால் இது ஏழைகளின் ஆப்பிளாகவும் இருக்கின்றது.. 

சுவை நிறைந்திருக்கும் இந்த தக்காளியின் முக்கியமான மருத்துவ உபயோகமே விந்து பராமரிப்பான சுக்கிலவலகத்தை பாதுகாக்கின்றது… முக்கியமாக தக்காளி சாப்பிடுவதனால், பிராஸ்ட்டேட் கேன்சர் வராது என்று ஆய்வுகள் சொல்கின்றது.. சிறுநீரில் சர்க்கரை தேங்குவதையும் தக்காளி தடுக்கின்றது.. காரணம் தக்காளியில் குறைந்த அளவு கலோரி இருந்தாலும்,கார்போஹைட்ரேட்டை விட அதிக அளவு தாதுப்பொருட்கள் உள்ளது. இதனால் சிறுநீரை சுத்தம் செய்து, சிறுநீரகத்தை சுத்திகரிக்கின்றது….
கண்பார்வையையும், உடலிற்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிப்பதனால் தக்காளி உதவுகின்றது…அதோடு இருமல், ஜலதோசத்தையும் கட்டுப்படுத்தும். உடலிற்கு வலிமையையும், பலத்தையும் கொடுப்பதனால் இதற்கு காதல் ஆப்பிள் என்று பெயர் உள்ளது…..

தக்காளி விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை சோப்பு தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர்.மற்ற காய்களை விட தக்காளியில் தான், லைகோபின்  அதிகமாக உள்ளது. இதனால் வயிறு, குடல்,நுரையீரல் இதில் ஏற்படக்கூடிய புற்று நோயை தடுக்கின்ற சக்தியா தக்காளி இருக்கின்றது.


Spread the love
error: Content is protected !!